அவுஸ்திரேலியாவில் காட்டுத் தீயை கட்டுப்படுத்த போராடிய தீயணைப்பு வீரர் ஒருவர் உயிரிழந்தத்தையடுத்து, அவரது 20 மாதம் நிரம்பிய மகளுக்கு தந்தையின் துணிச்சலுக்காக பதக்கம் வழங்கி கெளரவிக்கப்பட்டது. ‘O’Dwyer’ என்ற 36 வயதான அவுஸ்திரேலியாவின் தீயணைப்பு படை வீரர் ஒருவர் கடந்த 19 ஆம் திகதி அன்று காட்டுத் தீயை அணைப்பதற்காக போராடியபோது மரம் விழ்ந்து பரிதாபகரமாக உயிரிழந்தார். இந்த நிலையில் O’Dwyer’ இன் உயிர்த் தியாகத்தை கெளரவப்படுத்தும் வகையில், அவரது இறுதி நிகழ்வில் O’Dwyer’ இன் 20 மாதம் நிரம்பிய மகளுக்கு உயரிய கெளரவ ...
Read More »அவுஸ்திரேலியமுரசு
அவுஸ்திரேலிய காட்டுத் தீ- 10,000 ஒட்டகங்களை கொல்வதற்கு உத்தரவு!
அவுஸ்திரேலியாவில் நிலவும் கடும் வெப்பநிலை காரணமாக காட்டுத் தீ வேகமாகப் பரவி வருகின்ற நிலையில் முழு நாடுமே திண்டாட்டத்தை எதிர்கொண்டுள்ளது. இந்நிலையில் அந்நாட்டிலுள்ள ஒட்டகங்கள் வரட்சியால் பாதிக்கப்பட்ட பிராந்தியங்களில் அதிகளவு நீரை அருந்துவதைத் தடுத்து நிறுத்த அங்குள்ள 10,000 க்கு மேற்பட்ட ஒட்டகங்களைக் கொல்லும் நடவடிக்கை இன்று புதன்கிழமை முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. அனன்கு பிட்ஜன்ட்ஜட்ஜாரா யன்குனிட்ஜட்ஜாரா பிராந்தியத்தைச் சேர்ந்த உள்ளூர் தலைவர்கள் ஒட்டகங்களைக் கொல்வதற்கான இந்த உத்தரவை பிறப்பித்துள்னர். இதற்காக உலங்குவானூர்திகளில் உத்தியோகபூர்வமாக துப்பாக்கிச் சூட்டை நடத்துபவர்களை அனுப்ப ...
Read More »அவுஸ்திரேலியா காட்டுத் தீ : பசுபிக் கடல் முழுவதும் புகை மண்டலம்
அவுஸ்திரேலியாவில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீயினால் இருந்து வரும் புகை பசுபிக் முழுவதம் பரவியுள்ள நிலையில் தென் அமெரிக்காவை நோக்கி நகர்வதாக ஐக்கிய நாடுகளின் சர்வதேச வானிலை அறிவிப்பு நிலையம் தெரிவித்துள்ளது. அத்துடன் இந்த புகை மண்டலம் அந்தார்டிக்காவை அடைந்திருக்கக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே அவுஸ்திரேலிய தீ விபத்து தொடர்பான நாசாவின் செய்மதி தகவல்களை பயன்படுத்தி அனைத்து பகுதிகளையும் உள்ளடக்கிய முப்பரிமாண புகைப்படம் ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது. இந்த தீ விபத்தினால் அவுஸ்திரேலியாவின் 10.3 மில்லியன் ஹெக்டர் நிலப்பரப்பு தீக்கிரையாகியுள்ளது. அத்துடன் 25 பேர் உயிரிழந்துள்ளதுடன் ...
Read More »ஆஸ்திரேலியாவில் காட்டுத்தீ நிவாரணத்துக்கு ரூ.10 ஆயிரம் கோடி ஒதுக்கீடு!
