அவுஸ்திரேலியமுரசு

நான் சந்தித்ததில் இவர்தான் மிகவும் திறமையான பந்து வீச்சாளர்: ஸ்டீவ் ஸ்மித்

நான் சந்தித்ததில் பாகிஸ்தானைச் சேர்ந்த இவர்தான் மிகவும் திறமையான பந்து வீச்சாளர் என்று ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன் ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலிய அணியின் தலைசிறந்த பேட்ஸ்மேன் ஸ்டீவ் ஸ்மித். எந்த ஆடுகளம், எந்த நாடு என்றெல்லாம் இவருக்கு கவலை இல்லை. உலகின் எந்த திசையில் களம் இறக்கப்பட்டாலும் வேகப்பந்து வீச்சை மிகவும் சுலபமாக எதிர்கொள்ளக் கூடியவர். தொழில்முறை கிரிக்கெட்டிற்கான ஷாட்டுகளை இவர் ஆடவில்லை என்றாலும், பந்தை துல்லியமாக கணித்து விளையாடுவதில் கில்லாடி. இதனால் வேகப்பந்து வீச்சாளர்கள் இவரை எளிதில் சாய்த்து விட இயலாது. இந்நிலையில் ...

Read More »

ஆஸ்திரேலியா கிரிக்கெட் போர்டின் தலைமை நிர்வாகி நீக்கப்படுகிறார்

ஆஸ்திரேலியா கிரிக்கெட் போரட்டின் தலைமை நிர்வாகி கெவின் ராபர்ட்ஸ் நீக்கப்படலாம் எனத் செய்திகள் வெளியாகியுள்ளன. கொரோனா வைரஸ் தொற்றால் கிரிக்கெட் போட்டிகள் நடைபெறாமல் உள்ளன. இதனால் ஆஸ்திரேலியா கிரிக்கெட் போர்டு கடும் நிதி நெருக்கடியை சந்தித்து வருகிறது. நிதி நெருக்கடியை சமாளிக்க கிரிக்கெட் ஆஸ்திரேியா போர்டில் வேலை செய்த அதிகாரிகள் பலர் வேலையில் இருந்து நீக்கப்பட்டனர். மேலும், மாநில அளவிலான கிரிக்கெட் சங்கத்திற்கான நிதியிலும் பிடித்தம் செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கிரிக்கெட் ஆஸ்திரேலியா போர்டின் தலைமை நிர்வாகி கெவின் ராபர்ட்ஸை நீக்கி ...

Read More »

முள்ளிவாய்க்காலில் நடந்தது “திட்டமிட்ட இனப்படுகொலை”

அவுஸ்ரேலியா நியூ சவுத் வேல்ஸ் மாநில நாடாளுமன்ற உறுப்பினர் ஹாக் மெக்டெர் மொட் அவர்கள் ,முள்ளிவாய்க்காலில் நடந்தது “திட்டமிட்ட இனப்படுகொலை “ என்று தனது கருத்தை நீதியின் பக்கம் நின்று பதிவு செய்துள்ளார் .இது சர்வதேச தளத்தில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியது . ஈழத்தில் அரங்கேறிய இன அழிப்பு குறித்து தமிழின அழிப்பு நினைவு நாளில் நீதியின் குரலாக துணிச்சலோடு கருத்துவெளியிட்டதனால் ஹாக் மெக்டெர் மொட் (Hugh McDermont ) அவர்களை எதிர்த்து சிறீலங்கா அரசின் ஆதரவுடன் அவுஸ்திரேலியா வாழ் சிங்களர்களால் அவர் அங்கத்துவம் ...

