வடகொரியா விவகாரத்தில் அமெரிக்கா, தென்கொரியாவுடன் இணைந்து பணியாற்ற தயாராக உள்ளதாக அவுஸ்திரேலிய வெளியுறவுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
வடகொரியாவின் அணு ஆயுத நடவடிக்கைகளுக்கு எதிராக அமெரிக்கா தொடர்ந்து குரல் எழுப்பி வந்த நிலையில் வாரந்தோறும் ஏவுகணை சோதனை நடத்தப்போவதாக வடகொரியா கூறியிருந்தது.
வடகொரியாவின் இந்த அறிவிப்பால் தீபகற்ப பகுதியில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது.
இந்நிலையில், ஜப்பானுக்கு அரசு பணிநிமித்தமாக பயணம் மேற்கொண்டுள்ள அவுஸ்திரேலிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜூலி பிஷப் டோக்கியோவில் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது,
வடகொரியாவின் அணு ஆயுத நடவடிக்கைகளுக்கு எதிராக அழுத்தம் கொடுப்பதில் சீனா முக்கிய பங்கு வகிக்கும்.
இந்த விவகாரத்தில் ஜப்பான், தென்கொரியா, அமெரிக்காவுடன் இணைந்து பணியாற்ற அவுஸ்திரேலியா தயாராக உள்ளது என்று கூறியுள்ளார்.
Eelamurasu Australia Online News Portal