அவுஸ்திரேலியமுரசு

அவுஸ்திரேலியாவில் மீண்டும் இரு அகதிகள் தற்கொலை முயற்சி!

மனுஸ்தீவிலுள்ள இரண்டு அகதிகள் தற்கொலைக்கு முயற்சித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இருவரும் காப்பாற்றப்பட்டிருப்பதாகவும் அவர்களில் ஒருவர் மேற்கொண்டு அந்த முயற்சியில் ஈடுபடுவதிலிருந்து தடுப்பதற்கு பொலிஸ் நிலைய தடுப்புக்காவலறையில் கொண்டுபோய் வைத்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. அங்கு நிலைகொண்டுள்ள Refugee Action Coalition-இன் பேச்சாளர் Ian Rintoul இதனை தெரிவித்துள்ளார். மனுஸ் தீவிலுள்ள அகதிகள் அங்கு தொடர்ச்சியாக வைக்கப்பட்டிருப்பதால் மிகவும் விரக்தியடைந்துள்ளார்கள் என்றும் அவர்கள் தங்களுக்கான வழிகளை இதுபோன்ற சம்பவங்களின் ஊடாக நாடுவதற்கே விரும்புகிறார்கள் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். எந்தக்குற்றமும் செய்யாத அகதி ஒருவர் தற்கொலைக்கு முயன்றார் என்பதற்காக ...

Read More »

அவுஸ்திரேலியாவில் முதிய தம்பதிக்கு அஞ்சல் வழி அதிர்ச்சி!

அவுஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் ஒரு முதிய தம்பதிக்கு அஞ்சல் வழி அதிர்ச்சி காத்திருந்தது. தவறுதலாக அவர்களின் வீட்டுக்கு ஒரு பொட்டலம் சென்றுசேர்ந்தது. பிரித்துப் பார்த்தால் அத்தனையும் வெள்ளைத்தூள். உடனே பொலிஸாரை அந்த முதியவர்கள் தொடர்புகொண்டனர். 7 மில்லியன் டாலர் பெறுமானமுள்ள கிட்டத்தட்ட 20 கிலோகிராம் போதைப்பொருள் அந்தப் பொட்டலத்தில் அடங்கியிருந்தது. அதன் தொடர்பில் நடத்தப்பட்ட விசாரணையில், மெல்பர்ன் நகரின் மற்றொரு பகுதியில் 21 வயது ஆடவர் ஒருவர் கைதுசெய்யப்பட்டார். அந்தக் கைது நடவடிக்கையில் மேலும் சுமார் 20 கிலோகிராம் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.

Read More »

ராஜஸ்தான் அணியில் இருந்து விடைபெற்றார் ஸ்மித்!

12-வது ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடிய ஸ்மித் உலகக்கோப்பைக்கான ஆஸ்திரேலியா முகாமுக்குச் செல்வதால் அணியில் இருந்து பிரியா விடைபெற்றார். ஆஸ்திரேலியாவின் முன்னணி பேட்ஸ்மேன் ஸ்டீவ் ஸ்மித். பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் சிக்கிய இவருக்கு ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் ஓராண்டு தடைவிதித்தது. இந்த தடை முடிந்து பல டி20 தொடரில் விளையாடி வந்தநிலையில் ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடினார். இவர் உலகக்கோப்பைக்கான ஆஸ்திரேலியா அணியில் இடம் பிடித்துள்ளார். ஆஸ்திரேலியா உலகக்கோப்பைக்கான முகாமை வருகிற 2-ந்தேதி தொடங்குகிறது. இதனால் உலகக்கோப்பைக்கான அணியில் ...

Read More »

மெல்பேர்ன் நகரிற்கு வரும் புதிய கட்டுப்பாடு!