Read More »

ஆஸ்திரேலிய அகதிகள் மீள்குடியேற்றத்திற்காக அமெரிக்காவுக்கு பயணம்

நவுரு மற்றும் மனுஸ்தீவில் செயல்பட்ட ஆஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்பு முகாமிலிருந்த 28 மாகயுள்ளனர். நவுருத்தீவிலிருந்து வெளியேறும் 24 அகதிகள் சுமார் 7 ஆண்டுகளாக ஆஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்பு முகாமில் சிறைவைக்கப்பட்டிருந்த நிலையில் அமெரிக்காவின் சிக்காகோ மற்றும் பிலடெல்பியா நகரங்களில் வாழ இருக்கின்றனர். இன்றைய நிலையில், சுமார் 200க்கும் மேற்பட்ட அகதிகள் நவுருத்தீவிலும் 180க்கும் மேற்பட்ட அகதிகள் பப்பு நியூ கினியா தீவிலும், 200க்கும் மேற்பட்ட அகதிகள் மருத்துவ சிகிச்சைக்காக ஆஸ்திரேலியாவின் தடுப்பிலும் மாற்று தடுப்பு இடமாக செயல்படும் ஹோட்டல்களிலும் வைக்கப்பட்டுள்ளனர். ஆஸ்திரேலியாவில் ...

Read More »

ஆர்டர் ஆப் ஆஸ்திரேலியா கௌரவ விருதுக்கு மைக்கேல் கிளார்க் தெரிவு

ஆஸ்திரேலிய கிரிக்கெட்டுக்கு அளித்த பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் ‘ஆர்டர் ஆப் ஆஸ்திரேலியா’ என்ற கௌரவ விருதுக்கு மைக்கேல் கிளார்க் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஆஸ்திரேலியாவில் ஒவ்வொரு துறையிலும் சிறந்த சாதனை படைக்கும் நபர்களுக்கு அந்த நாட்டு அரசு பல்வேறு விருதுகள் வழங்கி கவுரவித்து வருகிறது. அந்த வகையில் 2015-ம் ஆண்டில் உலக கோப்பையை வென்ற ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் கேப்டனான மைக்கேல் கிளார்க், ஆஸ்திரேலிய கிரிக்கெட்டுக்கு அளித்த பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் ‘ஆர்டர் ஆப் ஆஸ்திரேலியா’ என்ற கவுரவ விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஆஸ்திரேலியாவில் ஒவ்வொரு ...

Read More »

அவுஸ்திரேலிய அரசின் மதிப்புமிகு விருது பெறும் தமிழர்கள்

மகாராணியின் பிறந்தநாள் 2020 விருது பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. வழக்கம்போலவே ஆஸ்திரேலியாவின் பன்முக கலாச்சாரத் தன்மையை இந்த வருட Queen’s Birthday விருது பட்டியலும் பிரதிபலிக்கிறது. இதன்படி முன்னாள் அரசியல்வாதிகள், விளையாட்டு வீரர்கள் மற்றும் சமூக தொண்டர்கள் என சுமார் 738 ஆஸ்திரேலியர்கள் Queen’s Birthday விருது பெறுவோர் பட்டியலில் இடம்பிடித்து அரசின் Order of Australia எனும் மதிப்புமிகு விருதை பெறுகிறார்கள். மேலும் 128 பேர் சிறப்பு விருது பெறுகிறார்கள். Order of Australia விருதை பெறுபவர்களில் தமிழர்களான Dr.சிதம்பரப்பிள்ளை தவசீலன், Dr.ஆறுமுகம் அழகப்பா ...

Read More »

தமிழ்த்தேசியபற்றாளர் சபேசன் சண்முகம்: இறுதிவணக்க நிகழ்வு!

அவுஸ்திரேலியாவின் விக்ரோரியா மாநில முன்னாள் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பொறுப்பாளர் தமிழ்த்தேசியபற்றாளர் திரு. சபேசன் சண்முகம் அவர்களின் புகழுடலுக்கான இறுதிவணக்க நிகழ்வு இன்று 01-06-2020 திங்கட்கிழமை காலை 10.30 மணிக்கு நடைபெற்றுள்ளது. அன்னாரின் தமிழ்த்தேசியப்பணிக்கு மதிப்பளிக்கும் முகமாக, தமிழர் ஒருங்கிணைப்புக்குழு சார்பாக, அவரது புகழுடலுக்கு தமிழீழ தேசியக்கொடி போர்த்தப்பட்டதுடன் இரங்கல் அறிக்கையும் வாசிக்கப்பட்டது. அறிக்கையின் முழுவடிவம் வருமாறு: தமிழ்த்தேசியப்பற்றாளர் சபேசன் சண்முகம் தமிழீழ விடுதலைப் போராட்டத்தினை உளமார ஏற்று, தாயக மக்களுக்கான விடுதலைப்பணியில், தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டு செயற்பட்டிருந்த தமிழ்த்தேசியபற்றாளர் சபேசன் சண்முகம் அவர்களின் இழப்பு ...

