அவுஸ்ரேலியாவில் டி20 கிரிக்கெட் தொடர் முடிவடைந்த அடுத்த நாளில் இந்தியாவில் டெஸ்ட் தொடர் தொடங்குவதால் அட்டவணையை வார்னர் விமர்சித்துள்ளார். இலங்கை அணி அவுஸ்ரேலியாவில் சுற்றுப் பயணம் செய்து மூன்று டி20 கிரிக்கெட் போட்டியில் விளையாட இருக்கிறது. முதல் போட்டி அடுத்த மாதம் 17-ந்திகதி தொடங்குகிறது. 2-வது போட்டி 19-ந்தேதியும், 3-வது மற்றும் கடைசி போட்டி 22-ந்திகதியும் நடக்கிறது. அடுத்த நாள் 23-ந்திகதி இந்தியாவில் முதல் டெஸ்ட் போட்டியில் அவுஸ்ரேலியா அணி விளையாட இருக்கிறது. அந்த அணி இந்தியாவிற்கு எதிரான டெஸ்ட் போட்டிக்கு முக்கியத்துவம் கொடுக்கிறது. ...
Read More »அவுஸ்திரேலியமுரசு
நீச்சல் குளத்தில் விழுந்து இரட்டை குழந்தைகள் பலி!
அவுஸ்ரேலியா நாட்டில் நீச்சல் குளத்தில் தவறி விழுந்து இரட்டை குழந்தைகள் பலியாகியுள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவுஸ்ரேலியாவில் உள்ள சிட்னி நகரில் 23 மாதம் மட்டுமே ஆன இரட்டை குழந்தைகளுடன் பெற்றோர் வசித்து வந்துள்ளனர். சில தினங்களுக்கு முன்னர் வீட்டில் உள்ள நீச்சல் குளத்திற்கு அருகில் குழந்தைகள் இருவரும் விளையாடிக்கொண்டு இருந்துள்ளனர். குழந்தைகளின் தாயார் வீட்டிற்குள் இருந்ததாக கூறப்படுகிறது. சில நிமிடங்களுக்கு பிறகு குழந்தைகளின் சத்தம் எதுவும் கேட்காததால் வியப்படைந்த தாயார் அங்கு சென்று பார்த்துள்ளார். அப்போது, நீச்சல் குளத்தில் இரண்டு குழந்தைகளும் ...
Read More »சிட்னி சர்வதேச டென்னிஸ்: வோஸ்னியாக்கி வெற்றி
சிட்னி சர்வதேச டென்னிஸ் போட்டியின் பெண்கள் ஒற்றையர் பிரிவில் உலகின் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனை கரோலின் வோஸ்னியாக்கி மோனிகா புய்க்கை வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறினார். சிட்னி சர்வதேச டென்னிஸ் போட்டி ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவில் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் உலகின் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனை கரோலின் வோஸ்னியாக்கி (டென்மார்க்) 6-3, 2-6, 6-4 என்ற செட் கணக்கில் ஒலிம்பிக் சாம்பியன் மோனிகா புய்க்கை (புயர்டோரிகா) வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறினார். மற்றொரு ஆட்டத்தில் ...
Read More »ஊழல் புகார் எதிரொலி: அவுஸ்ரேலிய மந்திரி பதவி விலகினார்
அரசுப் பணத்தை சொந்த செலவுகளுக்காக பயன்படுத்தியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ள அவுஸ்ரேலிய சுகாதாரத்துறை மந்திரி சூசன் லேய் தற்காலிகமாக பதவி விலகியுள்ளார். அவுஸ்ரேலியாவில் ஆளும் லிபரல் கட்சியை சேர்ந்த முக்கிய தலைவர்களின் ஆதரவுடன் முன்னாள் பிரதமர் டோனி அபாட்-டை பதவி நீக்கம் செய்த மால்கோம் டர்ன்புல், கடந்த 2015-ம் ஆண்டு அந்நாட்டின் புதிய பிரதமராக பதவி ஏற்றார். மால்கோம் டர்ன்புல் தலைமையிலான ஆட்சியில் சுகாதாரம், முதியோர் நல்வாழ்வு மற்றும் விளையாட்டு துறை மந்திரியாக பதவி வகிக்கும் சூசன் லேய் என்ற பெண்மணியின் மீது அடுக்கடுக்காக குற்றச்சாட்டுகள் பெருகி ...
Read More »அவுஸ்ரேலிய பேட்ஸ்மேன்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள்
இந்திய தொடரின்போது ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள் என்று வார்னர் தெரிவித்துள்ளார். அவுஸ்ரேலியா அணி இலங்கை, தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான தொடரை இழந்தது. ஆனால் தற்போது பாகிஸ்தானுக்கு எதிரான தொடரை 3-0 எனக் கைப்பற்றியது. தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான கடைசி டெஸ்டின் வெற்றியின் மூலம் தொடர்ச்சியாக அந்த அணி நான்கு வெற்றிகளை பெற்றுள்ளது. இதனால் அவுஸ்ரேலியா புத்துணர்ச்சி பெற்றுள்ளது. இருந்தாலும் ஆசிய மண்ணில் அந்த அணி பெரிய வெற்றி பெற்றதில்லை. 19 போட்டிகளில் தோல்வியை சந்திக்காத இந்தியாவை நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் சந்திக்க ...
