ஆஸ்திரேலியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட 7வது நபர் மரணமடைந்துள்ளார். ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தைச் சேர்ந்த 81 வயது மூதாட்டியே இவ்வாறு மரணமடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது. கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் மட்டும் இதுவரை 6 பேர் மரணமடைந்துள்ளனர். கடந்த 24 மணிநேரத்தில், நியூ சவுத் வேல்ஸில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக 75 பேர் கண்டறியப்பட்டுள்ளனர். இதையடுத்து, இம்மாநிலத்தில் வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 382 ஆக உயர்ந்துள்ளது. இந்த நிலையில், ஆஸ்திரேலியா முழுதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 700-யை தாண்டியுள்ளது.
Read More »அவுஸ்திரேலியமுரசு
கொரோனாவை ஓழிக்க ஏற்கனவே இருக்கும் சில மருந்துகள் பயன்படலாம்!
ஏற்கனவே இருக்கும் சில மருந்துகளே கொரோனாவை ஓழிக்க பயன்படலாம் என்கிறார்கள் அவுஸ்திரேலிய மருத்துவர்கள். சீனாவிலிருந்து அவுஸ்திரேலியா திரும்பிய சீனர்கள் சிலர், சீனாவில் சில மருந்துகள் கொரோனாவுக்கெதிராக பயன்படுத்தப்பட்டு பலனளிப்பதாக தகவல் அளித்துள்ளார்கள். அவர்கள் கூறிய செய்தியின் அடிப்படையில், அவுஸ்திரேலியாவில் வாழும் சீன நோயாளிகள் சிலருக்கு அந்த மருந்து கொடுக்கப்பட்டு சோதிக்கப்பட்டுள்ளது. சிகிச்சையளிக்கப்பட்ட அந்த நோயாளிகள் அனைவரும் நல்ல முன்னேற்றம் காட்டியிருகிறார்கள். அந்த மருந்து, ஹெச்.ஐ.விக்கான சிகிச்சையில் பயன்படுத்தப்படும் மருந்து! ஆக, ஹெச்.ஐ.விக்கான சிகிச்சை மற்றும் மலேரியாவுக்கான சிகிச்சையில் பயன்படுத்தப்படும் மருந்துகள் கொரோனாவைக் குணப்படுத்தும் என ...
Read More »சவால்களை சந்திக்கும் பெண்களின் கதைகளை நான் சொல்ல விரும்புகிறேன்!
ஆஸ்திரேலியாவில் கலாச்சார ரீதியாக, மொழி ரீதியாக வேறுபட்ட பெண்கள் குறைவான ஊதியத்திற்கு பணியாற்றும் நிலை இருப்பதாகக் கூறப்படுகின்றது. ஆனால் சிலரின் வழிகாட்டுதலின் படி சில பெண்கள் தங்கள் துறைகளில் சிறந்து விளங்கி வருகின்றனர். ஆப்பிரிக்க- ஆஸ்திரேலிய பெண்ணான ஹவானட்டு பங்குரா திரைப்படக்கலை சார்ந்த துறையில், தன்னை நிலைநிறுத்திக் கொண்டது இதற்கு ஒரு சான்றாக அமைந்திருக்கிறது. இவர் சியாரா லியோனிலிருந்து வெளியேறி ஆஸ்திரேலியாவில் அகதியாக தஞ்சமடைந்தவர். “என்னைப் போன்ற பெண்களின் கதைகளை, சவால்களை சந்திக்கும் பெண்களின் கதைகளை நான் சொல்ல விரும்புகிறேன்,” எனக் கூறும் ஹவானட்டு ...
Read More »பாடல் பதிவுக்கு ஆஸ்திரேலிய எல்லைப்படை அதிகாரிகள் அனுமதி மறுப்பு!
ஆஸ்திரேலிய ஹோட்டலில் தடுத்து வைக்கப்பட்டுள்ள குர்து அகதியும் இசையமைப்பாளருமான மோஸ்தபா அசிமிடபரின் பாடல் பதிவுக்கு ஆஸ்திரேலிய எல்லைப்படை அதிகாரிகள் அனுமதி மறுத்துள்ளனர். சுமார் 7 ஆண்டுகளாக மனுஸ்தீவில் சிறைவைக்கப்பட்டிருந்த மோஸ்தபா, மருத்துவ சிகிச்சைக்காக ஆஸ்திரேலியாவுக்குள் அனுமதிக்கப்பட்டுள்ளார். நான்கு மாதங்கள் மெல்பேர்ன் நகரில் உள்ள ஒரு ஹோட்டலில் தங்கவைக்கப்பட்டுள்ளார். மாற்று தடுப்பு மையாக அறியப்படும் இந்த ஹோட்டலில் இவருடன் 55 அகதிகள் வைக்கப்பட்டுள்ளனர். மோஸ்தபா பப்பு நியூ கினியாவில் தடுப்பில் வைக்கப்பட்டிருந்த போது நியூசிலாந்து இசைக்கலைஞர் ரூத் முண்டேவுடன் இணைந்து ‘தி பேர்ட்ஸ்’ என்ற பாடலை ...
