வீடுகள் கட்டுவதற்கு அரச நிலங்களை வழங்கும் திட்டம்!

the_government_is_looking_underused_defence_sites_to_boost_the_housing_dilemma_in_capital_citiesசிட்னி மற்றும் மெல்போர்னில் ஆயிரக்கணக்கான புதிய வீடுகளைக் கட்டுவதற்குப் பாதுகாப்பு அமைச்சுக்குச் சொந்தமான நிலங்களை பொதுமக்களுக்கு வழங்கும் இரகசியத் திட்டமொன்றை அரசு வைத்துள்ளது.

வீடுகள் தொடர்பிலான நெருக்கடியை எளிதாக்குவதற்கு பயன்படுத்தப்படாத அரச நிலங்களில் வீடுகள் கட்டுவதற்கு அனுமதி வழங்கும் விதத்திலான வரவுசெலவுத் திட்ட இரகசிய நகர்வு ஒன்றை Turnbull அரசு வைத்திருப்பதாகத் தெரியவந்துள்ளது.

நாட்டின் பிரதான நகரங்களில், குறிப்பாக சிட்னி மற்றும் மெல்போர்னில் வீடுகள் தொடர்பிலான குழப்பத்தை சமாளிக்கவும், துரிதமான முன்னேற்றங்களை ஏற்படுத்தவும் அரசு தீர்மானித்துள்ளது.

மெல்போர்ன் புறநகரான Maribyrnong இல் 127ha பரப்பளவிலான நிலம், சிட்னியில் Penrith மற்றும் Bringelly ஆகிய பகுதிகளில் 3.6ha பரப்பளவிலான பகுதிகளைப் புதிய வீடுகள் கட்டுவதற்காக வெளியீடு செய்யும் அறிவிப்பினை அடுத்தமாத வரவுசெலவுத்திட்டத்தில் வெளியிடவுள்ளது.

சிட்னியின் பெருவாரியான நிலப்பரப்புகளை அரச பாதுகாப்புத் திணைக்களம் தன்னகத்தே வைத்துள்ளதாக சமீபத்திய ஆண்டுகளில் அரசு மீது விமர்சனங்கள் வந்தவண்ணமுள்ளன.

தேசிய அளவில் பாதுகாப்புத் திணைக்களம் 3 மில்லியன் ஹெக்டேர் நிலங்களை வைத்துள்ளது. அதன் பெறுமதி ஏறத்தாழ $ 20 பில்லியனுக்கும் மேலான மதிப்புடையது.