அவுஸ்ரேலியாவுடனான வர்த்தக ரீதியான உறவை மேலும் மேம்படுத்த எதிர்ப்பார்த்திருப்பதாக இஸ்ரேல் பிரதமர் பென்சமின் நெதன்யாஹு தெரிவித்துள்ளார். அவுஸ்திரேலியாவிற்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டிருந்த இஸ்ரேல் பிரதமர், அவுஸ்திரேலிய பிரதமர் மெல்கம் டர்ன்புல் உள்ளிட்ட அதிகாரிகளை சந்தித்து கலந்துரையாடினார் குறித்த சந்திப்பை தொடர்ந்தே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அங்கு கருத்து தெரிவித்த அவுஸ்திரேலிய பிரதமர், ஜனநாயகம், சுதந்திரம், சட்டத்தின் ஆட்சி என இரு நாடுகளும் ஒரே மதிப்பை கொண்டுள்ளது. அதன்படி, இரு நாடுகளும் ஒன்றிணைந்து பல்வேறு விடயங்களை முன்னெடுக்க வேண்டியுள்ளது. இரு நாடுகளும் புதிய சாதனைகளுடன், எமது ...
Read More »அவுஸ்திரேலியமுரசு
அவுஸ்ரேலியா நிதான ஆட்டம்
இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், முதலில் விளையாடி வரும் அவுஸ்ரேலிய அணி துவக்க விக்கெட்டுகளை இழந்த நிலையில் நிதானமாக விளையாடி வருகிறது. ஸ்டீவன் ஸ்மித் தலைமையில் அவுஸ்ரேலிய கிரிக்கெட் அணி 4 டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்காக இந்தியா வந்துள்ளது. இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி மராட்டிய மாநிலம் புனேயில் இன்று தொடங்கியது. வங்காளதேசத்துக்கு எதிரான டெஸ்டில் விளையாடிய புவனேஸ்வர் குமார் 11 பேர் கொண்ட அணியில் இருந்து நீக்கப்பட்டார். அவர் இடத்தில் புதுமுக வீரர் ஜெயந்த் யாதவ் ...
Read More »அவுஸ்ரேலியாவில் அதிர்ச்சியூட்டும் சம்பவம்!
8 வயது சிறுவன் ஒருவனை பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியமை மற்றும் ஆயுதத்தைக் காண்பித்து கொலை அச்சுறுத்தல் விடுத்தமை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் 10 வயது சிறுவன் ஒருவன் கைதுசெய்யப்பட்டு சிறுவர்களுக்கான நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்ட சம்பவம் அவுஸ்திரேலியாவில் செவ்வாய்க்கிழமை இடம்பெற்றுள்ளது. பேர்த் நகரின் வட புறநகரப் பகுதியை சேர்ந்த குறிப்பிட்ட சிறுவன் தன்னை விடவும் இரு வயது இளமையான சிறுவனை கத்தியைக் காண்பித்து கொலை அச்சுறுத்தல் விடுத்து பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியுள்ளார். பேர்த் சிறுவர் நீதிமன்றத்தில் இடம்பெற்ற இந்த வழக்கு விசாரணையின் போது மேற்படி வழக்கை விசாரித்த நீதிபதி, ...
Read More »அவுஸ்ரேலிய அரசு வழங்கும் சர்வதேச புலமைப்பரிசிலுக்கான விண்ணப்பங்கள்
அவுஸ்ரேலிய அரசு வழங்கும் 2018ம் ஆண்டுக்குரிய Australia Awards சர்வதேச புலமைப்பரிசிலுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. இலங்கை, பாகிஸ்தான், நேபாளம், பங்களாதேஷ், மாலைதீவு, பூட்டான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த Masters பட்டப்படிப்பை மேற்கொள்ள விரும்பும் மாணவர்கள் இதற்கு விண்ணப்பிக்க முடியும். எதிர்வரும் ஏப்ரல் 30ம் திகதிக்கு முன்னதாக இதற்கு விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு விண்ணப்பிப்பதற்கு நீங்கள் தகுதியானவரா என்று அறிந்து கொள்வதற்கும், இதற்கான விண்ணப்பத்தைத் தாக்கல் செய்வதற்கும் கீழ்க்காணும் இணைப்புக்குச் செல்லுங்கள். https://www.australiaawardssouthwestasia.org/
Read More »மெல்பேர்னில் வர்த்தக அங்காடியுடன் மோதியது விமானம்: ஐவர் உயிரிழப்பு
அவுஸ்ரேலியாவின் மெல்பேர்ன் நகரில் உள்ள அங்காடி ஒன்றின் மீது, இலகுரக விமானம் ஒன்று மோதி விபத்துள்ளானதில் அதில் பயணித்த ஐவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்து இன்று (செவ்வாய்கிழமை) உள்ளூர் நேரப்படி காலை 09.00 மணியளவில் ஏற்பட்டுள்ளது. குறித்த இலகுரக விமானத்தின் இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறே குறித்த விபத்திற்கு காரணம் என கண்டறியப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த விபத்து தொடர்பில் கருத்து தெரிவித்த பொலிஸ் உதவி ஆணையர் ஸ்டெபன் லியேன் (Stephen Leane), விபத்துக்குள்ளான விமானம் Essendon விமானநிலையத்திலிருந்து புறப்பட்டு சிறிது நேரத்திலேயே விபத்துக்குள்ளானது எனவும் ...
