அவுஸ்திரேலியமுரசு

அவுஸ்திரேலியால் இலங்கையர் ஒருவரின் மோசமான செயற்பாடு! பல சிறுமிகள் பாதிப்பு

அவுஸ்திரேலியா – மெல்பேர்ன் நகரில் வாழும் இலங்கையர் ஒருவர் மீது சிறுவர் பாலியல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. சிறு பிள்ளைகள் மற்றும் இளம் பெண்களிடம் தவறான புகைப்படம் பெற்றுக் கொள்வதோடு மேலும் பல புகைப்படங்களை அனுப்புமாறு மிரட்டல் விடுத்ததாகவும் அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சிறுவர்களை தண்டிக்கும் வகையில் அவர்களது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அவர்களது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் குறித்த இலங்கையர் அனுப்பியுள்ளதாக அவுஸ்திரேலிய பொலிஸார் தெரிவித்துள்ளனர். 12 முதல் 14 வயதுடைய சிறுமிகளுக்கு பாலியல் ரீதியாக அச்சுறுத்தல் விடுத்த குற்றச்சாட்டில் 23 ...

Read More »

ஆஸ்திரேலியாவில் உள்ள சீனர்களின் வீடுகளில் திடீர்ச் சோதனைகள் – சீனா கண்டனம்

ஆஸ்திரேலியாவில் உள்ள சீன அரசாங்க ஊடகச் செய்தியாளர்களின் வீடுகளில் திடீர்ச் சோதனைகள் நடத்தப்பட்டது நியாயமில்லாத செயல் என்று சீனா குறைகூறியுள்ளது. ஆஸ்திரேலியாவில் வெளிநாட்டுத் தலையீடு இருக்கிறதா என்பதை விசாரிக்கும் நோக்கில் அவர்களின் வீடுகள் சோதிக்கப்பட்டன. ஆஸ்திரேலியாவின் பாதுகாப்புப் புலனாய்வுத் துறை அதிகாரிகள், சீன நிருபர்கள் நால்வரின் வீடுகளைக் கடந்த ஜூன் மாதம் சோதனையிட்டதாகச் சீன ஊடகங்கள் தெரிவித்தன. விசாரணையை அடுத்து அந்த நால்வரும் ஆஸ்திரேலியாவைவிட்டு வெளியேறினர். மேலும், இரண்டு சீனக் கல்விமான்களின் விசாக்களும் ரத்துசெய்யப்பட்டன. பாதிக்கப்பட்ட சீன நாட்டவர் 6 பேரும் வேவு பார்த்தல், ...

Read More »

திறன்வாய்ந்த வெளிநாட்டினர் ஆஸ்திரேலியாவுக்குள் நுழைய பயண விலக்கு

ஆஸ்திரேலியாவின் முக்கியமான துறைகளில் பணியாற்ற அவசரமாக  தேவைப்படும்  திறன்வாய்ந்த  வெளிநாட்டுத் தொழிலாளர்களை நாட்டிற்குள் அனுமதிக்க  ஆஸ்திரேலிய அரசு திட்டமிட்டுள்ளது. ஆஸ்திரேலியாவின் Priority Migration Skilled Occupation List (PMSOL)  பட்டியலின் கீழ்,  சுகாதாரத்துறை,  இயந்திரம்,  கட்டுமானம்  மற்றும்  தகவல்  தொழில் நுட்பத்துறையில்  உள்ள  திறன் வாய்ந்த வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கு  ஆஸ்திரேலியாவுக்குள்  நுழைய  இதன் மூலம்  முன்னுரிமை அளிக்கப்படுகின்றது. Priority Migration Skilled Occupation List Chief Executive or Managing Director Construction Project Manager Mechanical Engineer General Practitioner Resident Medical Officer Psychiatrist Medical Practitioner nec Midwife Registered Nurse (Aged Care) Registered Nurse (Critical Care and ...

Read More »

ஆஸ்திரேலியாவில் தீக்குளித்த அகதி மனநலம் பாதிக்கபட்டவரா?

ஆஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்பு முகாமில் வைக்கப்பட்டிருந்த ஈரானிய அகதி தீக்குளிப்பதற்கு முன்பு உளவியல் ஆலோசகரை சந்திக்க எழுத்துப்பூர்வமாக அனுமதி கோரியதாக விசாரணையில் அம்பலமாகியுள்ளது. இவரது கோரிக்கை தீக்குளிக்கும் நாள் வரை பரிசீலீக்கப்படவில்லை என்றும் தெரிய வந்துள்ளது. கடந்த 2016ம் ஆண்டு ஏப்ரல் மாதம் Omid Masoumali எனும் 24வயது அகதி, நவுருத்தீவில் செயல்பட்ட ஆஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்பில் பார்வையிட வந்த ஐ.நா. அதிகாரிகளின் முன்னிலையில் தீக்குளித்து உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 57 சதவீத தீக்காயங்களுடன் மீட்கப்பட்ட இவர் முதலில் நவுருத்தீவு மருத்துவமனைக்கு ...

Read More »

ஆஸ்திரேலியா: விக்டோரியா மாநிலத்தில் கிருமித்தொற்றால் நேற்று 59 பேர் மாண்டனர்

ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்தில் கிருமித்தொற்றால் நேற்று 59 பேர் மாண்டனர்; புதிதாக 81 பேருக்கு நோய்த்தொற்று உறுதியானது. ஆஸ்திரேலியாவில் மக்கள் தொகை அளவில் இரண்டாவது பெரிய மாநிலம் விக்டோரியா. மாநிலத் தலைநகர் மெல்பர்னில் ஆறு வார முடக்கம் நடப்பில் உள்ளது. அடுத்த வாரம் அது முடிவுறும். ஆனால் கிருமித்தொற்று உறுதியாவோரின் அன்றாட எண்ணிக்கை அதிகரித்தால், கட்டுப்பாடுகள் மேலும் நீட்டிக்கப்படலாம் என்று அதிகாரிகள் கருத்துரைத்தனர்.

Read More »

ஆஸ்திரேலியர்களை முகநூல்  நிறுவனம் மிரட்டியுள்ளது!

ஆஸ்திரேலியர்கள், தனது தளத்தில் செய்திகளைப் பகிர்ந்துகொள்வதைத் தடை செய்யப்போவதாக முகநூல்  நிறுவனம் மிரட்டியுள்ளது. ஆஸ்திரேலிய அரசாங்கம் பரிந்துரைத்துள்ள புதிய ஊடக சட்டத்தின் தொடர்பில்  முகநூல்  அவ்வாறு தெரிவித்துள்ளது. பரிந்துரைக்கப்பட்டுள்ள புதிய சட்டத்தின்படி, உள்ளூர் செய்தி நிறுவனங்களின் தகவல்களைப் பகிர்ந்து கொள்வதன் மூலம் கிடைக்கும் வருமானத்தில் ஒரு பகுதியை, தொழில்நுட்ப நிறுவனங்கள், ஆஸ்திரேலிய அரசாங்கத்துடன் பகிர்ந்து கொள்ள வேண்டி வரலாம். இணைய விளம்பரங்களின் மூலம் கிடைக்கும் வருமானத்தில் பெரும்பகுதியைத் தொழில்நுட்ப நிறுவனங்களே எடுத்துக்கொள்வதாகக் குற்றஞ்சாட்டப்டுகிறது. இந்நிலையில், ஆஸ்திரேலியா பரிந்துரைத்துள்ள புதிய சட்டத்தின் மீது உலக நாடுகளின் ...

