கொரோனா பெருந்தொற்று சூழலினால், ஆஸ்திரேலியாவில் நிரந்தரமாக குடியேறுபவர்களின் எண்ணிக்கையில் கடும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. கொரோனாவால் ஏற்பட்ட பயண முடக்கம், விசா பரிசீலணையில் தாமதம் உள்ளிட்ட காரணங்களால் கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி இது. தற்போதைய கணக்குப்படி, கடந்த ஜூன் மாதம் நிறைவடைந்த ஆஸ்திரேலியாவின் 2019-20 நிதியாண்டில் 140,366 வெளிநாட்டினருக்கு நிரந்தர விசாக்கள் வழங்கப்பட்டுள்ளன. இது, அரசு திட்டமிட்ட 160,000 என்னும் எண்ணிக்கையை விட குறைவானது. கடந்த பத்தாண்டின் சராசரியே 175,000 எண்ணிக்கையாக உள்ள நிலையில் இது குறிப்பிடத்தக்க வீழ்ச்சியாகப் பார்க்கப்படுகின்றது. சர்வதேச பயணத்திற்கு ...
Read More »அவுஸ்திரேலியமுரசு
ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்தில் சில கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன
ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்தில் புதிதாக 42 பேருக்குக் கிருமித்தொற்று உறுதியானது; 8 பேர் மாண்டனர். சென்ற மாதத் தொடக்கத்தில் கிருமித்தொற்று உறுதியாவோரின் அன்றாட எண்ணிக்கை 700க்கும் அதிகமாகப் பதிவானது. அண்மை நாள்களில் அது ஈரிலக்கத்துக்குக் குறைந்துள்ளது. அதனையடுத்து மாநில அதிகாரிகள் சில கட்டுப்பாடுகளைத் தளர்த்தியுள்ளனர். முதல்வர் டேனியல் ஆண்ட்ரூஸ் (Daniel Andrews)கூறியுள்ளார். இருப்பினும், மாநிலத் தலைநகர் மெல்பர்னில் இம்மாதம் 28ஆம் திகதி வரை கடுமையான முடக்க நிலை நீட்டிக்கப்பட்டுள்ளது.
Read More »கொரோனாவினால் ஆஸ்திரேலியா திரும்ப முடியாமல் தவிக்கும் ஆஸ்திரேலியர்கள்
ஆஸ்திரேலியாவுக்குள் வாரம் 4,000 வெளிநாட்டு வருகைகளை மட்டுமே அனுமதிப்பது என கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள நிலையில் பல ஆஸ்திரேலியர்கள் வெளிநாடுகளில் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. வேலையின்றி, விசாயின்றி, முறையான மருத்துவ வசதியின்றி நாட்டுக்கும் திரும்ப முடியாமல் ஆயிரகக்கணக்கான ஆஸ்திரேலியர்கள் தவித்து வருகின்றனர். உலகின் ஒன்பதாவது வலிமையான கடவுச்சீட்டை அவர்கள், தங்கள் (ஆஸ்திரேலிய) அரசு கொரோனா பெருந்தொற்று சூழலில் கைவிட்டு விட்டதாக கவலைத் தெரிவிக்கின்றனர். ஆஸ்திரேலியாவில் கொரோனாவின் இரண்டாவது அலையை எதிர்நோக்கியிருந்த நிலையில், வாரம் 4 ஆயிரத்திற்கு குறைவான வருகைகள் மட்டுமே அனுமதிக்கப்படும என்ற கட்டுப்பாட்டை கடந்த ...
Read More »மரணப்படுக்கையில் தந்தை… நான்கு பிள்ளைகளில் ஒருவருக்கு மட்டும் காண வாய்ப்பு
அவுஸ்திரேலியாவில் கொரோனா பரவலை தடுக்க இரண்டு மாகாணங்கள் எடுத்துள்ள கடும்போக்கு நடவடிக்கைகளால் ஒரு குடும்பம் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. அவுஸ்திரேலியாவில் நான்கு பிள்ளைகளின் தந்தை ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சையில் இருந்து வருகிறார். ஆனால், இரு மாகாணங்களுக்கு இடையேயான கடுமையான சட்டங்களால் தற்போது ஒரு குடும்பம் பாதிக்கப்பட்டுள்ளது. 39 வயதான மார்க் கீன்ஸ் என்ற லொறி சாரதிக்கு ஒரு மாதத்திற்கு முன்பு நிலை 4 மூளை மற்றும் நுரையீரல் புற்றுநோய் கண்டறியப்பட்ட நிலையில், தற்போது அவரது நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது என்று ...
