தடம் மாறி ஆஸ்திரேலிய நதிக்குள் வந்த அண்டார்டிகா திமிங்கிலங்கள்

அண்டார்டிகாவில் காணப்படும் Humpback திமிங்கிலங்கள் தடம் மாறி ஆஸ்திரேலியாவின் நதியை அடைந்துள்ளன.

இந்த வாரம் 3 Humpback திமிங்கிலங்கள் வட ஆஸ்திரேலியாவில் உள்ள நதியில் காணப்பட்டதாக அந்நாட்டு அதிகாரிகள் கூறினர்.

அந்த நதியில் முதலைகள் அதிகமாக உள்ளன. 2 திமிங்கிலங்கள் பாதுகாப்பாகக் கடலுக்குச் சென்றுவிட்டன என்றும் எஞ்சிய ஒன்று இருக்குமிடம் விசாரிக்கப்படுகிறது என்றும் அதிகாரிகள் கூறினர்.

திமிங்கிலம் காணப்பட்ட பகுதியில் படகு நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டுள்ளன.

ஆஸ்திரேலியாவில் Humpback திமிங்கிலங்கள் காணப்படுவது இதுவே முதல்முறை.