Read More »ஆஸ்திரேலியா-நியூசிலாந்து ஒருநாள் கிரிக்கெட் தொடர் ஒத்திவைப்பு
கொரோனா அச்சம் காரணமாக ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால் பொது நிகழ்ச்சிகள், விளையாட்டுப் போட்டிகள் மற்றும் மக்கள் கூடும் நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்படுகின்றன. கொரோனா அச்சம் காரணமாக மார்ச் 16-ம் திகதி முதல் ஏப்ரல் 12-ம் திகதி வரை நடைபெறுவதாக இருந்த அனைத்து பேட்மிண்டன் போட்டித் தொடர்களையும் உலக பேட்மிண்டன் கூட்டமைப்பு நிறுத்தி வைத்துள்ளது. அவ்வகையில் இந்தியாவில் வரும் 24-ம் திகதி தொடங்கவிருந்த இந்தியா ஓபன் பேட்மிண்டன் தொடரும் திகதி குறிப்பிடப்படாமல் தள்ளி ...
Read More »அவுஸ்திரேலியாவில் சிறிய ரக விமான விபத்து : 5 பேர் உயிரிழப்பு!
அவுஸ்திரேலியாவில் சீரற்ற வானிலை காரணமாக சிறிய ரக விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் 5 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செயதிகள் தெரிவிக்கின்றன. வட அவுஸ்திரேலிய மாநிலமான குயின்ஸ்லான்ந்து பகுதியிலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. இன்று காலை 11.30 மணியளவில் பறந்துக்கொண்டிருந்து விமானம் சீரற்ற காலநிலயை தொடர்ந்து காணாமல் போயுள்ளதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றதை அடுத்தே , அந்நாட்டின் பூர்வீக சமூக குடியேற்றமான லாக்ஹார்ட் கடற்கரை அருகே விமானத்தின் பாகங்கள் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையிலேயே விமானம் அப்பகுதியில் விபத்துக்குள்ளாகி 5 பேர் உயிரிழந்துள்ளனர் என அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Read More »எங்களுக்கு பெவன் அல்லது டோனி போன்ற பினிஷர் தேவை!
ஆஸ்திரேலிய அணிக்கு பெவன் அல்லது டோனி போன்ற பினிஷர் தேவை என்று அந்த அணியின் தலைமை பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் தெரிவித்துள்ளார். ஒயிட்-பால் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியாவின் முன்னாள் வீரர் பெவன் மற்றும் இந்தியாவின் எம்எஸ் டோனி ஆகியோர் தலைசிறந்த பினிஷர் என்றால் அது மிகையாகாது. இவர்களை போன்ற ஒரு பினிஷர் ஆஸ்திரேலிய அணிக்கு தேவை என்று அந்த அணியின் தலைமை பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஜஸ்டின் லாங்கர் கூறுகையில் ‘‘கடந்த காலத்தில் நாங்கள் மைக் ஹசி அல்லது மைக்கேல் பெவன் ஆகியோரை ...
Read More »நிரம்பி வழிந்த மெல்போர்ன் கிரிக்கெட் மைதானம்!
இந்தியா – ஆஸ்திரேலியா பெண்கள் அணி விளையாடிய டி20 உலக கோப்பை இறுதி போட்டியை மெல்போர்ன் மைதானத்தில் 86,174 பேர் பார்வையிட்டது சாதனையாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தியா – ஆஸ்திரேலியா பெண்கள் அணி மோதிய டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவின் புகழ்பெற்ற மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெற்றது. பொதுவாக ‘பாக்சிங் டே’ டெஸ்ட் போட்டிதான் மெல்போர்ன் மைதானத்தில் நடத்தப்படும். டிசம்பர் 26-ந்தேதி தொடங்கும் முதல் நாளில் ரசிகர்களால் மைதானம் நிரம்பி வழியும். மைதானத்தின் முழு இருக்கைகளான 86,1764-ம் நிரம்பிவிடும். அதேபோல் ...
Read More »டி 20 உலகக் கோப்பை- ஆஸ்திரேலிய அணி சாம்பியன்!
மகளிர் 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் 5-வது முறையாக ஆஸ்திரேலிய அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. மகளிர் 20 ஓவர் உலக கோப்பையின் இறுதிப் போட்டி மெல்போர்னில் இன்று தொடங்கியது. இதில் இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி, ஆஸ்திரேலியா அணியின் தொடக்க வீராங்கனைகளாக அலிசா ஹீலி, பெத் மூனி களமிறங்கினர். ஆட்டத்தின் தொடக்கம் முதலே இருவரும் அதிரடியாக ஆடினர். இதனால் அணியின் ரன் வேகம் கணிசமாக ...
Read More »இலங்கை – அவுஸ்திரேலிய லெஜன்ட் அணிகளுக்கிடையேயான ஆட்டம் இன்று!
வீதிப் பாதுகாப்பு இருபதுக்கு : 20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் இன்று இடம்பெறும் ஆட்டத்தில் இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகள் மோதவுள்ளன. ஐந்து அணிகள் பங்குபெறும் வீதிப் பாதுகாப்பு இருபதுக்கு : 20 உலகக் கிண்ணத் தொடரானது நேற்று ஆரம்பமானது. மொத்தமாக 11 போட்டிகள் உள்ளடக்கப்பட்டுள்ள இத் தொடரின் இறுதிப் போட்டியானது எதிர்வரும் 22 ஆம் திகதி மும்பையில் இடம்பெறவுள்ளது. நேற்றைய தினம் இடம்பெற்ற இத் தொடரின் முதல் போட்டியில் இந்திய மற்றும் மேற்கிந்தியத்தீவுகள் லெஜன்ட் அணிகள் மோதின. போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ...
Read More »