அவுஸ்திரேலியமுரசு

இலவச சட்ட ஆலோசனை மையம்

சட்டத்திற்கு முன்னால் அனைவரும் சமம், ஆனால் எல்லோருக்கும் தங்களுக்கான நீதியினை பெற்றுக்கொள்ள வழக்கறிஞர் ஒருவரை நியமிக்க போதுமான நிதி வசதி இருப்பது இல்லை. ஆகவே இப்படியானவர்களுக்கு சட்ட உதவிகள் செய்ய அவுஸ்ரேலியாவில் எட்டு Legal Aid ஆணையங்கள் உள்ளன. அவுஸ்ரேலியாவிற்கு புதிதாக வந்த பாதிக்கப்பட்ட பின்தங்கியவர்களுக்கு உதவுவதே Legal Aid ஆணையங்களின் நோக்கமாகும். காங்கோ ஜனநாயக குடியரசுநாட்டிலிருந்து 2014ஆம் ஆண்டு அவுஸ்ரேலியா வந்த மாணவர் Claude Muco.தனது நாட்டில் நிலவும் இன வன்முறை காரணமாக அங்கு திரும்பி செல்ல Claude பயப்படுகிறார். ஆனால் அவுஸ்ரேலியா ...

Read More »

அரசு மருத்துவமனையில் இலவசமாக சில பல் சிகிச்சை செய்துக்கொள்ளலாம்

அழகான சிரிப்பு என்பது வாய் சுகாதாரம் அல்ல.  சுகாதாரமற்ற வாயினால் மற்றைய உடல் பாகங்களின் ஆரோக்கியம் பாதிக்கக்கூடும். அவுஸ்ரேலியாவில் பல் வைத்தியத்திற்கு கட்டணம் அதிகம்.  ஆனால் அவைகளை பல வகையில் குறைக்கலாம். அரசு மருத்துவமனையில் இலவசமாக சில  பல் சிகிச்சை செய்துக்கொள்ளலாம் ஆனால்  பற்களை சுத்தம் செய்வது, பற்களில் உள்ள ஓட்டைகளை அடைத்தல் போன்ற சிலவைகளை Medicare பாவித்து செய்துக்கொள்ள முடியாது.  ஆகவே பலர் தங்களின் தனியார் சுகாதார காப்பீடு கொண்டு தனியார் பல் வைத்தியரிடம் சிகிச்சை பெறுகின்றனர். அரசின் ‘ Child Dental ...

Read More »

வீடுகள் கட்டுவதற்கு அரச நிலங்களை வழங்கும் திட்டம்!

சிட்னி மற்றும் மெல்போர்னில் ஆயிரக்கணக்கான புதிய வீடுகளைக் கட்டுவதற்குப் பாதுகாப்பு அமைச்சுக்குச் சொந்தமான நிலங்களை பொதுமக்களுக்கு வழங்கும் இரகசியத் திட்டமொன்றை அரசு வைத்துள்ளது.

Read More »

தெற்கு அவுஸ்ரேலியாவிற்கான General Skilled Migration நிபந்தனைகளில் முக்கிய மாற்றம்!

தெற்கு அவுஸ்ரேலியாவிற்கான General Skilled Migration நிபந்தனைகளில் முக்கிய மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. இதன்படி high points state nomination-இன் கீழ் தெரிவுசெய்யப்படுவதற்கான புள்ளிகள் 80 இலிருந்து 85 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 19ம் திகதியிலிருந்து இந்நடைமுறை அமுலுக்கு வருகிறது. இதற்கு முன்னர் தமது விண்ணப்பங்களைத் தாக்கல் செய்பவர்களை இப்புதிய நடைமுறை பாதிக்காது. இதேவேளை தெற்கு அவுஸ்ரேலியாவுக்கான high points மற்றும் chain migration stream-இன் கீழ் கீழ்க்காணும் தொழில்களுக்கு விண்ணப்பிக்க முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது. . Accountant (General) Human resources ...

Read More »

அமெரிக்காவுடன் கைகோர்க்கும் அவுஸ்ரேலியா

வடகொரியா விவகாரத்தில் அமெரிக்கா, தென்கொரியாவுடன் இணைந்து பணியாற்ற தயாராக உள்ளதாக அவுஸ்திரேலிய வெளியுறவுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். வடகொரியாவின் அணு ஆயுத நடவடிக்கைகளுக்கு எதிராக அமெரிக்கா தொடர்ந்து குரல் எழுப்பி வந்த நிலையில் வாரந்தோறும் ஏவுகணை சோதனை நடத்தப்போவதாக வடகொரியா கூறியிருந்தது. வடகொரியாவின் இந்த அறிவிப்பால் தீபகற்ப பகுதியில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது. இந்நிலையில், ஜப்பானுக்கு அரசு பணிநிமித்தமாக பயணம் மேற்கொண்டுள்ள அவுஸ்திரேலிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜூலி பிஷப் டோக்கியோவில் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது, வடகொரியாவின் அணு ஆயுத நடவடிக்கைகளுக்கு எதிராக அழுத்தம் கொடுப்பதில் ...

