சிட்னி ANZ அரங்கில் NRL premiership இறுதிச்சுற்று நேற்று இடம்பெற்றது. இந்த ஆட்டத்தில் Melbourne Storm அணி North Queensland Cowboys அணியினை வென்றுள்ளது. 34-6 என்ற கணக்கில் வென்று வெற்றிக் கனியை எட்டிப்பிடித்து கோப்பையை தனதாக்கிக் கொண்டுள்ளது.
Read More »அவுஸ்திரேலியமுரசு
அவுஸ்ரேலியாவிற்கு எதிரான டி20 கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணி அறிவிப்பு
அவுஸ்ரேலியாவிற்கு எதிரான 3 டி20 கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஆஷிஷ் நெஹ்ரா, தினேஷ் கார்த்திக் ஆகியோர் மீண்டும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்தியாவுக்கு எதிராக 5 ஒருநாள் மற்றும் 3 டி20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலியா அணி செப்டம்பர் மாதம் 17-ம் திகதி இந்தியா வந்தது. ஒருநாள் தொடரை இந்திய அணி 4-1 என்ற கணக்கில் அபாரமாக கைப்பற்றியது. இந்நிலையில் டி20 தொடரில் விளையாடும் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த அணியில் ஆஷிஷ் நெஹ்ரா, தினேஷ் கார்த்திக் மற்றும் ஷிகர் தவான் ...
Read More »அவுஸ்ரேலியா: புற்றுநோய் இருப்பதாக கதைவிட்ட வலைப்பதிவருக்கு அபராதம்
உடல்நலம் குறித்து இணையத்தில் பதிவிடும், அவுஸ்ரேலிய வலைப்பதிவர் பெல் கிப்சனுக்கு, தனக்கு புற்றுநோய் உள்ளதாக தவறான தகவல்களை அளித்து, வாசகர்களை ஏமாற்றியதற்காக 3,22,000 டாலர்கள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 25 வயதாகும் பெல் கிப்சன், இயற்கை மருத்துவத்தின் மூலம், புற்றுநோயில் இருந்து குணமடைந்ததாகக் கூறியதைத் தொடர்ந்து, அவுஸ்ரேலியாவில் மிகவும் பிரபலமானார். வெற்றிகரமாக ஒரு செயலியையும், உணவுப் பழக்கம் குறித்த புத்தகத்தையும் வெளியிட்ட அவர், பின்பு தனது நோய் குறித்து பொய் கூறியதாக ஒப்புக்கொண்டார். கடந்த மார்ச் மாதம், நுகர்வோர் சட்டத்தில் 5 விதிமீறல்களை அவர் செய்துள்ளதாக ...
Read More »மெல்பேர்ணில் உணர்வுபூர்வமாக நடைபெற்ற தியாகதீபம் கலைமாலைநிகழ்வு 2017
பாரததேசத்திடம் ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து நல்லூர்க்கந்தன் ஆலய முன்றலில் நீர்கூட அருந்தாது பன்னிருநாட்கள் சாகும்வரை உண்ணாநோன்பிருந்து 26-09-1987 அன்று ஈகைச்சாதவைத் தழுவிக்கொண்ட தியாகதீபம் லெப் கேணல் திலீபன் அவர்களின் முப்பதாவது ஆண்டு நினைவு தினமும் தியாகதீப கலைமாலை நிகழ்வும் 30-09-2017 சனிக்கிழமையன்று மாலை 6.00மணிமுதல் 8.00மணிவரையும் அவுஸ்திரேலியாவில் மெல்பேர்ண் நகரத்தில் சென்யூட்ஸ் மண்டபத்தில் மிகவும் உணர்வுபூர்வமாக நடைபெற்றது. இந்நிகழ்வில் 26-09-2001 அன்று சிறிலங்காப் படைகளின் ஆழஊடுருவும் அணியினரின் கிளைமோர்த் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட விடுதலைப்புலிகளின் மூத்த தளபதி கேணல் சங்கர் அவர்களையும் 25-08-2002 ...
Read More »அவுஸ்ரேலியர்களின் மரணத்திற்கு காரணம் இதுவே! வெளியான தகவல்
அவுஸ்ரேலியர்களின் அதிகளவான மரணத்திற்கு இதயம் சம்பந்தமான நோய்களே காரணம் என சமீபத்தில் வெளியான புள்ளிவிபரங்கள் சுட்டிக்காட்டுகின்றன. அவுஸ்ரேலியாவில் 2016ம் ஆண்டு மரணமடைந்தவர்களில் 12 வீதமானவர்கள் அதாவது 19,077 பேர் இதயநோய் தாக்கத்திற்கு உள்ளாகியிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. அதேநேரம் இரண்டாவது இடத்தில் Dementia ,Alzheimer’s ஆகியன காணப்படுகின்றன. 3ம் இடத்தில் பக்கவாதம் போன்ற cerebrovascular நோய்களும், 4ம் இடத்தில் புற்றுநோயும் இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Read More »ஆட்டிறைச்சி விளம்பரத்தில் விநாயகர்: அவுஸ்ரேலியாவில் கண்டனப் பேரணி!
