அவுஸ்திரேலியமுரசு

ஆஸ்திரேலிய கடல்வழியை பரிசோதித்த ஆட்கடத்தல்காரர்கள் நடுக்கடலில் சிக்கினர்!

இந்தோனேசியா/ ஆஸ்திரேலியா: படகு வழியாக ஆஸ்திரேலியா அடையும் முயற்சியில் ஈடுபட்ட ஆட்கடத்தல்காரர்கள் மற்றும் தஞ்சக்கோரிக்கையாளர்கள், ஆஸ்திரேலியா எல்லையை நெருங்கியிருந்த நிலையில் அந்நாட்டு கடற்படையினரால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளனர்.  இந்தோனேசியாவை சேர்ந்த 3 பேரையும் சீனாவை சேர்ந்த 7 பேரையும் கொண்டிருந்த அப்படகு, பின்னர் திருப்பி அனுப்பப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவை ஆளும் டர்ன்புல் அரசாங்கத்தின் எல்லைப் பாதுகாப்பு கொள்கையின் அடிப்படையில் கடந்த ஜூன் மாத மத்தியில் இப்படகு திருப்பி அனுப்பப்பட்டதாக ‘தி டெய்லி டெலிகிராப்’ என்ற ஆஸ்திரேலியா ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.  கடந்த டிசம்பர் 2017க்கு பிறகு, ஆஸ்திரேலியா எல்லைக்கு ...

Read More »

குடும்பங்களை பிரிக்கும் நாடுகடத்தலை நிறுத்துமாறு ஐநா கோரிக்கை!

அண்மையில் நாடுகடத்தபட்ட தீலீபன் என்ற இளைஞரின் சம்பவத்தை சுட்டிகாட்டியுள்ள ஐநா அகதிகளுக்கான நிறுவனம், குடும்பங்களை பிரிக்கும் நாடுகடத்தலுக்கு கவலை வெளியிட்டுள்ளது. அவுஸ்திரேலிய அரசிடம் குறித்த இளைஞரை நாடுகடத்தவேண்டாம் எனக் கேட்டுக் கொண்ட போதும், தங்களால் அந்த நாடுகடத்தலை தடுக்கமுடியாமல் போனமை கவலை அளிப்பதாக அதன் செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது. மேலும் இத்தகைய குடும்பங்களை பிரிப்பது, அடிப்படை மனிதவுரிமை மீறல் எனவும் இத்தகைய நடவடிக்கைகளை நிறுத்துமாறும் கேட்டுக்கொள்வதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழ் அகதிகள் சபை வெளியிட்டுள்ள அறிக்கை: UNHCR, the UN Refugee Agency, ...

Read More »

விசா நிராகரிக்கப்படுவோர் விரைவான நடவடிக்கை எடுப்பது அவசியம்!

அவுஸ்திரேலியாவில் அகதி தஞ்சகோரிக்கை விண்ணப்பங்கள் அண்மைக்காலத்தில் அதிகமாக நிராகரிக்கப்பட்டுவருகின்றது. இன்று மனைவிக்கும் மகளுக்கு விசா வழங்கப்பட்ட நிலையில் திலீபன் என்ற 30 வயதுடைய இளைஞர் ஒருவர் விசா விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டு சிறிலங்காவுக்கு நாடுகடத்தப்பட்டுள்ளார். குறுகிய காலஅவகாசம் வழங்கப்பட்டே இத்தகைய நாடுகடத்தல் நடவடிக்கைகளை அவுஸ்திரேலிய குடிவரவுத்துறை தொடர்ச்சியாக மேற்கொண்டுவருவதால் போதிய மாற்று ஏற்பாடுகளை செய்வதற்கு காலஅவகாசம் கிடைப்பதில்லை என அகதிகளுக்கான சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். விசா கோரிக்கை நிராகரிக்கப்பட்டவர்கள் உடனடியாக தமிழ்ச்சமூக செயற்பாட்டாளர்களையோ அல்லது அகதி தஞ்சகோரிக்கைகளை கையாளுகின்ற சட்டவாளர்ளை தொடர்புகொண்டு தேவையான உதவிகளை ...

