Home / செய்திமுரசு / அவுஸ்திரேலியமுரசு (page 19)

அவுஸ்திரேலியமுரசு

நியூசிலாந்துக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட்: ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி

நியூசிலாந்துக்கு எதிரான 3-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி பெற்றது. ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து அந்த அணிக்கு எதிராக 5 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் தொடரில் விளையாடி வருகிறது. இவ்விரு அணிகள் இடையிலான 3-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வெலிங்டனில் நேற்று நடந்தது. ஆஸ்திரேலிய அணியில் டேனியல் சாம்ஸ்க்கு பதிலாக வேகப்பந்து வீச்சாளர் ரிலே மெரிடித் அறிமுக ...

Read More »

ஆஸ்திரேலியா: குடும்ப விசா வழங்குவதில் தொடரும் தாமதம்

ஆஸ்திரேலியாவின் குடும்ப மீள் ஒன்றிணைவு மற்றும் இணையர் விசா வழங்கும் முறையில் பல்வேறு சிக்கல்கள் உள்ளதாகக் கூறப்பட்டு வரும் நிலையில் அதை ஆஸ்திரேலியா செனட் சபை உட்படுத்த இருக்கிறது. இந்த விசாரணையில், இவ்விசா முறையில் ஏற்படும் விசா வழங்க ஏற்படும் தாமதம், பாகுபாடு உள்ளிட்ட பல பிரச்னைகள் குறித்து விசாரிக்கப்பட இருப்பதாக ஆஸ்திரேலிய ஊடகமான எஸ்பிஎஸ் செய்தி வெளியிட்டிருக்கிறது. “நமது குடும்ப விசா வழங்கும் முறை சீர்குலைந்து கிடக்கிறது. ஆஸ்திரேலியாவில் ...

Read More »

ஆஸ்திரேலிய அகதிகள் கொள்கையினால் நிகழ்ந்த உயிரிழப்பு

அண்மையில், ஆஸ்திரேலியாவில் உயிரிழந்த அகமது முகமது எனும் சோமாலிய அகதி முதன் முதலில் ஆஸ்திரேலியாவில் தஞ்சமடைந்த பொழுது அவரது காலில் தோட்டாவை சுமந்து கொண்டிருந்தார். ஆஸ்திரேலியாவில் படகு வழியாக தஞ்சமடைந்த அவர் ஆஸ்திரேலியாவின் படகுக் கொள்கையினால் பல ஆண்டுகள் மனுஸ்தீவிலும் நவுருத்தீவிலும் உள்ள தடுப்பில் இருக்க வேண்டி வந்தது. நவுருத்தீவில் இருந்த பொழுது அவருக்கு ஏற்பட்ட இதயப்பிரச்னை இறுதியில் அவர் ஆஸ்திரேலியாவுக்குள் அழைத்து வரப்பட்ட போதிலும் அவரது உயிரைப் பறித்து ...

Read More »

சமூக வலைத்தளங்கள் செய்திக்கு பணம் செலுத்த ஆஸ்திரேலியாவில் புதிய சட்டம்

ஆஸ்திரேலியாவில் சமூக வலைத்தளங்கள் செய்திகளுக்காக பத்திரிகை நிறுவனங்களுக்கு பணம் செலுத்த வகை செய்து சட்டம் இயற்றப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவில் பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியிடுவதற்கு பத்திரிகை நிறுவனங்களுக்கு பணம் தர வகை செய்து ஒரு சட்டம் இயற்றப்பட்டது. ஆனால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பேஸ்புக் நிறுவனம், தனது வலைத்தளத்தில் செய்திகளை வெளியிட கடந்த வாரம் திடீரென தடை விதித்தது. இதனால் இந்த தளத்தில் செய்திகளை வாசித்து வந்த ஆஸ்திரேலியர்கள் ...

Read More »

அவுஸ்ரேலிய செய்தி பக்கங்கள் மீது விதித்த தடையை விலக்கிக்கொள்வதாக முகநூல் நிறுவனம் அறிவிப்பு

ஊடக விதிகளை திருத்தி அமைக்க அவுஸ்ரேலிய அரசு ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து, அவுஸ்ரேலிய செய்தி பக்கங்கள் மீது விதித்த சர்ச்சைக்குரிய தடையை விலக்கிக்கொள்ளப்போவதாக முகநூல்  நிறுவனம் அறிவித்துள்ளது. முகநூல் போன்ற சமூக வலைதளங்களில் பகிரப்படும் செய்திகளுக்கு முகநூல் நிறுவனம் செய்தி நிறுவனங்களுக்கு பணம் செலுத்துவது சட்டபூர்வ கட்டாயம் என்ற அவுஸ்ரேலிய அரசின் விதிகளுக்கு முகநூல் கடும் எதிர்ப்பு தெரிவித்து தடை நடவடிக்கைகளில் ஈடுபட்டது. இந்த நிலையில் இருதரப்பும் பேசி சுமுகமான முடிவு ...