ஆஸ்திரேலியாவில் காட்டுத்தீ நிவாரண உதவிக்காக 2 பில்லியன் ஆஸ்திரேலிய டாலர் ஒதுக்கீடு செய்து அந்த நாட்டின் பிரதமர் ஸ்காட் மாரிசன் உத்தரவிட்டுள்ளார். ஆஸ்திரேலியாவின் தென்கிழக்கு பகுதியில் உள்ள நியூ சவுத் வேல்ஸ் மற்றும் விக்டோரியா மாகாணங்களில் கடந்த செப்டம்பர் மாதம் முதல் காட்டுத்தீ எரிந்து வருகிறது. இந்த காட்டுத்தீயில் இதுவரை 24 பேர் பலியாகி உள்ளனர். மேலும் பல ஆயிரக்கணக்கான வன உயிரினங்கள் செத்து மடிந்துள்ளன. லட்சக்கணக்கான மக்கள் கடும் தவிப்புக்கு ஆளாகி உள்ளனர். இந்த காட்டுத்தீயால் அங்கு கடும் வெயில் வாட்டி ...
Read More »அவுஸ்திரேலியாவில் மழை பெய்தபோதும் பாரிய காட்டுத் தீ அச்சுறுத்தல்!
அவுஸ்திரேலியாவில் காட்டுத் தீ பரவி வரும் பிராந்தியங்களில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை பருவ கால மழைவீழ்ச்சி இடம்பெற்றதால் அந்தப் பிராந்தியங்களிலான வெப்பநிலை வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சிட்னி நகர் முதல் மெல்போர்ன் நகர் வரையான கிழக்குக் கடற்கரை மற்றும் நியூ சவுத் வேல்ஸ் பிராந்தியத்தின் சில பகுதிகள் என்பனவற்றிலேயே மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது. எனினும் எதிர்வரும் வியாழக்கிழமைக்குள் வெப்பநிலை மீண் டும் அதிகளவுக்கு அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கப் பட்டுள்ளது. இதன் பிரகாரம் விக்டோரியா மற்றும் சவுத் வேல் ஸில் மேலும் பாரிய காட்டுத் தீ ...
Read More »ஆஸி. காட்டுத் தீயால் உண்டான சேத விபரங்களை சீரமைக்க 2 பில்லியன் ஆஸி.டொலர்கள்!
காட்டுத் தீயினால் உண்டான சேத விபரங்களை சீரமைப்பதற்கு அடுத்த இரு ஆண்டுகளில் 2 பில்லியன் அவுஸ்திரேலிய டொலர்கள் ஒதுக்கப்படவுள்ளதாக அந் நாட்டு பிரதமர் ஸ்கொட் மோரிசன் தெரிவித்துள்ளார். இன்றைய தினம் ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றில் உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். அதற்கமைய எதிர்வரும் ஜூன் மாதம் முடிவடைவதற்குள் 500 மில்லியன் அவுஸ்திரேலிய டொலர்களையும், 2021 ஆம் ஆண்டு 1 பில்லியன் அவுஸதிரேலிய டொலர்களையும், 2022 ஆம் ஆண்டு மேலும் 500 மில்லியன் அவுஸ்திரேலிய டொலர்களையும் ஒதுக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் கூறினார். இந் நிலையில் ...
Read More »ஆஸ்திரேலிய காட்டுத்தீ – பலி எண்ணிக்கை 23 ஆக உயர்வு!
