ஆட்டிறைச்சி விளம்பரத்தில் விநாயகர்: அவுஸ்ரேலியாவில் கண்டனப் பேரணி!

ஆட்டிறைச்சி விளம்பரத்தில் விநாயகர் சேர்த்துக் கொள்ளப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து கண்டனப் பேரணியொன்று அவுஸ்ரேலியாவில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

ஆட்டிறைச்சி சாப்பிடுவதை ஊக்கப்படுத்தும் அவுஸ்ரேலிய விளம்பரத்தில், விநாயகரும் சேர்த்துக் கொள்ளப்பட்டமைக்கு இந்து அமைப்புக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.

Meat and Livestock Australia என்ற நிறுவனத்தின் You Never Lamb Alone எனும் தொனிப்பொருளில் புதிய வீடியோ விளம்பரம் வெளியாகியது என்பது குறிப்பிடத்தக்கது,

இந்த விளம்பரமானது இந்து மதத்தவர்களை அவமதிப்பதாகவும் அவர்களது மத நம்பிக்கைகளை இழிவுபடுத்தும் விதமாக அமைந்துள்ளதாகவும் பல அமைப்புக்கள் கண்டனம் வெளியிட்டுள்ளன.

ஆட்டிறைச்சி உண்பதை ஊக்கப்படுத்தும் அவுஸ்திரேலிய விளம்பரத்தில், இந்துக் கடவுள்களில் ஒருவராக வணங்கப்படும் விநாயகரும் சேர்த்துக் கொள்ளப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து கண்டனப் பேரணி நடத்தப்பட்டது.

குறித்த பேரணியானது நேற்று (திங்கட்கிழமை) சிட்னி, மெல்பர்ன், பிரிஸ்பேன் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் நடத்தப்பட்டது.