அவுஸ்திரேலியமுரசு

ஆஸ்திரேலியா எங்கும் ஆர்ப்பாட்டம்!

ஆஸ்திரேலியாவில் படகு வழியாக தஞ்சமடைய முயன்று மனுஸ் மற்றும் நவுருத்தீவில் 6ஆண்டுகளுக்கு மேலாக சிறைவைக்கப்பட்டுள்ள அகதிகளை விடுவிக்கக் கோரி மெல்பேர்ன், சிட்னி உள்ளிட்ட ஆஸ்திரேலியாவின் பல பகுதிகளில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது. இதில் பங்கேற்ற ஆயிரக்கணக்கான ஆஸ்திரேலியர்கள், ‘அகதிகளை ஆஸ்திரேலியாவுக்கு கொண்டு வரவும், நாங்கள் அமைதியாக இருக்க மாட்டோம், ஆறு ஆண்டுகள் ரொம்ப அதிகம், ’ உள்ளிட்ட கோஷங்களை எழுப்பியுள்ளனர். 2013ம் ஆண்டு காலக்கட்டத்தில், ஆஸ்திரேலியாவில் படகு வழியாக தஞ்சமடையும் அகதிகளின் எண்ணிக்கை அதிகரித்திருந்த நிலையில் அப்போதைய பிரதமர் கெவின் ருட் தலைமையிலான லேபர் அரசாங்கம் ...

Read More »

கடிதத்தை எழுதியவர் கிடைத்து விட்டார்!

அவுஸ்திரேலிய சிறுவன் ஒருவன் மீன் பிடிக்கச் சென்றபோது கிடைத்த பாட்டிலில் இருந்த கடிதத்தின் சொந்தக்காரர் கிடைத்து விட்டார், ஆனால் கடிதம் கிடைத்த விடயம் அவருக்கு தெரியாது! அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த Jyah Elliott (13) தனது தந்தையுடன் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றபோது, கடலில் மிதந்து வந்த ஒரு பாட்டிலுக்குள் கடிதம் ஒன்று இருப்பதைக் கண்டெடுத்தான். 50 ஆண்டுகளுக்குமுன் Paul Gilmore என்பவர், அப்போது அவருக்கு 13 வயது, அந்தகடிதத்தை எழுதியிருந்தார். அவர் பிரித்தானியாவிலுள்ள Southhamptonஇலிருந்து அவுஸ்திரேலியாவின் மெல்போர்னுக்கு தனது குடும்பத்துடன் TSS Fairstar என்ற ...

Read More »

அவுஸ்ரேலிய கடலில் மிதந்து வந்த கடிதம்!

அவுஸ்திரேலியாவை சேர்ந்த ஜியா எலியட் என்கிற சிறுவன் கடந்த சில தினங்களுக்கு முன் தன்னுடைய அப்பா பால் உடன் மேற்கு கடற்கரையில் மீன் பிடிக்க சென்றுள்ளான். அப்போது கடலில் ஒரு பாட்டில் மிதந்து வந்துள்ளது. அந்த பாட்டிலுக்குள் ஒரு குறிப்புடன் கூடிய கடிதம் எழுதப்பட்டிருந்தது. அந்த கடிதம் பிரித்தானியாவை சேர்ந்த 13 வயது சிறுவனால் 50 வருடங்களுக்கு முன் எழுதப்பட்டதாக நம்பப்படுகிறது. மேற்கில் ஃப்ரீமாண்டில் இருந்து கிழக்கில் மெல்போர்ன் வரை தெற்கு அவுஸ்திரேலிய கடற்கரையில் ஒரு கப்பல் பயணத்தில் இருந்த 13 வயது சிறுவனின் ...

Read More »

ஆஸ்திரேலிய மாடல் அழகி 100 மணி நேரம் சமூக சேவை செய்ய உத்தரவு!

ஆஸ்திரேலியாவை சேர்ந்தவர் பிரபல மாடல் அழகி அடவ் மார்ன்யங்கை, 100 மணி நேரம் சமூக சேவை செய்ய  நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆஸ்திரேலியாவை சேர்ந்தவர் பிரபல மாடல் அழகி அடவ் மார்ன்யங். போரால் பாதிக்கப்பட்ட தெற்கு சூடானில் இருந்து, தனது 10 வயதில் ஆஸ்திரேலியாவில் குடியேறிய இவர், 2017-ம் ஆண்டு உலக அழகி இறுதி போட்டியில் ஆஸ்திரேலியா சார்பில் பங்கேற்றார். அத்துடன் தனது பருவ வயதில் தான் பலாத்காரத்துக்கு உள்ளானது குறித்தும், அதன் கொடுமைகள் குறித்தும் ‘பேஸ்புக்’ நேரலையில் பதிவிட்டு மக்களின் கவனத்தை ஈர்த்து மேலும் ...

Read More »

ஆஸ்திரேலியாவில் காணாமல் போன இந்திய மாணவர் பிணமாக மீட்பு!