ஆஸ்திரேலிய காட்டுத்தீ வேகமாக பரவி வருவதால் பலி எண்ணிக்கை 23 ஆக உயர்ந்து உள்ளது.ஆஸ்திரேலியாவில் ஏற்பட்டுள்ள பயங்கர காட்டுத்தீ வேகமாக பரவி வருகிறது. இதனால் எழுந்துள்ள புகையால் ஆஸ்திரேலிய நகரங்கள் இருளில் மூழ்கியுள்ளன. மக்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டு உள்ளனர். . காட்டுத்தீயை கட்டுப்படுத்த 3000 துணை ராணுவப் படையை உதவிக்கு அழைக்கப்பட்டு தீயை அணைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். கங்காரு தீவில் ஏற்பட்ட தீ விபத்தில் இரண்டு பேர்பலியாகி உள்ளனர். இதை தொடர்ந்து தீவிபத்தால் பலி எண்ணிக்கை 23யை ...
Read More »அவுஸ்திரேலிய காட்டுத் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர 3 ஆயிரம் படை வீரர்கள் அழைப்பு!
அவுஸ்திரேலியாவில் பரவி வரும் காட்டுத்தீயை அனைப்பதற்கு 3 ஆயிரம் படை வீரர்களை அழைக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு பிரதமர் ஸ்காட் மொரிசன் தெரிவித்தார். அஸ்திரேலியாவின் தெற்கு , நியூசவுத் வேல்ஸ், விக்டோரியா கடற்கரையையொட்டிய பகுதிகளில் காட்டுத் தீ மிகவும் வேகமாக பரவி வருகிறது. விக்டோரியா மாகாணத்தில் தீ பரவி வருகின்ற நிலையில் அப் பகுதிகளில் வசிக்கின்ற சுமார் 1 லட்சம் பேர் வரை வெளியேறுமாறு அந்நாட்டு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். அத்தோடு குறித்த காட்டுத் தீயில் சிக்கி இதுவரை 23 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையிலேயே தீயை கட்டுக்குள் ...
Read More »ஆஸ்திரேலியாவில் காட்டுத் தீயில் சிக்கிய பயணிகள் மீட்பு!
ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் கடந்த ஒரு மாதத் துக்கும் மேலாக 100-க்கும் அதிகமான இடங்களில் காட்டுத்தீ பற்றி எரிந்து வருகிறது. 2 லட்சம் ஏக்கருக்கும் அதிகமான நிலப்பரப்பு தீயில் கருகி நாசமாகி உள்ளது. இந்த காட்டுத்தீயில் தீயணைப்பு வீரர்கள் உள்பட 20 பேர் உயிரிழந்து உள்ளனர். இந்நிலையில் நியூ சவுத் வேல்ஸ், விக்டோரியா மாகாணத்துக்கு புத்தாண் டுக்காக சுற்றுலா சென்றிருந்த நூற்றுக் கணக்கான சுற்றுலாப் பயணிகள், பொதுமக்களை ஆஸ்திரேலிய கடற் படையினர் நேற்று மீட்டு பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் சென்ற னர். ...
Read More »பற்றி எரியும் காட்டுத்தீ – ஆஸ்திரேலிய பிரதமரின் இந்திய பயணம் ரத்து?
காடுகளில் தொடர்ந்து எரியும் தீயை தொடர்ந்து, ஆஸ்திரேலியா பிரதமர் ஸ்காட் மாரிசன் தனது இந்திய பயணத்தை ரத்து செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகின. ஆஸ்திரேலியாவின் நியூ சவுத்வேல்ஸ் மாகாணத்தில் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக 100-க்கும் அதிகமான இடங்களில் காட்டுத்தீ பற்றி எரிந்து வருகிறது. 2 லட்சம் ஏக்கருக்கும் அதிகமான நிலப்பரப்பு தீயில் கருகி நாசமாகி உள்ளது. இந்த காட்டுத்தீயில் தீயணைப்பு வீரர்கள் உள்பட 20 பேர் பலியாகி உள்ளனர். மேலும் வனவிலங்குகளும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் நாடாளுமன்றம் தெரிவித்தது. இதற்கிடையே, நியூசவுத் வேல்ஸ் பகுதியில் ...
Read More »
Eelamurasu Australia Online News Portal