தமிழீழ விடுதலைப்போராட்டத்தில் வீரச்சாவைத்தழுவிக்கொண்ட மாவீரர்களை நினைவுகூரும் மாவீரர் நாள் நிகழ்வு சிட்னியில் சிறப்பாக நடைபெற்றது. தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவைச் சேர்ந்த சஞ்சயன் அவர்களும், மாவீரர் லெப். கேணல் எழில்கண்ணன் அவர்களின் மகள் கதிரினி அவர்களும் நிகழ்வை தலைமையேற்று தொகுத்து வழங்கினார்கள். மாலை 6.00 மணிக்கு ஆரம்பமான இந்நிகழ்வில் முதன்மைச்சுடரை மாவீரர் கப்டன் வெண்மதி அவர்களின் சகோதரர் தர்சன் அவர்கள் ஏற்றிவைத்தார். அவுஸ்திரேலிய பழங்குடிகளின் தேசியகொடியை நாட்டுப்பற்றாளர் விஜயகுமாரின் துணைவி புவனேஸ்வரி ஏற்றிவைக்க, அவுஸ்திரேலியக்கொடியை தமிழ்த்தேசியச்செயற்பாட்டாளர் குமரன் அவர்கள் ஏற்றிவைக்க, தமிழீழ தேசியக்கொடியை தமிழர் ஒருங்கிணைப்புகுழுவின் சிட்னி ...
Read More »நிகழ்வுமுரசு
மெல்பேர்ணில் உணர்வுபூர்வமாக நடைபெற்ற தியாகதீபம் கலைமாலைநிகழ்வு 2018
பாரததேசத்திடம் ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து நீர்கூட அருந்தாது பன்னிருநாட்கள் சாகும்வரை உண்ணாநோன்பிருந்து, ஈகைச்சாவைத் தழுவிக்கொண்ட தியாகதீபம் லெப் கேணல திலீபன் அவர்களின் 31 வது ஆண்டு நினைவுநாள் நிகழ்வுகள் அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ண் நகரில் சென்யூட்ஸ் மண்டபத்தில் மிகவும் உணர்வுபூர்வமாக நினைவுகூரப்பட்டது. கடந்த 28 – 09 – 2018 வெள்ளிக்கிழமையன்று மாலை 6.00 மணிக்கு செல்வி லக்சிதா தலைமையில் ஆரம்பமான இந்நிகழ்வில், அவுஸ்திரேலிய தேசியக்கொடியை மில்பார்க் தமிழ்ப்பள்ளி அதிபர் திரு சந்திரகுமார் அவர்கள் ஏற்றிவைக்க, தமிழீழ தேசியக்கொடியை விக்ரோறியா மாநில தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் செயற்பாட்டாளர் ...
Read More »தமிழர் இனவழிப்பு நினைவுநாள் 2018 – பேர்த்
முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு ஒன்பதாம் ஆண்டு நினைவு நாள் அவுஸ்திரேலியாவின் பேர்த் நகரில் இன்று (18-05-2018) அனுஷ்ட்டிக்கப்பட்டது. மாலை 7.15 மணிக்கு திரு நிமல் தலமையில் அவுஸ்திரேலியா கொடியேற்றத்துடன் நினைவேந்தல் ஆரம்பமாகியது. அவுஸ்திரேலியா தேசிய கொடியினை பிரீமென்டல் நகரசபை உருப்பினர் திரு சாம் ஏற்றிவைத்தார், தொடர்ந்து தமிழீழ தேசிய கொடியை திரு கொற்றவன் ஏற்றிவைத்தார். கொடியேற்றத்தை தொடர்ந்து பொதுச்சுடர் ஏற்றப்பட்டது பொதுச்சுடரை திரு இளையவன்னியன் ஏற்றிவைத்தார். அதனைத்தொடர்ந்து முள்ளிவாய்க்கால் சோக கீதங்கள் இசைக்க மக்கள் மனதுருகி தம் உறவுகளுக்காக மலரஞ்சலி செய்து தீபமேற்றினர். முள்ளிவாய்க்கால் ...