Read More »

எம்ஹெச்370 விமானம் வேறு பகுதியில் விழுந்திருக்கலாம் – அவுஸ்ரேலிய விஞ்ஞானிகள்

காணாமல்போன மலேசிய விமானம் 370இன் உடைந்த பாகங்கள் தேடப்பட்ட மண்டலத்தின் வட பகுதியில் இந்த விமானம் விழுந்திருக்கலாமென தோன்றுவதை புதிய சான்று உறுதி செய்வதாக அவுஸ்ரேலிய விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். 2014 ஆம் ஆண்டு 239 பேர் பயணித்த எம்ஹெச்370 விமானம், கோலாலம்பூரில் இருந்து பெய்ஜிங்கிற்கு பறந்து கொண்டிருந்தபோது காணாமல் போய்விட்டது. இந்த விமானத்தின் பாகங்களை கடலில் தேடிவந்த நிலையில், ஜனவரி மாதத்தில் தங்களுடைய தேடுதல் வேட்டையை நிறுத்தி கொள்வதாக ஆஸ்திரேலியா, மலேசியா மற்றும் சீனா நாடுகள் அறிவித்தன. உண்மையான போயிங் 777 ரக விமானத்தின் ...

Read More »

கொடிய பாம்புகளுடன் அசால்டாக விளையாடும் 2 வயது குழந்தை

பாம்புகள், உடும்புகள் போன்ற விஷ ஊர்வனங்களுடன் விளையாடும் 2 வயது குழந்தையின் செயல் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அவுஸ்ரேலியாவை சேர்ந்தவர் Brooke Harrison. இவர் மனைவி Tony இவர்களின் மகன் Jenson Harrison Brookeம், Tonyம் பாம்புகள் பிடிப்பதையே தொழிலாக செய்து வருகிறார்கள். இவர்கள் வீட்டில் மட்டும் 300க்கும் மேற்பட்ட பாம்புகளை வளர்க்கிறார்கள். இவர்களின் மகன் Brooke மற்ற குழந்தைகள் பொம்மைகளுடன் விளையாடுவது போல இவன் பாம்புகளுடன் தைரியாக விளையாடுகிறான். பாம்புகள் மட்டுமில்லாமல் பல்லி, உடும்பு போன்ற உயிரினங்களுடன் Jenson சந்தோஷமாக விளையாடுகிறான். இது குறித்து ...

Read More »

அவுஸ்ரேலிய குடியுரிமை பெறுவதில் புதிய மாற்றங்கள்!

அவுஸ்ரேலிய குடியுரிமை பெறுவதில் புதிய மாற்றங்களை அரசு அறிவித்துள்ளது. புதிதாக வருவோர், “Australian values” அதாவது அவுஸ்ரேலிய மதிப்புகளை அறிந்துள்ளார்களா எனப் பரிசோதித்து, தேசத்துடனான அவர்களின் உறுதிப்பாட்டை நிரூபிக்க வேண்டும் என்று பிரதமர் அறிவித்துள்ளார். புதிதாகக் குடியுரிமை பெறுவோர் அவுஸ்ரேலியா நாட்டுக்கான தமது அர்ப்பணிப்பு, மத சுதந்திரம் மற்றும் பாலின சமத்துவத்துக்கு அவர்கள் பூரண சம்மதத்துடனான மதிப்பளிக்கிறார்களா எனக் கடுமையாகப் பரிசோதிக்கப்படுவார்கள். அவுஸ்திரேலியாவில் நடைமுறையிலுள்ள “four five seven” விசா முறையை இரத்து செய்வதற்கு அந்நாட்டு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இந்த முறைக்கு பதிலாக தற்காலிக ...

Read More »

மெல்போர்ன் நகரம் அமைக்கப்பட்ட நாள்: ஏப்ரல் 18, 1912

அவுஸ்ரேலியாவில் உள்ள விக்டோரியா மாநிலத்தில் தலைநகரமான மெல்போர்ன் 1912-ஆம் ஆண்டு இதே நாளில் அமைக்கப்பட்டது. அவுஸ்ரேலியாவின் இரண்டாவது மிகப்பெரிய நகரம் ஆகும். 2006-ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி இந்நகரத்தின் மக்கள்தொகை 3.8 மில்லியன் ஆகும். மேலும் இதே நாளில் நடந்த பிற நிகழ்வுகள் * 1906 – அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் நகரில் 3,000 பேர் வரையில் கொல்லப்பட்டனர். அவுஸ்ரேலியாவில் உள்ள விக்டோரியா மாநிலத்தில் தலைநகரமான மெல்போர்ன் 1912-ஆம் ஆண்டு இதே நாளில் அமைக்கப்பட்டது. அவுஸ்ரேலியாவின் இரண்டாவது மிகப்பெரிய நகரம் ஆகும். 2006-ஆம் ...

Read More »

நேரலையில் பகல் கனவு கண்ட செய்தி வாசிப்பாளர்

அவுஸ்திரேலியாவில் செய்தி வாசிப்பாளர் ஒருவர் நேரலையில் பகல் கனவு கண்ட காட்சி சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. ABC 24 சேனலில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றுபவர் Natasha Exelby. இவர், நேரலையில் செய்தி வாசித்துக்கொண்டிருக்கும்போது, திடீரென மெய்மறந்து தனது கையில் உள்ள பேனாவை உற்றுபார்த்தவாறு அமர்ந்திருந்துள்ளார். சிறிது நிமிடங்களுக்கு பிறகு நேரலையில் இருப்பதை உணர்ந்த அவர், சுதாரித்துக்கொண்டு செய்தியை வாசித்து முடித்துள்ளார். நேரலையின் போது பகல் கனவு கண்ட இவரது செயல் சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.  

Read More »