Read More »

சிட்னியில் புதிய நோய்த்தொற்றுச் சம்பவங்கள் – அச்சத்தில் ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில், 11 புதிய கிருமித்தொற்றுச் சம்பவங்கள் பதிவானதைத் தொடர்ந்து மேலும் பலர் பாதிக்கப்பட்டிருக்கலாம் எனும் அச்சம் எழுந்துள்ளது. இந்நிலையில், குவீன்ஸ்லந்து மாநிலத்தில் உள்ள சீர்த்திருத்த நிலையம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. அங்கு பணிபுரியும் ஊழியர் ஒருவருக்குக் கிருமி தொற்றியதைத் தொடர்ந்து அந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. விக்டோரியா மாநிலத்தில் நேற்று 113 சம்பவங்கள் உறுதிசெய்யப்பட்டன. கடந்த மாதத் தொடக்கத்தில் இருந்து அங்கு பதிவாகிய ஆகக் குறைவான எண்ணிக்கை அது. நோய்ப்பரவல் தணியத் தொடங்கியிருப்பதை அது குறிக்கலாம் எனக் கூறிய மாநில முதலமைச்சர் டேனியல் ஆண்ட்ரூஸ் (Daniel ...

Read More »

அவுஸ்திரேலிய பூமியில் தங்கவேட்டை

அவுஸ்திரேலியாவில் இரண்டு பேர் தங்க வேட்டையில் ஈடுபட்டிருந்த போது சுமார் 1.87 கோடி மதிப்புள்ள 2 தங்க கட்டிகளை கண்டெடுத்துள்ளது அங்கு பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. அவுஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்தில் இருக்கும் தர்ணகுல்லா என்ற நகரம், தங்க சுரங்க நகரம் ஆகும். இங்கு பிரெண்ட் ‌ஷானன், ஈதன் வெஸ்ட் என்னும் 2 பேர், பூமியில் தங்க வேட்டையில் ஈடுபட்டிருந்தனர். அவர்கள் மெட்டல் டிடெக்டர் கருவி கொண்டு அங்குள்ள ஒரு இடத்தில் தங்கத்தை தேடிக்கொண்டிருந்தனர். அப்போது குறிப்பிட்ட ஒரு இடத்தை அவர்கள் தோண்டியபோது, அதில் 2 ...

Read More »

ஆஸ்திரேலியாவில் கரோனா பாதிப்பு 25 ஆயிரத்தைத் தாண்டியது

ஆஸ்திரேலியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 151 பேருக்குக் கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து கரோனா தொற்று 25 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. இதுகுறித்து ஊடகங்கள் தரப்பில், “ஆஸ்திரேலியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 151 பேருக்குக் கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் கரோனா பாதிப்பு ஆஸ்திரேலியாவில் 25,000-ஐக் கடந்துள்ளது. விக்டோரியா மற்றும் நியூ சவுத் வேல்ஸில் கரோனா பாதிப்பு பரவலாக உள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவில் 25,067 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 525 பேர் பலியாகி உள்ளனர். இந்நிலையில் ஆஸ்திரேலிய ...

Read More »

கஜேந்திரகுமாரின் உரையை பாராட்டுகிறார் அவுஸ்திரேலிய மாநில எம்பி கியு மக்டேமெற்!

“உண்மையை பேசுகின்ற துணிச்சலான மனிதன். அவர் பாதுகாப்பாக இருக்கவேண்டும் கடவுள் அவரை ஆசிர்வதிக்கட்டும்” என குறிப்பிட்டுள்ளார் கியு மக்டேமெற். அண்மையில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரையை தனது சமூகதளத்தில் பகிர்ந்துகொண்ட அவுஸ்திரேலிய நியு சவுத் வேல்ஸ் மாநில உறுப்பினர் கியு மக்டேமெற் அவர்களே மேற்படி கருத்தை தெரிவித்துள்ளார். கஜேந்திரகுமார்  பொன்னம்பலம் அவர்களின் உரையின் முழு வடிவம் பின்வருமாறு: “தமிழ் மக்களின் உரிமை அங்கீகரிக்கக்கோரியே வடக்கு கிழக்கில் மக்கள் ஏகோபித்த ஆணை வழங்கியிருக்கிறார்கள். நான் ஏகோபித்த ஆணை ...

Read More »