Read More »தமிழ்த்தேசியப்பற்றாளர் பத்மநாதன் தம்பாப்பிள்ளை
தமிழ்த்தேசியப்பற்றாளர் பத்மநாதன் தம்பாப்பிள்ளை அவர்களின் மறைவையொட்டி தமிழர் ஒருங்கிணைப்புக்குழு – அவுஸ்திரேலியா வெளியிட்ட அறிக்கை வருமாறு: தமிழ்த்தேசியப்பற்றாளர் பத்மநாதன் தம்பாப்பிள்ளை தமிழின விடுதலைக்காக பல்வேறு தளங்களிலும் செயற்பட்டு, ஓய்வற்று உழைத்து, ஒப்பற்ற பெருமனிதராக வாழ்ந்த “பத்மநாதன் ஐயா” என அனைவராலும் அழைக்கப்பட்ட தமிழ்த்தேசியப்பற்றாளர் பத்மநாதன் தம்பாப்பிள்ளை அவர்களின் மறைவுச்செய்தி அனைவரையும் கவலை கொள்ளச்செய்கின்றது. அவுஸ்திரேலியாவின் சிட்னியில் வாழ்ந்த பத்மநாதன் ஐயா, தாயகவிடுதலை போராட்ட காலத்தில் தாயகத்திற்கான தேவைகளை நிறைவுசெய்வதில் மிகவும் அர்ப்பணிப்போடு மிகவும் அமைதியான முறையில் பணியாற்றியவர். விடுதலைப் போராட்ட வட்டத்திற்கு வெளியே நின்ற ...
Read More »செய்தியாளர்கள் சட்டத்தைத் தவிர்த்தனர் என்ற சீனாவின் குறைகூறலை ஆஸ்திரேலியா மறுத்துள்ளது
சீனாவிலிருந்து ஆஸ்திரேலியாவிற்கு செய்தியாளர்கள் இருவர் தூதரகப் பாதுகாப்போடு வந்ததை அடுத்து, அவர்கள் மீதான சீன விசாரணையைத் தடுக்கவில்லை என்று ஆஸ்திரேலியா தெரிவித்துள்ளது. தனது தூதரக அதிகாரிகள் முறையாக நடந்துகொண்டார்கள் என்றும் அது குறிப்பிட்டது. செய்தியாளர்கள் பில் பிர்டல்ஸ் (Bill Birtles), மைக் ஸ்மித் (Mike Smith) இருவரும் சீனாவின் விசாரணையைத் தவிர்க்க, ஆஸ்திரேலியத் தூதரக அதிகாரிகள் உதவியதாக பெய்ச்சிங் கூறியது. அதற்குப் பதிலளித்த ஆஸ்திரேலிய அமைச்சர் ஒருவர், அவர்கள் இருவரும் நாட்டை விட்டு வெளியேற சீனா ஒப்புக்கொண்டதாகச் சொன்னார். சீனாவின் காவல்துறை அதிகாரிகள் அவர்களை ...
Read More »தடம் மாறி ஆஸ்திரேலிய நதிக்குள் வந்த அண்டார்டிகா திமிங்கிலங்கள்
அண்டார்டிகாவில் காணப்படும் Humpback திமிங்கிலங்கள் தடம் மாறி ஆஸ்திரேலியாவின் நதியை அடைந்துள்ளன. இந்த வாரம் 3 Humpback திமிங்கிலங்கள் வட ஆஸ்திரேலியாவில் உள்ள நதியில் காணப்பட்டதாக அந்நாட்டு அதிகாரிகள் கூறினர். அந்த நதியில் முதலைகள் அதிகமாக உள்ளன. 2 திமிங்கிலங்கள் பாதுகாப்பாகக் கடலுக்குச் சென்றுவிட்டன என்றும் எஞ்சிய ஒன்று இருக்குமிடம் விசாரிக்கப்படுகிறது என்றும் அதிகாரிகள் கூறினர். திமிங்கிலம் காணப்பட்ட பகுதியில் படகு நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டுள்ளன. ஆஸ்திரேலியாவில் Humpback திமிங்கிலங்கள் காணப்படுவது இதுவே முதல்முறை.
