அவுஸ்திரேலியமுரசு

மனுஸ் தீவு தடுப்பிலுள்ள அகதிகள் அமெரிக்காவில் குடியேற்றம்?

அவுஸ்திரேலியாவில் தஞ்சம்கோரியவர்களில் மனுஸ் தீவில் தடுப்பில் உள்ள அகதிகள் எதிர்வரும் அக்டோபர் மாதம் அமெரிக்காவுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த தகவலை உத்தியோகப்பூர்வமாக குடிவரவு அமைச்சர் Peter Dutton தெரிவித்துள்ளார். அவுஸ்திரேலியா – அமெரிக்கா இடையே செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின்படி அகதிகள் அமெரிக்காவில் குடியமர்த்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும் குறித்த தடுப்பு முகாமிலுள்ள அகதிகளை உடனடியாக அமெரிக்கா அனுப்பிவைப்பதற்கே தமது அரசு விரும்புகிறது என தெரிவித்துள்ளார். அமெரிக்கா வருடமொன்றுக்கு உள்வாங்கும் அகதிகளின் எண்ணிக்கை, அரைவாசியாகக் குறைக்கப்பட்டதால், அக்டோபர் வரை காத்திருக்கவேண்டி ஏற்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறியுள்ளார். ...

Read More »

அவுஸ்ரேலியா : ஓரினச் சேர்க்கையாளர் திருமணத்துக்கு அங்கீகாரம்

ஓரினச் சேர்க்கையாளர் திருமணத்துக்கு அங்கீகாரம் அளிப்பது தொடர்பாக தபால் வாக்களிப்பு முறையை நடத்தலாம் என அவுஸ்ரேலியா நாட்டின் மூத்த அமைச்சர் தெரிவித்துள்ளார். அவுஸ்ரேலியாவில் ஓரினச் சேர்க்கை திருமணத்துக்கு ஆதரவு பெருகி வருகிறது. இதைதொடர்ந்து, அந்த திருமணங்களை அரசு அங்கீகரிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. பொதுமக்களின் இந்த கோரிக்கைக்கு அமைச்சர்கள் சிலரும் ஆதரவு அளித்து வருகின்றனர். கடந்த ஆண்டு பொதுமக்களிடம் நடத்திய கருத்துக் கணிப்பில், ஓரினச் சேர்க்கையாளர் திருமணத்துக்கு 61 சதவீதத்தினர் தங்களது ஆதரவை அளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், அவுஸ்ரேலிய பாராளுமன்றத்தில் ...

Read More »

அவுஸ்திரேலியாவில் ஈழ அகதிகளுக்கு நெருக்கடி!

அவுஸ்திரேலியாவில் அடைக்கலம் கோரியுள்ள ஈழ அகதிகளுக்கு நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகம் ஒன்றை மேற்கோள்காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன. இந்நிலையில், அவுஸ்திரேலியாவில் அடைக்கலம் கோரியுள்ள ஈழ அகதிகளை தங்க வைப்பதற்கான மாற்று இடம் தொடர்பில் அந்நாட்டு அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மனுஸ் மற்றும் நவுறு தீவுகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஈழ அகதிகள் அமெரிக்காவில் குடியேற்றப்படுவார்கள் என அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஒபாமா அரசாங்கத்தின் போது உடன்படிக்கை ஒன்று கைச்சாத்திடப்பட்டிருந்தது. எனினும், இந்த உடன்படிக்கை அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக பொறுப்பேற்றுள்ள ட்ரம்ப் ...

Read More »

வாட்ஸ்அப் நிறுவனத்துக்கு செக் வைத்தது அவுஸ்ரேலியா!

