தோள்பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக அவுஸ்ரேலிய ஆல்-ரவுண்டர் மிட்செல் மார்ஷ் எஞ்சிய போட்டிகளில் விளையாடமாட்டார் என்று அவுஸ்ரேலிய கிரிக்கெட் வாரியம் நேற்று அறிவித்தது. மெல்போர்னில் நேற்று முன்தினம் நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான 2-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் அவுஸ்ரேலிய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்த ஆட்டத்தின் போது அவுஸ்ரேலிய ஆல்-ரவுண்டர் மிட்செல் மார்ஷ் தோள்பட்டையில் காயம் அடைந்தார். இதனால் தொடரில் எஞ்சிய போட்டிகளில் அவர் விளையாடமாட்டார் என்று அவுஸ்ரேலிய கிரிக்கெட் வாரியம் நேற்று அறிவித்தது. அவருக்கு பதிலாக ஆல்-ரவுண்டர் ...
Read More »அவுஸ்திரேலியமுரசு
அவுஸ்ரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் பெடரர், வாவ்ரிங்கா வெற்றி
அவுஸ்ரேலிய ஓபன் டென்னிஸ் திருவிழாவில், முதல் சுற்றில் பெடரர், வாவ்ரிங்கா வெற்றி பெற்றனர். ‘கிராண்ட்ஸ்லாம்’ என்ற உயரிய அந்தஸ்து பெற்ற போட்டியான அவுஸ்ரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்ன் நகரில் நேற்று தொடங்கியது. முதல் நாளில் ஒற்றையர் பிரிவில் முதல் சுற்று ஆட்டங்கள் நடந்தன. கால் முட்டி காயத்தால் 6 மாதங்கள் ஓய்வுக்கு பிறகு சவால்மிக்க டென்னிஸ் களத்திற்கு திரும்பியுள்ள முன்னாள் நம்பர் ஒன் வீரர் சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர், தகுதி நிலை வீரர் ஜூர்ஜென் மெல்சரை (ஆஸ்திரியா) சந்தித்தார். இதில் 35 வயதான ...
Read More »விண்ணிலிருந்து விழுந்த மர்ம உயிரினம்?
அவுஸ்ரேலியாவில் கடந்த புதன்கிழமை பெய்த மழையில் வித்தியாசமான உயிரினம் ஒன்று சிக்கி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மத்திய அவுஸ்ரேலியாவின் Kintore நகரத்தில் பலத்த வெள்ளம் ஏற்பட்டது. அதனால் அந்த நகரத்தில் உள்ள தேசிய பூங்காக்கள் மூடப்பட்டது. இதில் Finke Gorge தேசிய பூங்காவில் உள்ள பள்ளங்களில் வித்தியாசமான முறையில் இறால் போன்ற சிறிய உயிரினங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதன் தலை வேற்றுக்கிரகவாசிகளின் தோற்றத்தைப்போல் இருப்பதை காணக்கூடியதாக உள்ளது. குறித்த உயிரினம் மீன் போன்று காணப்பட்டாலும் இறாலின் தோற்றத்தை போன்றும், இதன் உடல்கள் முழுவதும் பெரிய கவசத்தை ...
Read More »அவுஸ்ரேலிய அணியில் 4 சுழற்பந்து வீச்சாளர்கள் சேர்ப்பு
இந்தியா- அவுஸ்ரேலியா அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் நாதன் லயன், ஆஷ்டன் அகர், ஸ்டீவ் ஓ கீபே, மிட்செல் ஸ்வெப்சன் ஆகிய 4 சுழற்பந்து வீச்சாளர்கள் அவுஸ்ரேலிய அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவுஸ்ரேலிய கிரிக்கெட் அணி அடுத்த மாதம் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இந்தியா- அவுஸ்ரேலிய அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி புனேயில் பிப்ரவரி 23-ந்தேதி தொடங்குகிறது. இதற்கான 16 பேர் கொண்ட அவுஸ்ரேலிய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. இந்திய ஆடுகளத்தில் சுழற்பந்து ...
Read More »அவுஸ்ரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி இன்று தொடக்கம்
இந்த ஆண்டுக்கான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் திருவிழா மெல்போர்ன் நகரில் இன்று (திங்கட்கிழமை) தொடங்கி 29-ந்திகதி வரை நடைபெறுகிறது. ஆண்டுதோறும் ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்ச் ஓபன், விம்பிள்டன், அமெரிக்க ஓபன் என்று ‘கிராண்ட்ஸ்லாம்’ என்ற உயரிய அந்தஸ்துடன் கூடிய டென்னிஸ் போட்டிகள் நடத்தப்படுகின்றன. இதில் முதலில் வருவது ஆஸ்திரேலிய ஓபன். இந்த ஆண்டுக்கான அவுஸ்ரேலிய ஓபன் டென்னிஸ் திருவிழா மெல்போர்ன் நகரில் இன்று (திங்கட்கிழமை) தொடங்கி 29-ந்தேதி வரை நடைபெறுகிறது. இதையொட்டி முன்னணி வீரர், வீராங்கனைகள் அங்கு முகாமிட்டு தங்களை பட்டை தீட்டி வருகிறார்கள். ...
