காணாமல்போன மலேசிய விமானம் 370இன் உடைந்த பாகங்கள் தேடப்பட்ட மண்டலத்தின் வட பகுதியில் இந்த விமானம் விழுந்திருக்கலாமென தோன்றுவதை புதிய சான்று உறுதி செய்வதாக அவுஸ்ரேலிய விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
2014 ஆம் ஆண்டு 239 பேர் பயணித்த எம்ஹெச்370 விமானம், கோலாலம்பூரில் இருந்து பெய்ஜிங்கிற்கு பறந்து கொண்டிருந்தபோது காணாமல் போய்விட்டது.
இந்த விமானத்தின் பாகங்களை கடலில் தேடிவந்த நிலையில், ஜனவரி மாதத்தில் தங்களுடைய தேடுதல் வேட்டையை நிறுத்தி கொள்வதாக ஆஸ்திரேலியா, மலேசியா மற்றும் சீனா நாடுகள் அறிவித்தன.
உண்மையான போயிங் 777 ரக விமானத்தின் இறகு பகுதி, நீரோட்டத்தால் அடித்து செல்லப்படும் மாதிரியை முதல்முறையாக ஆராய்ந்துள்ள விஞ்ஞானிகள், எம்ஹெச்370 விமானம் எங்கிருக்கலாம் என்று கணித்த டிசம்பர் மாத அறிக்கையை ஆதரித்து கருத்து வெளியிட்டுள்ளனர்.
Eelamurasu Australia Online News Portal