ஆட்டிறைச்சி விளம்பரத்தில் விநாயகர் சேர்த்துக் கொள்ளப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து கண்டனப் பேரணியொன்று அவுஸ்ரேலியாவில் முன்னெடுக்கப்பட்டுள்ளது. ஆட்டிறைச்சி சாப்பிடுவதை ஊக்கப்படுத்தும் அவுஸ்ரேலிய விளம்பரத்தில், விநாயகரும் சேர்த்துக் கொள்ளப்பட்டமைக்கு இந்து அமைப்புக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர். Meat and Livestock Australia என்ற நிறுவனத்தின் You Never Lamb Alone எனும் தொனிப்பொருளில் புதிய வீடியோ விளம்பரம் வெளியாகியது என்பது குறிப்பிடத்தக்கது, இந்த விளம்பரமானது இந்து மதத்தவர்களை அவமதிப்பதாகவும் அவர்களது மத நம்பிக்கைகளை இழிவுபடுத்தும் விதமாக அமைந்துள்ளதாகவும் பல அமைப்புக்கள் கண்டனம் வெளியிட்டுள்ளன. ஆட்டிறைச்சி உண்பதை ஊக்கப்படுத்தும் அவுஸ்திரேலிய ...
Read More »ஓரினச்சேர்க்கையாளர்களின் திருமணத்திற்கு ஆதரவான வாக்கெடுப்பு
ஓரினச் சேர்க்கையாளர்களின் திருமணத்தை அங்கீகரிக்க வேண்டுமா என்பது தொடர்பில் அஞ்சல் வழி கருத்து வாக்கெடுப்பு ஆரம்பித்துள்ளது. இந்நிலையில், இதற்கான ஆதரவு குறைவடைந்துள்ளதாக, நேற்று (25) வெளியான கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவித்துள்ளன. ஓரினச்சேர்க்கையாளர்களின் திருமணத்திற்கு ஆதரவாக ‘ஆம்’ என்று வாக்களிப்போம் எனக் கூறியவர்களின் எண்ணிக்கை தற்போது குறைவடைந்துள்ளதாக The Australian வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது. அதாவது, கடந்த மாதம் 63 வீதமாக காணப்பட்ட நிலையில், தற்போது அது 57 ஆகக் குறைவடைந்துள்ளது என சுட்டிக்காட்டியுள்ளது. மேலும் இதற்கெதிராக ‘இல்லை’ எனத் தெரிவித்தவர்களின் எண்ணிக்கை 34 சதவீதமாகக் ...
Read More »MDA:மெல்பேர்ன் பெண்களின் ‘ஜிமிக்கி கம்மல்’ நடனம்
Mandy Dance Academy என்பது மெல்பேர்னில் இயங்கும் ஒரு தமிழ் நடனக் குழுவாகும்.இந்நடனக் குழு தொடர்பிலும், இணையத்தில் பிரபலமடைந்திருக்கும் இவர்களது ஜிமிக்கி கம்மல் நடனம் தொடர்பிலும் அதன் நிறுவனர் Mandy மற்றும் அவரது மாணவர்கள் சுஜித் மற்றும் மதுவுடன் ஒரு உரையாடல்.
Read More »அவுஸ்திரேலிய முன்னாள் பிரதமர் மீது தாக்குதல்
அவுஸ்திரேலிய முன்னாள் பிரதமர் டொனி அபொட்டினை தாக்கியதாக நபர் ஓருவர் மீது காவல்துறையினர் குற்றச்சாட்டு சுமத்தியுள்ளனர். 38 வயது நபர் முன்னாள் பிரதமரின் தலையில் குறித்த நபர் தனது தலையால் மோதியதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். ஹொபார்ட்டில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது ஓருபால் திருமணத்திற்கு ஆதரவு தெரிவித்து பிரச்சாரத்தில் ஈடுபடும் நபர் ஓருவர் தன்னை தாக்கினார் என பிரதமர் தெரிவித்துள்ளார். முதலில் அவர் தன்னுடன் கைகுலுக்குமாறு கேட்டார் எனவும் பின்னர் தலையால் இடித்தார் என முன்னாள் பிரதமர் தெரிவித்துள்ளார். ஓருபால் திருமணத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் செய்திகள் ...
Read More »காட்சிகளாக வெளிவந்த வலிகள்!
அவுஸ்திரேலியாவில் கணவனை கொலை செய்த சிறிலங்கா வைத்தியர் சமரி லியனகே கண்காட்சி ஒன்றில் கலந்து கொண்டுள்ளார். கண்காட்சியின் ஊடாக குடும்ப வன்முறை தொடர்பில் மற்றவர்களை ஊக்குவிக்க சமரி எதிர்பார்த்துள்ளார். 2014ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவில் தனது கணவனை சுத்தியலினால் தாக்கி சமரி லியனகே கொலை செய்துள்ளார். கொலை வழக்கு விசாரணையின் போது, சமரி கடுமையான உடல், பாலியல் மற்றும் உளவியல் துஷ்பிரயோகங்களை பல ஆண்டுகளாக தாங்கிக் கொண்டிருந்தார் என்பது தெரியவந்துள்ளது. அவர் கொலைக் குற்றவாளி எனக் குற்றஞ்சாட்டப்பட்டார். நான்கு ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டார். லியனகே பின்னர் பிணையில் ...
Read More »