விண்ணிலிருந்து விழுந்த மர்ம உயிரினம்?

அவுஸ்ரேலியாவில் கடந்த புதன்கிழமை பெய்த மழையில் வித்தியாசமான உயிரினம் ஒன்று சிக்கி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மத்திய அவுஸ்ரேலியாவின் Kintore நகரத்தில் பலத்த வெள்ளம் ஏற்பட்டது. அதனால் அந்த நகரத்தில் உள்ள தேசிய பூங்காக்கள் மூடப்பட்டது.

இதில் Finke Gorge தேசிய பூங்காவில் உள்ள பள்ளங்களில் வித்தியாசமான முறையில் இறால் போன்ற சிறிய உயிரினங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இதன் தலை வேற்றுக்கிரகவாசிகளின் தோற்றத்தைப்போல் இருப்பதை காணக்கூடியதாக உள்ளது.

குறித்த உயிரினம் மீன் போன்று காணப்பட்டாலும் இறாலின் தோற்றத்தை போன்றும், இதன் உடல்கள் முழுவதும் பெரிய கவசத்தை கொண்டும் காணப்படுகின்றது.

எனினும் இந்த உயிரினங்களை பாதுகாத்து அவற்றின் முட்டைகளை எடுத்து ஆராய்ச்சி செய்தால் மட்டுமே இதைப்பற்றி முழுமையான தகவல்கள் கிடைக்கப்பெறும் எனவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.