அவுஸ்திரேலிய வன விலங்குகள் பூங்காவில் சிங்கங்களால் கடித்துக்குதறப்பட்ட இளம்பெண் குறித்த விவரங்களும் அவரது புகைப்படமும் வெளியாகியுள்ளன.
அவரது பெயர் Jennifer Brown (35). அவுஸ்திரேலியாவின் North Nowraவிலுள்ள Shoalhaven உயிரியல் பூங்காவில், Jennifer சிங்கங்கள் இருக்கும் கெபியை சுத்தம் செய்யச் செல்லும்போது, அவர்மீது பாய்ந்து அவரை தாக்கிய சிங்கங்கள் அவரது தலை மற்றும் கழுத்தைக் கடித்துக் குதறியுள்ளன.
சிங்கங்களைக் கையாள்வதில் நிபுணரான Jenniferஐ அந்த சிங்கங்களே கடித்துக்குதறியது ஏன் என்று தெரியவில்லை. அவரது சக ஊழியர்கள் இருவர் சமயோகிதமாக செயல்பட்டு அந்த சிங்கங்களை அப்புறப்படுத்தியிருக்கிறார்கள்.
மருத்துவ உதவிக்குழுவினர் வரும்போது சுயநினைவிழந்திருந்த Jenniferக்கு, வன விலங்குகள் பூங்காவில் வைத்தே இரண்டு மணி நேறம் சிகிச்சையளிக்கப்பட்டுள்ளது. அதன் பின்னரே அவர் ஏர் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளார்<
Jenniferஐ தாக்கிய Ariel மற்றும் Juda என்னும் இரண்டு சிங்கங்களுக்கு கடந்த அக்டோபர் மாதம் அவர்தான் பிரமாண்டமாக, கேக்குகளும் தோரணமுமாக பிறந்தநாள் கொண்டாடியிருக்கிறார்.
ஆனால், ஏழே மாதங்களுக்குப்பின் தங்களுக்கு பிறந்தநாள் கொண்டாடிய Jenniferஐயே கோரமாக தாக்கியுள்ளன அந்த சிங்கங்கள் இரண்டும்.