Read More »அவுஸ்திரேலியா விக்டோரியாவில் ஆற்றில் மூழ்கி தமிழ் இளைஞர் பலி
விக்டோரியாவின் Mildura பகுதியில் Murray ஆற்றில் மூழ்கி தமிழ் இளைஞர் ஒருவர் பலியானதாக தெரிவிக்கப்படுகிறது. நேற்றுமுன்தினம் தனது நண்பர்களுடன் Murray ஆற்றுக்குச் சென்ற இவ்விளைஞர் நீச்சலில் ஈடுபட்டபோது காணாமல்போனதாக அறிவிக்கப்பட்டது. இவரைத் தேடும்பணி வெள்ளி பிற்பகல் முதல் மேற்கொள்ளப்பட்டுவந்தநிலையில் குறித்த இளைஞரின் சடலம் Murray ஆற்றிலிருந்து மீட்கப்பட்டதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். மெல்பேர்னில் கல்விகற்றுவரும் இலங்கையைச் சேர்ந்த21 வயது தமிழ் இளைஞரே இவ்வாறு மரணமடைந்ததாகவும், தொழில்நிமித்தம் தனது நண்பர்களோடு அவர் Mildura-வுக்கு சென்றிருந்ததாகவும் கூறப்படுகிறது.
Read More »அகதிகள் திட்டத்தின் கீழ் நாட்டுக்குள் அகதிகளை அனுமதிக்க வேண்டும்!
ஆஸ்திரேலியா அரசு மீண்டும் அகதிகள் திட்டத்தின் கீழ் நாட்டுக்குள் அகதிகளை அனுமதிக்க வேண்டும் என அகதிகள் நல ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கொரோனா பெருந்தொற்று சூழல் காரணமாக, கடந்த மார்ச் மாதம் முதல் சர்வதேச எல்லைகளை மூடிய ஆஸ்திரேலிய அரசு வெளிநாட்டினர் நாட்டுக்குள் நுழைய கட்டுப்பாடு விதித்துள்ளது. ஆஸ்திரேலிய அகதிகள் கவுன்சலின் கணக்குப்படி, மனிதாபிமான விசாக்கள் பெற்ற சுமார் 4,000 அகதிகள் ஆஸ்திரேலியாவுக்குள் நுழைய முடியாமல் வெளிநாடுகளில் தவித்து வருகின்றனர். ஆஸ்திரேலியாவில் உள்ள டேவிட் ஓதீஷ் எனும் ஈராக்கிய அகதியின் சகோதரிக்கும் அவரது குடும்பத்துக்கும் ...
Read More »ஆஸ்திரேலியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முஸ்லீம் அகதிகளுக்கு ஹலால் உணவு மறுக்கப்படுகின்றதா?
ஆஸ்திரேலிய அரசால் தடுத்து வைக்கப்பட்டுள்ள தங்களுக்கு கடந்த ஓராண்டுக்கு மேலாக அங்கீகாரம் பெற்ற ஹலால் உணவை வழங்கப்படுவதில்லை என ஆஸ்திரேலிய மனித உரிமைகள் ஆணையத்திடம் முஸ்லீம் அகதிகளும் தஞ்சக்கோரிக்கையாளர்களும் முறையிட்டுள்ளனர். நவுரு மற்றும் பப்பு நியூ கினியாவில் செயல்பட்ட ஆஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்பிலிருந்து மருத்துவ சிகிச்சைக்காக ஆஸ்திரேலியா அழைத்துச் செல்லப்பட்ட சுமார் 100 பேர் பிரிஸ்பேன் நகரில் உள்ள கங்காரூ பாய்ண்ட் எனும் ஹோட்டலில் சிறைவைக்கப்பட்டுள்ளனர். இந்த ஹோட்டல் அகதிகளை சிறைப்படுத்தும் தடுப்பிற்கான மாற்று இடமாகவும் அறியப்படுகின்றது. இங்கு வைக்கப்பட்டுள்ள பெரும்பாலானோர் முஸ்லீம் ...
Read More »
Eelamurasu Australia Online News Portal