பாகிஸ்தான் பிரதமருக்கு கொரோனா… சீன தடுப்பூசி போட்ட 2 நாளில் பாதிப்பு

பாகிஸ்தானில் தற்போது சீனா வழங்கிய சினோபாம் தடுப்பு மருந்து மட்டுமே பயன்பாட்டில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தானில் கொரோனா தடுப்பூசி திட்டத்திற்கு உதவும் வகையில் சீனா அரசு 5 லட்சம் டோஸ்கள் சினோபாம் மருந்தை இலவசமாக வழங்கி உள்ளது. இந்த மருந்தை பயன்படுத்தி தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் நேற்று முன்தினம் தடுப்பூசி (முதல் தவணை) போட்டுக்கொண்டார்.
இந்நிலையில், இம்ரான் கானுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவரது சிறப்பு உதவியாளர் தெரிவித்துள்ளார். கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து அவர் வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார்.
பாகிஸ்தானில் தற்போது சினோபாம் தடுப்பு மருந்து மட்டுமே பயன்பாட்டில் உள்ளது குறிப்பிடத்தக்கது.