ஓரினச் சேர்க்கையாளர் திருமணத்துக்கு அங்கீகாரம் அளிப்பது தொடர்பாக தபால் வாக்களிப்பு முறையை நடத்தலாம் என அவுஸ்ரேலியா நாட்டின் மூத்த அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அவுஸ்ரேலியாவில் ஓரினச் சேர்க்கை திருமணத்துக்கு ஆதரவு பெருகி வருகிறது. இதைதொடர்ந்து, அந்த திருமணங்களை அரசு அங்கீகரிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. பொதுமக்களின் இந்த கோரிக்கைக்கு அமைச்சர்கள் சிலரும் ஆதரவு அளித்து வருகின்றனர்.
கடந்த ஆண்டு பொதுமக்களிடம் நடத்திய கருத்துக் கணிப்பில், ஓரினச் சேர்க்கையாளர் திருமணத்துக்கு 61 சதவீதத்தினர் தங்களது ஆதரவை அளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், அவுஸ்ரேலிய பாராளுமன்றத்தில் பேசிய குடியுரிமை மற்றும் உள்துறை அமைச்சர் பீட்டர் டட்டன் கூறுகையில், ஓரினச் சேர்க்கையாளர் திருமணத்துக்கு தபால்வாக்குகள் மூலம் ஆதரவு கோரலாம் என குறிப்பிட்டுள்ளார்.
அரசில் அங்கம் வகிக்கும் மூத்த மந்திரியின் இந்த பரிந்துரையை அவுஸ்ரேலிய எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் செய்து வருகின்றன.
Eelamurasu Australia Online News Portal