Read More »

இன்று 18 இலங்கையர்களை அவுஸ்திரேலிய அரசாங்கம் நாடு கடத்தியது!

அவுஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமாகச் சென்ற 18 இலங்கையர்களை அவுஸ்திரேலிய அரசாங்கம் நாடு கடத்தியுள்ளது. புகலிடம் கோரி அவுஸ்திரேலியா சென்ற 18 பேர் தனி விமானம் மூலம் இன்று (17) காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர். அவர்களுடன் அவுஸ்திரேலிய நாட்டு அதிகாரிகள் அடங்கிய 36 பேர் கொண்ட குழுவும் வருகை தந்துள்ளது. குறித்த 18 பேரையும் கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகளிடம் அவுஸ்திரேலிய அதிகாரிகள் ஒப்படைத்துள்ளனர். A-319 எயார் பஸ் மூலம் 160 பேர் பயணிக்க கூடிய விமானம் ஒன்றிலேயே குறித்த இலங்கையர்களை அவுஸ்திரேலிய ...

Read More »

காதலன் இறந்த பின்பும் தொடரும் காதல்!

அவுஸ்திரேலியாவை சேர்ந்த காதலி ஒருவர் புற்றுநோயால் இறந்துபோன தனது காதலனின் விந்தணுவை நீதிமன்றத்தின் உதவியுடன் போராடி வாங்கியுள்ளார். Ayla Creswell மற்றும் Joshua Davies ஆகிய இருவரும் கடந்த 3 ஆண்டுகளாக உயிருக்கு உயிராக காதலித்து வந்துள்ளனர். இருவரும் திருமணம் செய்து குழந்தை பெற்றுக்கொள்ள முடிவு செய்தபோது விதி இவர்களது வாழ்க்கையில் விளையாடியது. துரதிஷ்டவசமாக Joshua Davies க்கு புற்றுநோய் ஏற்பட்டதையடுத்து அவர் இறந்துபோனார். ஆனால் இவர் இறந்துபோவதற்கு முன்னர் இவரது விந்தணுக்கள் பர்க்கிம்ஹாமில் உள்ள Human Fertilisation and Embryology Authority (HFEA) ...

Read More »

தமிழ் இளைஞர் சிட்னியிலிருந்து நாளை நாடுகடத்தல்! எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்!!

அவுஸ்திரேலியாவின் சிட்னியிலிருந்து தமிழ்க்குடும்பம் ஒன்றின் தந்தையான தமிழ் இளைஞர் ஒருவர் நாளை திங்கட்கிழமை பலவந்தமாக நாடுகடத்தப்படவுள்ளார். அகதி தஞ்சகோரிக்கையுடன் 2012 இல் அவுஸ்திரேலியா வந்தடைந்த 30 வயதான திலீபன் 2016 இல் இன்னொரு அகதி தஞ்சகோரிக்கையுடன் வந்தடைந்த பெண்ணை திருமணம் செய்து வாழ்ந்துவந்தார். இவர்களுக்கு கடந்த ஆண்டு செப்ரம்பரில் மகள் ஒருவர் பிறந்துள்ளார். எனினும் இவ்வாண்டின் ஆரம்பத்தில் விலாவுட் தடுப்புமுகாமுக்கு அழைத்துச்செல்லப்பட்ட திலீபன் இதுநாள் வரை தொடர்ந்து தடுத்துவைக்கப்பட்டிருக்கிறார். கடந்த கிழமை இவரது மனைவிக்கும் மகளுக்கு ஐந்து வருட தற்காலிக வதிவிடவுரிமை வழங்கப்பட்டிருந்த நிலையில், ...

Read More »

அவுஸ்திரேலியாவில் பிடிப்பட்ட 600 கிலோ முதலை!

