அரசு மருத்துவமனையில் இலவசமாக சில பல் சிகிச்சை செய்துக்கொள்ளலாம்

அழகான சிரிப்பு என்பது வாய் சுகாதாரம் அல்ல.  சுகாதாரமற்ற வாயினால் மற்றைய உடல் பாகங்களின் ஆரோக்கியம் பாதிக்கக்கூடும். அவுஸ்ரேலியாவில் பல் வைத்தியத்திற்கு கட்டணம் அதிகம்.  ஆனால் அவைகளை பல வகையில் குறைக்கலாம்.

அரசு மருத்துவமனையில் இலவசமாக சில  பல் சிகிச்சை செய்துக்கொள்ளலாம் ஆனால்  பற்களை சுத்தம் செய்வது, பற்களில் உள்ள ஓட்டைகளை அடைத்தல் போன்ற சிலவைகளை Medicare பாவித்து செய்துக்கொள்ள முடியாது.  ஆகவே பலர் தங்களின் தனியார் சுகாதார காப்பீடு கொண்டு தனியார் பல் வைத்தியரிடம் சிகிச்சை பெறுகின்றனர்.
அரசின் ‘ Child Dental Benifit Scheme’ மூலம் அனைத்து குழந்தைகளும் Medicareஐ பாவித்து பல் வைத்தியம் செய்துக்கொள்ளலாம்.  Dental Health Service Victoria பல சமூக நிறுவனங்களுடன் இணைந்து அகதிகள் மற்றும் புகலிடக்கோரிக்கையாளர்களுக்கு இலவச பல் வைத்தியம் வழங்கி வருகிறது.
மேலதிக விபரங்களை மாநில சுகாதார திணைகளத்தின் இணையதளத்தில் பெற்றுக்கொள்ளலாம்.