ஆஸ்திரேலியாவில் நண்பர்களுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து சென்ற இந்திய மாணவர் ஒருவர் பிணமாக மீட்கப்பட்டுள்ளார். இந்தியாவை சேர்ந்த 21 வயது நிரம்பிய இளைஞர் போஷிக் சர்மா. இவர் ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் தங்கி அங்குள்ள பல்கலைகழம் ஒன்றில் படித்து வந்தார். இந்நிலையில் கடந்த வெள்ளிகிழமை சர்மாவும் அவரது நண்பர்களும் இணைந்து விக்டோரியா மாகாணத்தின் மேரிஸ்விலி பகுதியில் உள்ள பொழுதுபோக்கு விடுதிக்குச் சென்றனர். அந்த பொழுதுபோக்கு விடுதியில் மது அருந்தி கொண்டிருந்தபோது சர்மாவுக்கும் அவரது நண்பர்களுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால் ...

Read More »

ஆஸ்திரேலியாவில் பணம், காரை திருடி 900 கிலோ மீட்டர் பயணம் செய்த சிறுமி-சிறுவர்கள்!

ஆஸ்திரேலியா நாட்டில் மீன் பிடிக்க செல்லும் ஆர்வத்தில் குடும்பத்தாருக்கு தெரியாமல் பணம் மற்றும் காரை திருடிச் சென்ற ஒரு சிறுமி மற்றும் 3 சிறுவர்களை 900 கிலோமீட்டர் தூரத்தில் காவல் துறையினர் கண்டுபிடித்தனர். ஆஸ்திரேலியா நாட்டில் 17 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு வாகனங்களை ஓட்டும் உரிமம் வழங்கப்படுவதில்லை. இந்நிலையில், குவீன்ஸ்லாந்து மாநிலத்தின் கிரேஸ்மேர் பகுதியில் வசிக்கும் ஒரு சிறுமி மற்றும் 3 சிறுவர்கள் தங்களது குடும்பத்தாருக்கு தெரியாமல் வெகுதூரம் சென்று மீன்பிடிக்க திட்டமிட்டனர். அவர்களில் ஒருவர் தனது வீட்டில் பணத்தை எடுத்துக்கொண்டு வீட்டைவிட்டு செல்வதாக கடிதம் ...

Read More »

ஆஸ்திரேலியாவில் 6.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்!

ஆஸ்திரேலியா நாட்டின் புரூம் நகரில் இன்று காலை 6.4 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ஆஸ்திரேலியா நாட்டின் புரூம் நகரின் மேற்கே சுமார் 210 கிலோ மீட்டர் தொலைவில் இன்று காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆக பதிவாகி உள்ளது என ஐரோப்பிய மத்திய தரைப்பகுதி நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்த தகவல்கள் உடனடியாக வெளியாகவில்லை.

Read More »

மனிதர்களிடம் உதவி கோரிய ஒரு மீன்!

தனது கண்ணுக்குக் கீழ் சிக்கிக் கொண்ட கொக்கிகளை அகற்ற, மீன் ஒன்று மனிதர்களிடம் உதவி கோரும் அபூர்வ வீடியோ ஒன்று வெளியாகி பிரமிப்பை ஏற்படுத்தியுள்ளது. அவுஸ்திரேலியாவின் Ningaloo வளைகுடாவுக்கு சுற்றுலாப்பயணிகளை அழைத்துச் செல்லும் Jake Wilton, தண்ணீருக்கடியில் புகைப்படம் எடுக்கும் கலைஞரும் கூட. அப்படி அவர் தண்ணிருக்குள் செல்லும்போது manta ray என்னும் ஒருவகை மீன் ஒன்று மீண்டும் மீண்டும் அவரருகே வந்திருக்கிறது. வழக்கமாக அப்பகுதியில் புகைப்படம் எடுப்பவர் என்பதால், Wiltonக்கு அந்த மீன் அவருக்கு பழக்கமான Freckles என்ற பெயர் கொண்ட மீன் ...

Read More »

ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது இங்கிலாந்து!

உலகக்கோப்பை அரை இறுதிப் போட்டியில் ஜேசன் ராய் அதிரடி ஆட்டத்தால் 8 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இறுதிச்சுற்றுக்கு முன்னேறியது இங்கிலாந்து. இங்கிலாந்து – ஆஸ்திரேலியா இடையிலான உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் 2-வது அரையிறுதி ஆட்டம் பர்மிங்காம் எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்றது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி டேவிட் வார்னர், ஆரோன் பிஞ்ச் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். ஆரோன் பிஞ்ச் டக் அவுட்டனார். டேவிட் வார்னர் 9 ரன்னிலும், பீட்டர் ஹேண்ட்ஸ்காம்ப் 4 ரன்னிலும் அவுட்டாகினர். அடுத்து இறங்கிய ...

Read More »

அவுஸ்ரேலிய படகு விபத்தில் மூவர் உயிரிழப்பு!

அவுஸ்ரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் கடற்பகுதியில் இடம்பெற்ற படகு விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர். சிட்னிக்கு வடக்கே 160 கி.மீ (100 மைல்) தொலைவிலுள்ள நியூகேஸில் இன்று(வியாழக்கிழமை) இந்த படகு விபத்து இடம்பெற்றுள்ளது. இதனைத்தொடர்ந்து விபத்து இடம்பெற்ற பகுதிக்கு விரைந்த அவசர மீட்பு படையினர் இருவரை காப்பாற்றியுள்ளனர். 40 வயதான ஆண்ணொருவரும், 16 வயதான பெண்ணொருவருமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாகவும், மீட்கப்பட்டவர்கள் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது. அத்துடன், குறித்த படகு விபத்தில் உயிரிழந்தவர்களின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவுஸ்ரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்தநிலையில் குறித்த படகு ...

Read More »