Read More »

மக்களிடம் உள்ள அச்சத்தை போக்க முதல் ஆளாக தடுப்பூசி போட்டுக்கொண்ட ஆஸ்திரேலிய பிரதமர்

ஆஸ்திரேலியாவில் நாளை முதல் கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பூசி போடும் பணி நடைபெற உள்ளது. ஆஸ்திரேலியாவில்  கொரோனா வைரசால் இதுவரை 28,920 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 909 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள் தொடர்ந்து பின்பற்றப்படுகின்றன. அதேசமயம் தடுப்பூசி திட்டத்தை தொடங்குவதற்கும் அரசு நடவடிக்கை மேற்கொண்டது. பைசர் நிறுவனத்தின் தடுப்பூசிக்கு அரசு அனுமதி அளித்துள்ளது. இதையடுத்து, கொரோனா தடுப்பூசி போடும் பணி நாளை தொடங்க உள்ளது. ...

Read More »

ஆஸ்திரேலிய ஓபனில் அசத்திய ஒசாகா

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில், இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் ஜப்பான் வீராங்கனை ஒசாகா வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றார். இந்த ஆண்டில் முதல் கிராண்ட்சிலாம் போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி இறுதிக்கட்டத்தை நெருங்கியது. இன்று பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டி நடைபெற்றது. இதில் 3-ம் தரநிலை வீராங்கனையான ஜப்பானின் நவோமி ஒசாகாவும், அமெரிக்க வீராங்கனை ஜெனிபர் பிராடியும் பலப்பரீட்சை நடத்தினர். ஒசாகா அரையிறுதியில் 23 பட்டம் வென்றவரான ...

Read More »

முகநூலில் செய்திகளை பார்வையிட முடியாத நிலையில் அவுஸ்திரேலிய மக்கள்

அவுஸ்திரேலிய மக்கள் முகநூலில் செய்திகளை பார்வையிடுவதையும் பகிர்ந்துகொள்வதையும் பேஸ்புக் தடை செய்துள்ளது. அவுஸ்திரேலிய மக்கள் சர்வதேச உள்நாட்டு செய்திதளங்களை பார்வையிடுவதை பேஸ்புக்தடை செய்துள்ளது. அரசாங்கத்தின் சுகாதார அவரசசேவை மற்றும் ஏனைய இணையத்தளங்களையும் பேஸ்புக் தடைசெய்துள்ளது. அவுஸ்திரேலியாவிற்கு வெளியே உள்ளவர்கள் அவுஸ்திரேலிய செய்தி இணையத்தளங்கள் எவற்றையும் முகநூல் மூலமாக பார்வையிட முடியாத நிலை காணப்படுகின்றது. அவுஸ்திரேலிய அரசாங்கம் பேஸ்புக்கின் இந்த நடவடிக்கை அதன் நம்பகதன்மைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என எச்சரித்துள்ளது. இந்த ...

Read More »

ஆஸ்திரேலிய தடுப்பில் உள்ள அனைத்து அகதிகளும் விடுவிக்கப்பட வேண்டும்

ஆஸ்திரேலியாவில் படகு வழியாக தஞ்சமடைய முயன்று கடல் கடந்த தடுப்பில் உள்ளிட்ட பல தடுப்புகளில் சிறைப்படுத்தப்பட்ட இலங்கைத் தமிழ் அகதியான தனுஷ் செல்வராசாவுக்கு சுமார் 8 ஆண்டுகளுக்குப் பிறகு வெளியுலகத்தைக் காணுவதற்கான சுதந்திரம் கிடைத்திருக்கிறது. “இந்த சுதந்திரம் அற்புதமாக உள்ளது. ஆனால் எனது வாழ்க்கையின் எட்டு ஆண்டுக் காலத்தை நான் இழந்திருக்கிறேன்,” என செல்வராசா கூறியுள்ளார். அதே சமயம், சுமார் 100க்கும் மேற்பட்ட அகதிகள் விடுவிக்கப்படாமல் தொடர்ந்து சிறைவைக்கப்பட்டுள்ளனர். தனுஷ் ...

Read More »

ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ்: கடும் போராட்டத்திற்குப்பின் ரபேல் நடால் தோல்வி

ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸில் உலகின் முன்னணி வீரரான ரபேல் நடால் காலிறுதியில் கடும் போராட்டத்திற்குப்பின் அதிர்ச்சி தோல்வியடைந்தார். கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் போட்டிகளில் முதலாவதாக நடைபெறும் ஆஸ்திரேலியா ஓபன் தற்போது நடைபெற்று வருகிறது. ஆண்களுக்கான காலிறுதி ஆட்டம் ஒன்றில் உலகின் தலைசிறந்த வீரரும், 2-ம் நிலை வீரரான ரபேல் நடால், 4-ம் நிலை வீரரான ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ்-ஐ எதிர்கொண்டார். இதில் முதல் செட்டை ரபெல் நடால் 6-3 என எளிதில் ...

Read More »