உலகின் முன்னணி சாட் அப்ளிகேஷனான வாட்ஸ்அப்பில், பயனாளர்கள் அனுப்பும் தகவல்கள் அனைத்தும் ‘என்கிரிப்ட்’ செய்யப்பட்ட பின்னரே மற்றொருவரை சென்றடையும். பின்னர் அந்த செய்தியானது, ‘டிகிரிப்ட்’ செய்யப்பட்ட பின்னரே பயனாளரின் மொபைல் போனில் படிக்கமுடியும். இதனால், வேறு எவராலும் அந்த செய்தியை இடைமறித்துப் படிக்கமுடியாது. பயனாளர்களைப் பொறுத்தவரை, இது பாதுகாப்பான விஷயம்தான் என்றாலும், சமூகவிரோதிகள் இதைப் பயன்படுத்தி சட்டவிரோதச் செயல்களில் ஈடுபட வாய்ப்பிருக்கிறது. இதனால், பல நாடுகளிலும், வாட்ஸ்அப் உள்ளிட்ட என்கிரிப்ட் செய்யப்பட்ட அப்ளிகேஷன்களுக்குத் தொடர்ந்து எதிர்ப்பு வலுத்து வருகிறது. இந்நிலையில், ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் வாட்ஸ்அப் ...

Read More »

அவுஸ்ரேலிய நாடாளுமன்றத்தில் குழந்தைக்கு தாய்ப்பாலூட்டி பிரபலமான பெண் எம்.பி. ராஜினாமா

அவுஸ்ரேலிய நாடாளுமன்றத்தில் குழந்தைக்கு தாய்ப்பாலூட்டி பிரபலமான பெண் எம்.பி. லாரிஸ்சா வாட்டர்ஸ் தனது பதவி இழந்திருப்பது அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவுஸ்ரேலியாவில் கிரீன்ஸ் கட்சியை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர், லாரிஸ்சா வாட்டர்ஸ் (வயது 40) ஆவார். இந்தப் பெண் எம்.பி., நாடாளுமன்றத்தில் தன் குழந்தைக்கு தாய்ப்பாலூட்டியவர். குழந்தைக்கு தாய்ப்பாலூட்டியவாறு அவர் பாராளுமன்றத்தில் பேசிய படக்காட்சி, உலகமெங்கும் வலம் வந்து பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த பெண் எம்.பி., லாரிஸ்சா வாட்டர்ஸ், பதவி விலகி உள்ளார். அவர் இரட்டை குடியுரிமை பெற்றிருப்பதே பதவி விலகலுக்கு காரணம் ...

Read More »

புகலிடக் கோரிக்கையாளர்களை அமெரிக்கா ஏற்குமா?

அவுஸ்திரேலியாவில் தஞ்சம்கோரிய சிலரை அமெரிக்காவில் குடியேற்ற இணக்கப்பாடு எட்டப்பட்டிருந்தது. இந்நிலையில் நவ்ரு தீவு முகாம்களில் உள்ள புகலிடக்கோரிக்கையாளர்களை அமெரிக்காவில் குடியேற்றுவதற்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இணங்கியுள்ளார். இதனைத்தொடர்ந்து அந்த முகாம்களில் இருக்கின்றவர்களை அமெரிக்க குடிவரவு அதிகாரிகள் கடந்த வாரங்களில் நேர்முகம் கண்டதாக தெரியவருகிறது. ஆனால் அவர்கள் திடீரென அமெரிக்கா திரும்பிவிட்டனர் என்று வெளியாகும் செய்திகள் உறுதிபடுத்தியுள்ளன. அமெரிக்கா ஆண்டுதோறும் ஏற்கும் சுமார் ஐம்பதாயிரம் அகதிகளின் எண்ணிக்கைப்படி ஏற்கனவே இந்த எண்ணிக்கை கொண்ட அகதிகளை இந்த ஆண்டு ஏற்றுக்கொண்டுவிட்டது. இதனால் புதிய அகதிகளை இந்த ...

Read More »

ஸ்கைடைவ் செய்த இருவர் பலி!