Read More »அவுஸ்ரேலியாவை வீழ்த்தியது பாகிஸ்தான்
மெல்போர்னில் நடைபெற்ற அவுஸ்ரேலியாவிற்கு எதிரான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அவுஸ்ரேலியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையி்லான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி மெல்போர்னில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் தேர்வு செய்த அவுஸ்ரேலியா 48.2 ஓவரில் 220 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் ஆனது. பின்னர் 221 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணி களம் இறங்கியது. அந்த அணியின் கப்டன் மொகமது ஹபீஸ் தொடக்க வீரராக களம் இறங்கி ...
Read More »கழுத்து பகுதிக்கு கீழ் இயக்கம் இல்லாத இலங்கை இளைஞன் சாதனை
அவுஸ்ரேலிய ஊடகங்கங்களின் பிரபலியமாக மாறி உள்ளார் இலங்கையரான பி.தினேஸ். இவர் பிரிஸ்பேன் பல்கலைக்கழகத்தில் பயின்று வைத்திய கலாநிதியாக வெளியேறி உள்ளார். ஆயினும் இவரின் கதை வேறு. இவர் மூன்றாம் வருடம் படித்து கொண்டிருந்தபோது பாரிய கார் விபத்து ஒன்றில் சிக்கினார். இதனால் இவரின் நெஞ்சு பகுதிக்கு கீழ் எந்தவொரு இயக்கமும் இல்லை. இருப்பினும் பல சவால்களை முறியடித்து தொடர்ந்து படித்து வைத்தியராகி உள்ளார். இவரின் மகத்தான சாதனை ஏனையோருக்கு முன்னுதாரணமாகி உள்ளன.
Read More »இந்தியாவிற்கு எதிராக அவுஸ்ரேலியா மோசமாக விளையாடலாம்: லயன்
இந்தியாவிற்கு எதிராக நடைபெற இருக்கும் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் அவுஸ்ரேலியா மோசமாக விளையாடலாம் என லயன் கூறியுள்ளார். அவுஸ்ரேலிய கிரிக்கெட் அணி நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக அடுத்த மாதம் இந்தியா வருகிறது. முதல் போட்டி பிப்ரவரி 23-ந்திகதி புனேவில் தொடங்குகிறது. 2-வது போட்டி பெங்களூருவில் மார்ச் 4-ந்திகதி முதல் 8-ந்திகதி வரையும், 3-வது டெஸ்ட் ராஞ்சியில் மார்ச் 16-ந்திகதி முதல் 20-ந்தேதி வரையும், 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் மார்ச் 25-ந்திகதி முதல் 29-ந்திகதி வரை தரம்சாலாவிலும் ...
Read More »அவுஸ்ரேலியா- பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான முதல் ஒரு நாள் போட்டி
அவுஸ்ரேலியா- பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான முதல் ஒரு நாள் போட்டியில் அவுஸ்ரேலிய அணி 78 ரன்னுக்கு 5 விக்கெட்டை இழந்து விளையாடி வருகிறது. அவுஸ்ரேலியா- பாகிஸ்தான் அணிகள் 5 போட்டிக் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகின்றன. இதன் முதல் போட்டி பிரிஸ்பேனில் இன்று தொடங்கியது. டாஸ் ஜெயித்த அவுஸ்ரேலியா பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க வீரர் டேவிட் வார்னர் 7 ரன்னிலும், கேப்டன் சுமித் ரன் எதுவும் எடுக்காமலும் அவுட் ஆனார்கள். அதன்பின் கிறிஸ்லீன் (16), ஹேட் (39), மிஷ்சேல் மார்ஷ் (4) ஆகியோர் ...
Read More »ரோலர் கோஸ்டரில் சிக்கித்தவித்த 20 பேர் பத்திரமாக மீட்பு
அவுஸ்ரேலியாவில் உள்ள பொழுதுபோக்கு பூங்காவில் ரோலர் கோஸ்டரில் சிக்கித்தவித்த 20 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். அவுஸ்ரேலியா நாட்டின் மூவி வேர்ல்ட் பொழுதுபோக்கு பூங்காவைச் சேர்ந்த ரோலர் கோஸ்டரில் 20 பேர் பயணம் செய்தனர். சங்கிலியில் ஏற்பட்ட கோளாறு காரணமாக ரோலர் கோஸ்டர் திடீரென நடுவழியில் நின்றுவிட்டது. இதனால் தரையிலிருந்து 20 மீட்டர் உயரத்தில் ரோலர் கோஸ்டரின் உள்ளே 20 பேரும் சிக்கிக் கொண்டனர். இதனைத் தொடர்ந்து மீட்புப்படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ரோலர் கோஸ்டரில் சிக்கித்தவித்த 20 பேரையும் பத்திரமாக மீட்டனர். ...
Read More »