ஓரினச் சேர்க்கையாளர்களின் திருமணத்தை அங்கீகரிக்க வேண்டுமா என்பது தொடர்பில் அஞ்சல் வழி கருத்து வாக்கெடுப்பு ஆரம்பித்துள்ளது.
இந்நிலையில், இதற்கான ஆதரவு குறைவடைந்துள்ளதாக, நேற்று (25) வெளியான கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவித்துள்ளன.
ஓரினச்சேர்க்கையாளர்களின் திருமணத்திற்கு ஆதரவாக ‘ஆம்’ என்று வாக்களிப்போம் எனக் கூறியவர்களின் எண்ணிக்கை தற்போது குறைவடைந்துள்ளதாக The Australian வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.
அதாவது, கடந்த மாதம் 63 வீதமாக காணப்பட்ட நிலையில், தற்போது அது 57 ஆகக் குறைவடைந்துள்ளது என சுட்டிக்காட்டியுள்ளது.
மேலும் இதற்கெதிராக ‘இல்லை’ எனத் தெரிவித்தவர்களின் எண்ணிக்கை 34 சதவீதமாகக் காணப்படுகின்றது.