Read More »அவுஸ்ரேலியாவில் தமிழ் தேசியமொழியாக்கப்படுகின்றது!
அவுஸ்திரேலியாவில் தமிழ் மொழியை தேசிய மொழியாக அரசாங்கம் அறிவிக்கவேண்டுமென அவுஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் முன்மொழியப்பட்டுள்ளது. இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, மொறீசியஸ், கனடா ஆகிய நாடுகளைத் தொடர்ந்து அவுஸ்திரேலியாவிலும் தமிழ் மொழி தேசிய மொழியாக அறிவிக்கப்படுவது ஒவ்வொரு தமிழருக்கும் பெருமையைத் தேடித்தந்துள்ளது.
Read More »இந்திய தொடர் மிகவும் கடினமாக இருக்கும் – ஸ்மித்
இந்திய தொடர் மிகவும் கடினமாக இருக்கும் என்று அவுஸ்ரேலிய அணியின் வீரர்களுக்கு கேப்டன் ஸ்மித் எச்சரித்துள்ளார். அவுஸ்ரேலியா- பாகிஸ்தான் அணிகளுக்கான இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலியா 3-0 எனக் கைப்பற்றியுள்ளது. இந்த வெற்றிக்குப் பிறகு அவுஸ்ரேலியா அணியின் கப்டன் ஸ்மித் வீர்ரகளுக்கு ஒரு எச்சரிக்கை விடுத்துள்ளார். அதில் இனி வரப்போகும் இந்திய தொடர் மிகவும் கடினமாக இருக்கப்போகிறது என்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஸ்மித் கூறுகையில் ‘‘இந்தியா தொடரில் இந்த அணியின் முக்கிய குழுதான் பங்கேற்க போகிறது. எங்கள் அணியின் சிலர்தான் ...
Read More »மெல்போர்னில் தமிழர் விளையாட்டு விழா
ஆண்டுதோறும் தமிழர் ஓருங்கிணைப்பு குழுவினால் கேணல் கிட்டு உட்பட 10 வீரர்களின் நினைவாக நடத்தப்படும் “தமிழர் விளையாட்டு விழா 2017” இன்று (8) மெல்போர்னில் நடக்கிறது. ஆண்டுதோறும் தமிழர் ஓருங்கிணைப்பு குழுவினால் கேணல் கிட்டு உட்பட 10 பேரின் நினைவாக நடத்தப்படும் “தமிழர் விளையாட்டு விழா 2017” ஜனவரி மாதம் 8-ந்தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை கிழக்கு புர்வுட் ரிசர்வ் (East Burwood Reserve) மைதானத்தில் நடைபெற ஏற்பாடாகியுள்ளது. இந்நிகழ்வில் வழமைபோல் துடுப்பெடுத்தாட்டம், கரப்பந்தாட்டம், ...
Read More »இந்தோனேசிய இராணுவ வீரர்களைச் சேர்த்துக்கொள்ளும் திட்டதை அவுஸ்ரேலியா மறுப்பு
இந்தோனேசியாவின் ஆகச் சிறந்த இராணுவ வீரர்களைச் சேர்த்துக்கொள்ள,அவுஸ்ரேலியா நடவடிக்கை எடுத்துவருவதாகக் வெளிவந்த குற்றச்சாட்டுகளை ஆஸ்திரேலிய அதிகாரிகள் மறுத்துள்ளனர். அவுஸ்ரேலியா வுக்கும் இந்தோனேசியாவுக்கும் இடையிலான விவகாரம் தொடர்பான விசாரணை முடியும் தருவாயில் இருப்பதாக, அவுஸ்ரேலிய தற்காப்பு அமைச்சர் Marise Payne கூறினார். அந்த விவகாரத்தை ஆஸ்திரேலியா கடுமையாகப் பார்ப்பதாக அவர் சொன்னார். இந்தோனேசியாவின் கொள்கைகளை அவமதிக்கும் வகையிலான குறிப்புகள், அவுஸ்ரேலிய சிறப்புப் படைகளுக்கான தளத்தில், பயிற்சி ஆவணங்களில் இருந்ததாக தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து இந்தோனேசியா, அவுஸ்ரேலியாவுடனான அனைத்து ராணுவ ஒத்துழைப்பையும் தற்காலிகமாக நிறுத்தியுள்ளது.
Read More »அவுஸ்ரேலியா – பாகிஸ்தான் அணிகள் இடையிலான கடைசி டெஸ்ட்
சிட்னியில் நடந்து வரும் ஆஸ்திரேலியா – பாகிஸ்தான் அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் யூனிஸ்கான் சதம் அடித்து சாதனை படைத்துள்ளார். அவுஸ்ரேலியா – பாகிஸ்தான் அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சிட்னியில் நடந்து வருகிறது. இதில் ஆஸ்திரேலியா 538 ரன்கள் குவித்து ‘டிக்ளேர்’ செய்ததை தொடர்ந்து, தனது முதல் இன்னிங்சை ஆடிய பாகிஸ்தான் 2-வது நாள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 126 ரன்கள் எடுத்திருந்தது. அசார் அலி (58 ரன்), யூனிஸ்கான் ...
Read More »