அவுஸ்திரேலியாவில் 600 கிலோ எடையுள்ள முதலை ஒன்று சுற்றுலாத்தறை அதிகாரிகளால் உயிருடன் பிடிக்கப்பட்டுள்ளது.அஸ்திரேலியாவில் வடக்கு பகுதியில் காத்ரீன் ஆறு அதிக எடையுடன் கூடிய ராட்சத முதலை வந்தது. அந்த முதலை பொதுமக்கள் வாழும் பகுதிக்குள் நுழைந்து வந்தது.5 மீட்டர் நீளமுள்ள அந்த ஆண் முதலை 600 கிலோ எடை உள்ளது. இது கடந்த 60 ஆண்டுகளாக உயிர் வாழ்கிறது. தற்போது அது முதலைகள் பண்ணையில் விடப்பட்டுள்ளன.

Read More »

அவுஸ்திரேலியாவில் குடியேறிய இந்தியப் பெண்ணின் சோகமுடிவு!

இரண்டு குழந்தைகளின் தாயான சுப்றாஜ் தனது நான்கு மாத குழந்தையுடனுன் மேல்மாடியிலிருந்து குதித்து இறந்தமைக்கு அவரது தனிமை உணர்வு தான் காரணம் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது. யூலை மாதம் 14 ஆம் திகதி 2016 அன்று நடந்த இச்சம்பவம் பற்றிய விசாரணை முடிவிலேயே நீதிமன்றம் இக்கருத்தை தெரிவித்துள்ளது. பிரசவத்திற்கு பின்னர் ஏற்படும் மனவழுத்தம் காரணமாக இச்சம்பவம் நடைபெற்றது என்றும் இதனை சுகாதார பிரிவு கவனத்திற்கொள்ளவேண்டும் என நீதிபதி தெரிவித்துள்ளார். மனவழுத்தம் தொடர்பான விசாரிப்புகளின்போது அதுபற்றிய கவலைகளை வெளியிட்டிருக்கவில்லை எனவும் நான்கு தடவைகள் அவரது வீட்டிற்கு ...

Read More »

அவுஸ்திரேலியாவில் குடியுரிமைக்காக காத்திருக்க வேண்டிய காலம்….!

அவுஸ்திரேலியாவில் குடியுரிமைக்காக விண்ணப்பித்துள்ள ஒருவர் காத்திருக்க வேண்டிய காலம் அதிகரித்துச் செல்கிறது. இதுகுறித்து குடியுரிமை மற்றும் பல்கலாச்சார விவகாரங்களுக்கான அமைச்சர் ஆலன் டட்ஜ் (Alan Tudge) விளக்கியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில்; குடியுரிமை கோரியவர்களின் விண்ணப்பங்கள் தற்போது 14-17 மாதத்திற்குள் பரிசீலிக்கப்படுகிறது என கூறியுள்ளார். பரிசீலனை செய்வதற்கு காலதாமதமாவதற்கு சில காரணங்கள் இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 01. குடியுரிமைக்காக விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கையானது 2010 முதல் 2018 வரையில் மூன்று மடங்காகியுள்ளது. 02. தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக குடியுரிமைக்கான விண்ணப்பங்கள் கடுமையான பாதுகாப்பு விதிகளின் ...

Read More »

தந்தையிடமிருந்து தங்கையை காப்பாற்றும் முயற்சியில் உயிர்துறந்த அண்ணன்!

தந்தையிடமிருந்து தங்கையை காப்பாற்றுவதற்காக சகோதரன் தனது உயிரை பணயம் வைத்து இறந்த சம்பவம் அவுஸ்திரேலியாவில் இடம்பெற்றுள்ளது. கடந்த வாரம் ஜோன் எட்வேட்ஸ் என்ற நபர் தனது மகனையும் மகளையும் சுட்டுக்கொன்ற சம்பவம் சிட்னியில் இடம்பெற்றுள்ளது. அவுஸ்திரேலியாவை உலுக்கியுள்ள இந்த சம்பவம் குறித்து புதிய தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. 15 வயது ஜக் எட்வேட்ஸ் தனது தந்தையின் துப்பாக்கி பிரயோகத்திலிருந்து சகோதரியை காப்பற்றுவதற்காக உயிர்விட்டமை தற்போது தெரியவந்துள்ளது. தந்தை துப்பாக்கியுடன் தாயின் வீட்டிற்கு வந்த வேளை சிறுவன் தனது சகோதரியை காப்பாற்றுவதற்கு அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டுள்ளான். ...

Read More »