அவுஸ்ரேலியாவிற்கு எதிரான 3 டி20 கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஆஷிஷ் நெஹ்ரா, தினேஷ் கார்த்திக் ஆகியோர் மீண்டும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்தியாவுக்கு எதிராக 5 ஒருநாள் மற்றும் 3 டி20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலியா அணி செப்டம்பர் மாதம் 17-ம் திகதி இந்தியா வந்தது. ஒருநாள் தொடரை இந்திய அணி 4-1 என்ற கணக்கில் அபாரமாக கைப்பற்றியது.
இந்நிலையில் டி20 தொடரில் விளையாடும் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த அணியில் ஆஷிஷ் நெஹ்ரா, தினேஷ் கார்த்திக் மற்றும் ஷிகர் தவான் ஆகியோர் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளனர்.
டி20 போட்டிக்கான அணியில் இடம்பெற்றுள்ள வீரர்களின் விவரம் பின்வருமாறு:-
இந்திய அணி:
1. விராட் கோலி(கேப்டன்), 2. ரோஹித் சர்மா, 3. ஷிகர் தவான், 4. கே.எல்.ராகுல், 5. மணிஷ் பாண்டே, 6. கேதார் ஜாதவ், 7. தினேஷ் கார்த்திக், 8. எம்.எஸ்.டோனி, 9. ஹர்திக் பாண்டியா, 10. குல்தீப் யாதவ், 11. யுஸ்வேந்திர சஹல், 12. ஜஸ்பிரித் பும்ரா, 13. புவனேஷ்வர் குமார், 14. ஆஷிஷ் நெஹ்ரா, 15. அக்சர் பட்டேல்.
அவுஸ்ரேலியா அணி:
1. ஸ்டீவ் ஸ்மித்(கேப்டன்), 2. டேவிட் வார்னர், 3. ஜேசன் பெக்ரெண்டார்ஃப், 4. டான் கிறிஸ்டியன், 5. நாதன் கௌல்டர்- நீல், 6. பேட்ரிக் கம்மின்ஸ், 7. ஆரோன் ஃபிஞ்ச், 8. டிராவிஸ் கெட், 9. மோசிஸ் ஹென்றிக்ஸ் 10. கிளென் மேக்ஸ்வெல், 11. டிம் பெயின், 12. கேன் ரிச்சர்ட்சன், 13. ஆடம் ஸம்பா