Home / செய்திமுரசு / நிகழ்வுமுரசு (page 7)

நிகழ்வுமுரசு

மெல்பேர்ண் மாவீரர் நாள் நிகழ்வு – 2012

தாயக விடுதலைப்போரில் தங்களுடைய இன்னுயிர்களை ஈந்து வித்தாகிப்போன மாவீரர்களை நினைவுகூரும் மாவீர்நாள் நிகழ்வு அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ணில் மாவீரர் நாளான கடந்த செவ்வாய்க்கிழமை உணர்வுபூர்வமாக நடைபெற்றது. ஸ்பிறிங்வேல் (Springvale) நகரமண்டபத்தில் 27-11-2012 அன்று நடைபெற்ற இந்த உணர்வெழுச்சிநாள் நிகழ்வில் சுமார் எண்ணூறுக்கும் மேற்பட்ட மக்கள் உணர்வு பூர்வமாக கலந்துகொண்டு மாவீரச் செல்வங்களுக்கு மரியாதை செலுத்தினர். தமது மக்களின் நியாயபூர்வமான உரிமைகளுக்காகவும் அவர்களின் பாதுகாப்பான வாழ்வுக்காகவும் தமது உயிரையே விலையாக கொடுத்த ஆயிரம் ...

Read More »

அவுஸ்திரேலியா மெல்பேணில் தியாகி திலீபன் நினைவு நிகழ்வு – 2012

தமிழ்மக்களின் வாழ்வுரிமையை பாதுகாப்பதற்கான அடிப்படைக்கோரிக்கைகளை முன்வைத்து, சாகும்வரை உண்ணாவிரதமிருந்து ஈழயாகத்தில் தன்னுயிரை ஆகுதியாக்கிய தியாகதீபம் திலீபனின் இருபத்தைந்தாவது ஆண்டு நிறைவு நினைவேந்தல் நிகழ்வான “தியாகதீப கலைமாலை – 2012” 29 ஆம் திகதி சனிக்கிழமை மெல்பேர்ணில் எழுச்சியுடன் நடைபெற்றது. ஸ்கோர்ஸ்பியில் அமைந்துள்ள சென்.ஜூட்ஸ் மண்டபத்தில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் சுமார் இருநூறுக்கும் அதிகமான மக்கள் கலந்துகொண்டனர். அவுஸ்திரேலிய மற்றும் தமிழீழ தேசிய கொடிகளை முறையே கிறீன் கட்சியைச் சேர்ந்த மத்தியு ...

Read More »

மெல்பேணில் மாவீரர் நாள் நிகழ்வு – 2011

தாயக மீட்புப்போரில் தம்முயிரை ஈந்து உயிர்க்கொடை புரிந்த உத்தமர்களை நினைவுகூரும் மாவீர்நாள் நிகழ்வு ஆஸ்திரேலியாவின் மெல்பேர்ணில் நேற்றையதினம் ஞாயிற்றுக்கிழமை(27ம்) உணர்வுபூர்வமாக நடைபெற்றது. ஸ்பிறிங்வேல் (Springvale) நகரமண்டபத்தில் 27 – 11 – 2011 அன்று நடைபெற்ற இந்த உணர்வெழுச்சிநாள் நிகழ்வில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் உணர்வு பூர்வமாக கலந்துகொண்டு மாவீரச் செல்வங்களுக்கு மரியாதை செலுத்தினர். தமது மக்களின் நியாயபூர்வமான உரிமைகளுக்காகவும் அவர்களின் பாதுகாப்பான வாழ்வுக்காகவும் தமது உயிரையே விலையாக ...

Read More »

மெல்பேர்னில் உணர்வுபூர்வமாக நடைபெற்ற தியாக தீபம் திலீபன் நினைவு கலைமாலை

அவுஸ்திரேலியாவில் மெல்பேணில் தியாகி திலீபன் கலைமாலை நிகழ்வு  மிகவும் எழுச்சியுடன் சிறப்பாக நடைபெற்றுள்ளது. தமிழ்மக்களின் அமைதியான கௌரவமான வாழ்வுக்காக, அறவழியிலான போராட்டத்தின் அதியுச்ச தியாகத்தை மேற்கொண்ட திலீபன் அவர்களின் நினைவுகளை சுமந்து அரங்கம் நிறைந்த நிகழ்வாக இந்நிகழ்வு நடைபெற்றுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை 25 – 09 – 2011 அன்று மாலை 5 மணிக்கு தேசிய கொடியேற்றல்களுடன் ஆரம்பமான இந்நிகழ்வு மெல்பேண் பிறிஸ்ரன் நகர மண்டபத்தில், தமிழர் கலைபண்பாட்டுக் கழகத்தின் ...

Read More »

மெல்பேணில் மாவீரர் நாள் நிகழ்வு – 2010

அவுஸ்திரேலியாவின் மெல்பேணில் மாவீரர் நாள் நிகழ்வுகள், விக்ரோரிய தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் மிகவும் எழுச்சியுடன் உணர்வுபூர்வமாக நடைபெற்றது. இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை(28.11.2010) நான்கு மணிக்கு ஸ்பிறிங்வேல் நகர மண்டபத்தில் ஆரம்பமாகிய இந்நிகழ்வில் வயதுவேறுபாடின்றி எண்ணூறுக்கும் அதிகமான மக்கள் கலந்துகொண்டனர். இவர்களுடன் அவுஸ்திரேலியா பல்லின சமூகத்து பிரமுகர்களும், அரசியல் கட்சி பிரமுகர்களும் கலந்துகொண்டனர். பொதுச்சுடர் ஏற்றப்பட்டதை தொடர்ந்து அவுஸ்திரேலிய தேசியக்கொடியும் தமிழீழத் தேசியக்கொடியும் ஏற்றிவைக்கப்பட்டன. அதனை தொடர்ந்து தமிழீழ விடுதலைப்புலிகள் ...

Read More »

அவுஸ்திரேலியா மெல்பேணில் தியாகி திலீபன் நினைவு நிகழ்வு – 2010

அவுஸ்ரேலியா மெல்பேர்னில் தியாக தீபம் திலீபனின் 23 ஆவது ஆண்டு நினைவு நாள் நிகழ்வுகள் கடந்த ஞாயிற்றுக்கிழமை தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின், கலை பண்பாட்டு கழகத்தின் ஏற்பாட்டில் உணர்வுபூர்வமாக நடைபெற்றன. இந்நிகழ்வில் சுமார் முன்னூறுக்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்ட இந்நிகழ்வு ஸ்கோஸ்பியில் அமைந்துள்ள சென்யூட்ஸ் மண்டபத்தில் நடைபெற்றது. தியாகி திலீபனின் 23 ஆண்டு நினைவுநாளான 26 – 09 – 2010 அன்று மாலை ஐந்து மணிக்கு நடைபெற்ற இந்நிகழ்வில், நிகழ்வுகளின் ...

Read More »