அவுஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமாகச் சென்ற 18 இலங்கையர்களை அவுஸ்திரேலிய அரசாங்கம் நாடு கடத்தியுள்ளது.
புகலிடம் கோரி அவுஸ்திரேலியா சென்ற 18 பேர் தனி விமானம் மூலம் இன்று (17) காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.
அவர்களுடன் அவுஸ்திரேலிய நாட்டு அதிகாரிகள் அடங்கிய 36 பேர் கொண்ட குழுவும் வருகை தந்துள்ளது.
குறித்த 18 பேரையும் கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகளிடம் அவுஸ்திரேலிய அதிகாரிகள் ஒப்படைத்துள்ளனர்.
A-319 எயார் பஸ் மூலம் 160 பேர் பயணிக்க கூடிய விமானம் ஒன்றிலேயே குறித்த இலங்கையர்களை அவுஸ்திரேலிய அரசு நாடுகடத்தியுள்ளது.
அவுஸ்திரேலியாவில் இருந்து நாடுகடத்தப்பட்ட இலங்கையர்கள் பப்புவா நியூகினியாவில் உள்ள தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டவர்கள் என கூறப்படுகிறது.