அவுஸ்திரேலியாவில் அகதி தஞ்சகோரிக்கை விண்ணப்பங்கள் அண்மைக்காலத்தில் அதிகமாக நிராகரிக்கப்பட்டுவருகின்றது.
இன்று மனைவிக்கும் மகளுக்கு விசா வழங்கப்பட்ட நிலையில் திலீபன் என்ற 30 வயதுடைய இளைஞர் ஒருவர் விசா விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டு சிறிலங்காவுக்கு நாடுகடத்தப்பட்டுள்ளார்.
குறுகிய காலஅவகாசம் வழங்கப்பட்டே இத்தகைய நாடுகடத்தல் நடவடிக்கைகளை அவுஸ்திரேலிய குடிவரவுத்துறை தொடர்ச்சியாக மேற்கொண்டுவருவதால் போதிய மாற்று ஏற்பாடுகளை செய்வதற்கு காலஅவகாசம் கிடைப்பதில்லை என அகதிகளுக்கான சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
விசா கோரிக்கை நிராகரிக்கப்பட்டவர்கள் உடனடியாக தமிழ்ச்சமூக செயற்பாட்டாளர்களையோ அல்லது அகதி தஞ்சகோரிக்கைகளை கையாளுகின்ற சட்டவாளர்ளை தொடர்புகொண்டு தேவையான உதவிகளை பெற்றுக்கொள்வதன் மூலமே மீள்பரிசீலனை விண்ணப்பங்களை முறையாக செய்வதற்கான காலஅவகாசம் கிடைக்கும் எனவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
உதவிகள் தேவைப்படுவோர் தமிழ் சமூக செயற்பாட்டாளர்களையோ அல்லது தமிழ் ஏதிலிகள் கழகத்தையோ (Tamil Refugee Council) தொடர்புகொள்ளலாம்.