நவுரு மற்றும் மனுஸ்தீவில் செயல்பட்ட ஆஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்பு முகாமிலிருந்த 28 மாகயுள்ளனர்.
நவுருத்தீவிலிருந்து வெளியேறும் 24 அகதிகள் சுமார் 7 ஆண்டுகளாக ஆஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்பு முகாமில் சிறைவைக்கப்பட்டிருந்த நிலையில் அமெரிக்காவின் சிக்காகோ மற்றும் பிலடெல்பியா நகரங்களில் வாழ இருக்கின்றனர்.
இன்றைய நிலையில், சுமார் 200க்கும் மேற்பட்ட அகதிகள் நவுருத்தீவிலும் 180க்கும் மேற்பட்ட அகதிகள் பப்பு நியூ கினியா தீவிலும், 200க்கும் மேற்பட்ட அகதிகள் மருத்துவ சிகிச்சைக்காக ஆஸ்திரேலியாவின் தடுப்பிலும் மாற்று தடுப்பு இடமாக செயல்படும் ஹோட்டல்களிலும் வைக்கப்பட்டுள்ளனர்.
ஆஸ்திரேலியாவில் படகு வழியாக தஞ்சமடைய முயன்ற சுமார் 750 அகதிகள் இதுவரை அமெரிக்காவில் மீள்குடியேற்றப்பட்டுள்ளனர். ஆஸ்திரேலியாவுக்கு படகு வழியாக வர முயற்சிப்பவர்கள் ‘ஒருபோதும் ஆஸ்திரேலியாவில் மீள்குடியமர்த்தப்பட மாட்டார்கள்’ எனக்கூறி வரும் ஆஸ்திரேலிய அரசு, தற்போது அமெரிக்காவில் மீள்குடியேற்றப்படும் அகதிகள் தஞ்சக்கோரிக்கையை மறுத்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பாரக் ஒபாமா ஆட்சியின் இறுதிக்காலக்கட்டத்தில் கையெழுத்தான அகதிகள் ஒப்பந்தம், ஆஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்பு முகாம்களில் உள்ள 1,250 அகதிகளை அமெரிக்காவில்
நிரந்தரமாக குடியமர்த்தவும், அமெரிக்காவின் தடுப்பில் உள்ள மத்திய அமெரிக்க அகதிகளை ஆஸ்திரேலியாவில் குடியமர்த்தவும் வழிவகைச் செய்கின்றது. இது ஒரே முறை நடைமுறைப்படுத்தப்படும் ஒப்பந்தமாக கையெழுத்தானது.
2013 ஆம் ஆண்டு முதல் கடுமையான எல்லைப் பாதுகாப்புக் கொள்கைகளை நடைமுறைப்படுத்தி வரும் ஆஸ்திரேலிய அரசு, படகு வழியே ஆஸ்திரேலியாவில் தஞ்சமடைய முயற்சிப்பவர்களை முழுமையாக நிராகரித்து வருகின்றது.