சிட்னியின் தென்மேற்குப் பகுதியில் skydive செய்த இருவர் உயிரிழந்துள்ளனர். இவர்கள் யார் என்ற அடையாளத்தை பொலிசார் இதுவரை வெளியிடவில்லை. 60 வயதான ஒருவரும் 20 வயதான இன்னொருவரும் Picton என்ற skydive செய்வதற்குப் பிரபலமான இடத்திலிருந்து, இந்த சாகசச் செயலில் ஈடுபட்டுள்ளனர். அப்போது எதிர்பாராதவிதமாக, Wilton Park Road இலுள்ள ஒரு காணியில் வீழ்ந்ததில் ஏற்பட்ட தாக்கத்தால் உயிரிழந்துள்ளனர்.

Read More »

அவுஸ்ரேலிய வெளிவிவகார அமைச்சர் சிறிலங்கா வருகை தரவுள்ளார்!

அவுஸ்ரேலிய வெளிவிவகார அமைச்சர் ஜூலி பிசப் இந்த வாரம் சிறிலங்கா வருகை தரவுள்ளார். சிறிலங்கா வரும் அவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க, எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் முக்கிய அமைச்சர்கள் சிலரையும் சந்திக்கவுள்ளார். இரு தரப்பு பாதுகாப்பு மற்றும் பொருளாதார உறவுகளை மேம்படுத்தும் நோக்கில் அவர் பேச்சுகளில் ஈடுபடவுள்ளார். டெங்குக் காய்ச்சலைத் தடுக்க அவுஸ்திரேலியா வழங்கும் உதவி குறித்தும் ஜனாதிபதியுடன் இணைந்து அவர் அறிவிக்கவுள்ளார். மேலும், நல்லிணக்கச் செயற்பாடுகளை நடைமுறைப்படுத்துவதன் முன்னேற்றம் குறித்தும் அவர் ...

Read More »

அவுஸ்ரேலிய ஓபன் சாம்பியன்ஷிப் பட்டம்

அவுஸ்ரேலியாவில் நடைபெற்று வந்த விக்டோரியா ஓபன் ஸ்குவாஷ் போட்டியில் இந்திய வீரர் ஹரிந்தர் பால் சந்து சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். விக்டோரியா ஓபன் ஸ்குவாஷ் போட்டிகள் அவுஸ்ரேலியாவின் மெல்போர்ன் நகரில் கடந்த 11-ம் திகதி தொடங்கின. இப்போட்டியின் இறுதி ஆட்டம் 16-ம் திகதி நடைபெற்றது. ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதி போட்டியில் இந்தியாவின் ஹரிந்தர் பால் சந்துவும் முதல்நிலை வீரரான அவுஸ்ரேலியாவின் ரெக்ஸ் ஹெட்ரிக்ஸ்சும் மோதினர். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியின் முதல் செட்டில் அவுஸ்ரேலிய வீரர் 14-12 என்ற புள்ளி கணக்கில் வெற்றி ...

Read More »

கையில் பொருத்தப்பட்ட கால் கட்டை விரல்!

காளை மாடு தாக்கி கை கட்டை விரலை இழந்த இளைஞருக்கு அறுவை சிகிச்சை மூலம் கால் கட்டை விரல் கையில் பொருத்தப்பட்டுள்ளது. அவுஸ்திரேலியாவை சேர்ந்தவர் ஸாக் மிட்செல் (20), இவர் கடந்த ஏப்ரலில் அங்குள்ள விவசாய நிலத்தில் பணியாற்றி கொண்டிருந்தார். அப்போது, அங்கிருந்த காளை ஒன்று மிட்செலை தாக்கியுள்ளது. பின்னர் அவருடைய கையை வேலிக்குள் காளை எட்டி உதைத்துள்ளது. இதையடுத்து மிட்செலின் கை கட்டை விரல் துண்டானது. அதன் பின்னர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட மிட்செலின் கை கட்டை விரலை காப்பாற்றும் முயற்சிகள் தோல்வியில் ...

Read More »