காட்சிகளாக வெளிவந்த வலிகள்!

அவுஸ்திரேலியாவில் கணவனை கொலை செய்த சிறிலங்கா வைத்தியர் சமரி லியனகே கண்காட்சி ஒன்றில் கலந்து கொண்டுள்ளார்.

கண்காட்சியின் ஊடாக குடும்ப வன்முறை தொடர்பில் மற்றவர்களை ஊக்குவிக்க சமரி எதிர்பார்த்துள்ளார்.

2014ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவில் தனது கணவனை சுத்தியலினால் தாக்கி சமரி லியனகே கொலை செய்துள்ளார்.

கொலை வழக்கு விசாரணையின் போது, சமரி கடுமையான உடல், பாலியல் மற்றும் உளவியல் துஷ்பிரயோகங்களை பல ஆண்டுகளாக தாங்கிக் கொண்டிருந்தார் என்பது தெரியவந்துள்ளது.

அவர் கொலைக் குற்றவாளி எனக் குற்றஞ்சாட்டப்பட்டார். நான்கு ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டார். லியனகே பின்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டார். மேலும் அவரது மருத்துவ அனுமதிப்பத்திரத்தை வழங்குவதற்கு தானே முன்வந்துள்ளார்.

சிறைச்சாலை காவலில் இருந்த போதே அவர் சிகிச்சையின் வடிவமாக ஓவியங்கள் வரைய கற்றுக்கொண்டார்.</p> இந்நிலையில் ஓவியக் கண்காட்சி ஒன்றை நடத்த சமரி லியனகே நடவடிக்கை எடுத்துள்ளார். “நிச்சயமற்ற தன்மை” என்ற தொனிப்பொருளில் முதல் கண்காட்சியை ஆரம்பித்துள்ளார்.

“இது நான் பல ஆண்டுகளாக வாழ்ந்த உணர்ச்சியே” என சமரி குறிப்பிட்டுள்ளார். “அடுத்த ஐந்து நிமிடங்களில், அல்லது ஒரு மணி நேரத்தில் அல்லது ஒரு நாளில் என்ன நடக்கப் போகிறது என்பது பற்றி நிச்சயமற்றதாக இருக்கும், வன்முறை உறவுகள் மூலம் பலர் எப்போதும் எதிர்காலத்தைப் பற்றி நிச்சயமற்றவர்களாக உணர்கிறார்கள்.” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்காக அவர் தனது சொந்த வாழ்க்கை அனுபவத்தை பலருக்கு எடுத்துக்காட்டாக முன்வைக்க விரும்புகின்றார். லியனகேவின் கதை குடும்ப வன்முறை யாரையும் பாதிக்கக் கூடும் என கண்காட்சி நடவடிக்கைகளின் நிர்வாக மேலாளர் Daphne White தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தக் கண்காட்சியை அவுஸ்திரேலியா முழுவதும் நடத்த சமரி லியனகே எதிர்பார்த்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

8327500-3x2-700x467