மெல்பேர்ன் நகரின் மையப்பகுதிகளிலுள்ள தெருக்களில் வாகனங்களுக்கு புதிய வேகக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய மணிக்கு 30 கிலோ மீற்றராக குறைக்கப்படவுள்ளதாக மெல்பேர்ன் கவுன்ஸில் தெரிவித்துள்ளது. மெல்பேர்ன் நகரின் சில பகுதிகளில் ஏற்கனவே மணிக்கு 30 கிலோ மீற்றர் வேகக்கட்டுப்பாட்டானது ஏற்கனவே நடைமுறையில் உள்ளது. இருந்த போதும் தற்போது மணிக்கு 40 கிலோ மீற்றர் வேகக்கட்டுப்பாடு நடைமுறையிலுள்ள வீதிகளில் மேற்படி புதிய கட்டுப்பாடு கொண்டுவரப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மெல்பேர்ன் நகர மைய வீதிகளில் வாகன விபத்துக்களை தவிர்க்கும் நோக்கத்துடன் இந்த புதிய கட்டுப்பாட்டைக்கொண்டுவரவுள்ளது. நகரின் மத்தியில் தற்போது எடுக்கப்பட்டுள்ள ...

Read More »

ஆஸ்திரேலியாவில் ஆண்களிடம் மட்டும் அதிக வரி ….!

ஆஸ்திரேலியாவில் ஆண்களிடம் மட்டும் அதிக வரி வசூலித்த விடுதியை மூடுவதாக அதன் உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர். ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரை சேர்ந்த பெண்ணியவாதிகள் சிலர் கடந்த 2017-ம் ஆண்டு ‘ஹன்ட்சம் ஹெர்’ (அவள் அழகானவள்) என்ற பெயரில் விடுதி ஒன்றை துவங்கினர். இந்த விடுதியில் பெண்களுக்கு தான் முதல் முன்னுரிமை. பெண்களின் இருக்கைகள் நிறைந்த பிறகு, இடம் இருந்தால் மட்டும் ஆண்கள் அனுமதிக்கப்படுவார்கள். அத்துடன் ஆண்கள் தாங்கள் சாப்பிடும் உணவுக்கு கூடுதலாக 18 சதவீதம் வரி செலுத்த வேண்டும். ஆண்களிடம் இருந்து வசூலிக்கப்படும் இந்த கூடுதல் ...

Read More »

தற்கொலை குண்டுதாரிகளில் ஒருவர் அவுஸ்ரேலியாவில் தங்கியிருந்தார்!

இலங்கையில் ஈஸ்டர் ஞாயிறு தினத்தில் தற்கொலை குண்டுத் தாக்குதல்களை நடத்திய நபர் அவுஸ்திரேலியாவில் கல்வி கற்றவர் என தெரிவிக்கப்படுகின்றது. அவர் தனது குடும்பத்தினரையும் அவுஸ்திரேலியாவுக்கு அழைப்பித்திருந்தார் எனவும் அவுஸ்திரேலிய பிரதமர் தெரிவித்துள்ளார். தற்கொலை குண்டுதாரிகளில் ஒருவர் அவுஸ்திஸ்திரேலியாவில் தங்கியிருந்தார்’ என என்னால் உறுதிப்படுத்த முடியும் என அவுஸ்திரேலிய பிரதமர் ஸ்கொட் மொரிசன் கூறினார். மேற்படி நபர் அவுஸ்திரேலிய மாணவர் மற்றும் பட்டதாரி விசாவை வைத்திருந்தார். அத்துடன் மனைவி மற்றும் பிள்ளையொன்றுக்கான விசாவை கொண்டிருந்தார். 2013 ஆம் ஆண்டில் அவுர்கள் அவுஸ்திரேலியாவிலிருந்து வெளியேறினர். அதன்பின் அந்நபர் ...

Read More »

கொழும்பு குண்டுவெடிப்பில் காயமடைந்த மெல்பேர்ன் பெண்ணை அவுஸ்ரேலியா கொண்டு செல்ல நடவடிக்கை!