Read More »சிட்னியில் கேப்பாபுலவு மக்களிக்கு ஆதரவு தெரிவித்து போராட்டம்!
சிட்னியில் கேப்பாபுலவு மக்களிக்கு ஆதரவு தெரிவித்து போராட்டம். https://www.facebook.com/pathivumedia/videos/928529963949812/
Read More »அவுஸ்ரேலியாவில் பள்ளிக்கூடத்தில் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட மாணவி தற்கொலை
அவுஸ்ரேலியாவில் பள்ளிக்கூடத்தில் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட மாணவி தற்கொலை செய்வதற்கு முன்னர் எழுதிய கடிதத்தை அவர் தாய் சமூகவலைதளத்தில் பதிவேற்றியுள்ளார். அவுஸ்திரேலியா நாட்டில் வசித்து வருபவர் Linda, இவரின் மகள் பெயர் Cassidy Trevan (13). இவர் அங்குள்ள பள்ளிக்கூடத்தில் படித்து வந்தார். ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னர் Cassidy பள்ளிக்கூடத்தில் இருக்கும் போது அவருடன் படிக்கும் சில மாணவர்களால் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டார். மேலும், அந்த மாணவர்கள் Cassidyவை அடித்து துன்புறுத்தும் செயலிலும் ஈடுப்பட்டுள்ளனர். இதையடுத்து வீட்டுக்கு வந்த Cassidy தற்கொலை செய்ய முடிவெடுத்து ...
Read More »யுத்த குற்ற விசாரணைகள் தொடர்பில் அவுஸ்ரேலியாவின் கோரிக்கை
யுத்த குற்றங்கள் தொடர்பான விசாரணைகளுக்கு சர்வதேச நீதிபதிகள் மற்றும் வழக்கு தொடுனர்கள் சேவைக்கு அமர்த்தப்பட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பொறுப்புக்கூறலை உரிய முறையில் முன்னெடுக்க முடியும் என அவுஸ்ரேலிய மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பின் இயக்குனர் எலைனி பியர்சன்ஸ் தெரிவித்துள்ளார். கடந்த 2015 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில், இலங்கை தொடர்பான விசாரணைகள் குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்ட பரிந்துரைகள் குறித்தும் அவர் பிரஸ்தாபித்துள்ளார்.
Read More »அவுஸ்ரேலியா சிறப்பாக விளையாடினாலும் தொடரை இழப்பது உறுதி
அவுஸ்ரேலிய அணி இந்தியாவுடன் 4 டெஸ்டுகளில் சிறப்பாக விளையாடினாலும் தொடரை இழப்பது உறுதி என்று இந்திய அணியில் இருந்து ஓரங்கட்டப்பட்ட சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன்சிங் கூறியுள்ளார். இந்திய அணியில் இருந்து ஓரங்கட்டப்பட்ட சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன்சிங் அளித்த ஒரு பேட்டியில், ‘ஆஸ்திரேலிய அணி இந்தியாவுடன் 4 டெஸ்டுகளில் விளையாட உள்ளது. இந்த தொடரில் அவுஸ்ரேலியா சிறப்பாக விளையாடும் பட்சத்தில், இந்திய அணி தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றும். அந்த அணி நன்றாக ஆடினால் தான் இந்த நிலைமை. இல்லாவிட்டால் இந்திய அணி 4-0 ...
Read More »3000 குழந்தைகள் பாலியல் துன்புறுத்தல் ரூ. 2000 கோடி இழப்பீடு வழங்க கோரிக்கை
அவுஸ்ரேலியாவில் கிறிஸ்துவ அமைப்புகள் மற்றும் தேவாலயங்களில் பாதிரியார்களால் சுமார் 3000 குழந்தைகள் பாலியல் ரீதியிலான துன்புறுத்தலுக்கு உள்ளாகியிருக்கிற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 1980 முதல் 2015ம் ஆண்டு வரை அவுஸ்ரேலியா கிறிஸ்தவ அமைப்புக்கள் மற்றும் தேவாலயங்களில் பணிபுரிந்த பாதிரியார்கள், சுமார் 3000 குழந்தைகளிடம் பாலியல் ரீதியான தாக்குதல் நடத்தியதாக பொதுவிசாரணை அமைப்ப கண்டறிந்ததுள்ளது. இந்த விசாரணையின் அடிப்படையில், பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதன் விளைவாக சுமார் 2000 கோடி ரூபாய் இழப்பீடாகப் பெற்றுத்தரப்பட்டுள்ளதாக பொதுவிசாரணை அமைப்பின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டிலேய அதிக ...
Read More »