Read More »

சிங்கங்களால் கடித்துக்குதறப்பட்ட அழகிய இளம்பெண் இவர்தான்: புகைப்படம் வெளியானது!

அவுஸ்திரேலிய வன விலங்குகள் பூங்காவில் சிங்கங்களால் கடித்துக்குதறப்பட்ட இளம்பெண் குறித்த விவரங்களும் அவரது புகைப்படமும் வெளியாகியுள்ளன. அவரது பெயர் Jennifer Brown (35). அவுஸ்திரேலியாவின் North Nowraவிலுள்ள Shoalhaven உயிரியல் பூங்காவில், Jennifer சிங்கங்கள் இருக்கும் கெபியை சுத்தம் செய்யச் செல்லும்போது, அவர்மீது பாய்ந்து அவரை தாக்கிய சிங்கங்கள் அவரது தலை மற்றும் கழுத்தைக் கடித்துக் குதறியுள்ளன. சிங்கங்களைக் கையாள்வதில் நிபுணரான Jenniferஐ அந்த சிங்கங்களே கடித்துக்குதறியது ஏன் என்று தெரியவில்லை. அவரது சக ஊழியர்கள் இருவர் சமயோகிதமாக செயல்பட்டு அந்த சிங்கங்களை அப்புறப்படுத்தியிருக்கிறார்கள். ...

Read More »

அவுஸ்திரேலியாவில் பூட்டப்பட்ட அறையில் இரு இளைஞர்கள்! படுக்கையறையில் தந்தையின் சடலம்!

அவுஸ்திரேலியாவின் பிரிஸ்பேனில் பூட்டப்பட்டிருந்த குடியிருப்பு ஒன்றில் இருந்து அரை நிர்வாண கோலத்தில் இரு பதின்ம வயதினரையும், படுக்கையறையில் அவர்களின் தந்தையின் சடலத்தையும் காவல் துறையினர் மீட்டுள்ளனர். பிரிஸ்பேன் நகரில் உள்ள அந்த குடியிருப்பில் இருந்து வாய்விட்டு கதறும் சத்தம் தொடர்ந்து கேட்டுவந்ததையடுத்து, அக்கம்பக்கத்தினர் காவல் துறைக்க தகவல் அளித்துள்ளனர். தகவல் அறிந்து விரைந்து வந்த காவல் துறை , பூட்டப்பட்டிருந்த குடியிருப்பின் உள்ளே புகுந்து பார்த்தபோது அதிர்ந்து போயுள்ளனர். ஒரு அறையில் அரை நிர்வாண கோலத்தில் 17 மற்றும் 19 வயது இளைஞர்கள் பூட்டி ...

Read More »

ஆஸ்திரேலியாவுக்குள் நுழையும் வகையில் 1,905 பேருக்கு பயண விலக்கு

கொரோனா காரணமாக ஆஸ்திரேலிய அரசு விதித்துள்ள எல்லைக் கட்டுப்பாட்டினால், கடந்த மூன்று மாத காலமாக ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆஸ்திரேலியர்கள், ஆஸ்திரேலியா விசா பெற்றவர்கள் வெளிநாடுகளில் சிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டிருக்கின்றது. இந்த காலத்தில் 1,905 பேர் ஆஸ்திரேலியாவுக்குள் நுழையும் வகையில் பயண விலக்கு வழங்கப்பட்டுள்ளது. 253 பேர் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. ஆஸ்திரேலிய எல்லைப்படையின் கணக்குப்படி, இதில் 801 பேருக்கு கருணையின் அடிப்படையில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதே சமயம், அந்த அடிப்படையில் விண்ணப்பித்த 195 பேரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. முன்னதாக, ஆஸ்திரேலிய செனட் விசாரணையில் பேசியிருந்த ...

Read More »