கொழும்பு குண்டுவெடிப்பில் மெல்பேர்ன் பெண் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த சம்பவத்தில் படுகாயமடைந்துள்ள தனது மகளை மெல்பேர்னுக்கு கொண்டுவந்து மேலதிக சிகிச்சைகளை மேற்கொள்வதற்கு தன்னாலான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துவருவதாக சம்பவத்தில் காயமடைந்த 28 வயது பெண்ணின் தந்தை கூறியுள்ளார். கொழும்பு கிங்கஸ்பரி ஹோட்டலில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் படுகாயமடைந்துள்ள குறிப்பிட்ட பெண்ணுக்கு கால் முறிந்துள்ளது. சன்னங்கள் நுரையீரல் வரைக்கும் பாய்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு சத்திரசிகிச்சைகளின் பின்னர் தற்போது வைத்தியசாலையில் உள்ள இவருக்கு மேலதிக சிகிச்சைகள் தொடர்ந்து வழங்கப்பட்டுவருகின்றன. காயமடைந்த பெண்ணின் தந்தை ரஞ்சித் வீரசிங்க மேலும் ...

Read More »

பெற்றோரை பார்க்க சென்ற அவுஸ்திரேலிய பிரஜைகள் தற்கொலை குண்டுத்தாக்குதலில் பலி!

இலங்கையில் இடம்பெற்ற குண்டுத்தாக்குதலில் அவுஸ்திரேலியா பிரஜைகளான இரண்டு சிங்கள இனத்தவர்  பலியாகியுள்ளனர். Manik Suriaaratchi மற்றும் 10 வயதான அவரது மகள் Alexendria ஆகியோர் நீர்கொழும்பு கட்டுவப்பிட்டிய St. Sebastian தேவாலயத்தில்  நடந்த குண்டு வெடிப்பில் கொல்லப்பட்டுள்ளனர். அவுஸ்திரேலியர்களான இவர்கள் தமது பெற்றோரை பார்க்க இலங்கை சென்றுள்ளனர். ஈஸ்டர் ஞாயிறு வழிபாடுகளில் கலந்துக்கொண்டனர். சம்பவம் நடைபெற்ற போது Manik Suriaaratchiயின் கணவர் Mawjood வாகனத்தை நிறுத்த சென்றிருந்ததால் அவர் காயங்களுடன் உயிர் தப்பியுள்ளார். இலங்கையில்   நடந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவங்களை அவுஸ்திரேலிய பிரதமர் Scott ...

Read More »

அவுஸ்ரேலியர் ஒருவர் காயம்!

சிறிலங்காவில் நேற்று நடந்த தொடர் குண்டுவெடிப்புகளில் 36 வெளிநாட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்றும், 9 பேர் காணாமல் போயிருப்பதாகவும், சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. அவுஸ்ரேலியர்கள் எவரும் நேற்றைய குண்டுத் தாக்குதல்களில் உயிரிழக்கவில்லை என்று அவுஸ்ரேலிய அமைச்சர், சைமன் பேர்மிங்ஹாம் தெரிவித்துள்ளார். எனினும், அவுஸ்ரேலியர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார் என்றும், அவர் கூறியுள்ளார்.

Read More »

அவுஸ்திரேலிய சுற்றுலா பயணிக்கு சரமாரி கத்திக்குத்து!

தாய்லாந்தில் இளம்பெண்ணின் ஆடையை களைய முயன்றவரிடம் இருந்து மீட்கும் பணியில் ஈடுபட்ட அவுஸ்திரேலிய சுற்றுலாப்பயணி மீது சரமாரி கத்திக்குத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அவுஸ்திரேலியாவை சேர்ந்த 43 வயதான வெய்ன் மார்க்ஸ் என்பவர், தாய்லாந்தில் தன்னுடைய நண்பர்களுடன் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். கடந்த வியாழக்கிழமையன்று வெய்ன் மார்க்ஸ் தன்னுடைய நண்பர்கள் சிலருடன் மதுக்கடை ஒன்றில் அமர்ந்திருந்துள்ளார். அப்போது அங்கு வந்த தாய்லாந்தை சேர்ந்த சானி இன்ராராங் (30), நேரடியாக ஒரு பெண்ணிடம் சென்று மேலாடையை கழற்றி தருமாறு வற்புறுத்தியுள்ளார்.அதற்கு மறுப்பு தெரிவித்த அந்த பெண், சிறிது நேரம் ...

Read More »