Read More »தமிழர் இனவழிப்பு நினைவுநாள் 2018 – சிட்னி
அவுஸ்திரேலியாவின் சிட்னியில் தமிழர் இனவழிப்பு நினைவுநாள் நிகழ்வானது, உணர்வெழுச்சியுடன் சிறப்பாகநினைவுகூரப்பட்டது. நேற்று வெள்ளிக்கிழமை (18 – 05 – 2018) மாலை ஏழு மணிக்கு வென்வேத்வில் றெட்கம் மண்டபத்தில் தொடங்கிய இந்நிகழ்வில் பெருமளவிலான மக்கள் கலந்து கொண்டனர். பொதுச்சுடரேற்றலுடன் ஆரம்பமான நிகழ்வில் சுடரேற்றலின்போது, தமிழர் இனவழிப்பு நினைவுநாள் நினைவேந்தல் இசைபின்னனியில் இசைக்கப்பட்டது. தொடர்ந்து அவுஸ்திரேலிய மற்றும் தமிழீழ தேசிய கொடிகள் ஏற்றப்பட்டு அகவணக்கம்செலுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து நினைவுநாள் பொதுப்பீடத்திற்கு, ஈகச்சுடரேற்றி மலர்வணக்கம் செலுத்தும் நிகழ்வு ஒரு மணிநேரமாகநடைபெற்றது. தொடர்ந்து நினைவுரையை, முள்ளிவாய்க்காலில் மருத்துவராக கடமையாற்றி ...
Read More »தமிழர் இனவழிப்பு நினைவுநாள் 2018 – மெல்பேர்ண்
தமிழர் இனவழிப்பு நினைவுநாள் 2018 மெல்பேணில் உணர்வு பூர்வமாக நினைவு கூரப்பட்டது. மே மாதம் 18ஆம் நாள் வெள்ளிக்கிழமை மாலை 6.30 மணிக்குப் பொதுச் சுடரேற்றலோடு தொடங்கிய நிகழ்வு இரவு 8.20 மணியளிவில் நிறைவுற்றது. சென்ற். ஜூட் மண்டபத்தில் நிகழ்ந்த இந்நிகழ்வில் பொதுச்சுடரினை தாயகத்தில் இறுதி நேர அவலத்திலிருந்து மீண்ட சஞ்சீவ் பரராஜசிங்கம் அவர்கள் ஏற்றி வைக்க, தமிழர் இனவழிப்பு நாளுக்கென சிறப்பாக உருவாக்கப்பட்ட இசைத்துணுக்கு ஒலிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து அவுஸ்திரேலிய தேசிக்கொடியை தாயகத்தில் இறுதி நேர அவலத்திலிருந்து இங்கு இடம்பெயர்ந்த ஜெகதீஸ் அமிர்தலிங்கம் அவர்களும் ...
Read More »மெல்பேர்ணில் சிறப்பாக நடைபெற்ற தமிழீழ நாட்டுப்பற்றாளர் நினைவு நாள்- 2018
பாரததேசத்திடம் இரண்டு அம்சக்கோரிக்கைகளை முன்வைத்து மட்டுநகர் மாமாங்கேஸ்வரர் ஆலயமுன்றலில் 19-03-1988 முதல்19-04-1988வரையான முப்பது நாட்கள் உண்ணாநோன்பிருந்து ஈகைச்சாவைத் தழுவிக்கொண்ட தியாகத்தாய் அன்னை பூபதி அவர்களது நினைவுநாளும், தமிழீழ நாட்டுப்பற்றாளர் நினைவுநாளும் அவுஸ்திரேலியாவில் மெல்பேர்ண் நகரில் மிகவும் உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது. தமிழ்த்தேசிய விடுதலைக்காக அயராது உழைத்து உயிர்நீத்து மாமனிதர்களாக கௌரவிக்கப்பட்டவர்களையும் இங்கு நினைவு கூரப்பட்டது, இந்நிகழ்வின் சிறப்பம்சமாகும். 21-04-2018 சனிக்கிழமையன்று மாலை 6.00மணிக்கு சென்யூட்ஸ் மண்டபத்தில் வானமுதம் வானொலியின் அறிவிப்பாளர் திரு சிறீறஞ்சன் தலைமையில் அவுஸ்திரேலியத் தேசியக் கொடி மற்றும் தமிழீழத்தேசியக் கொடியேற்றல்களுடன் நிகழ்வுகள்ஆரம்பமாகின. அவுஸ்திரேலியத் ...
Read More »அவுஸ்திரேலியா சிட்னியில் தமிழர் விளையாட்டு விழா 2018
வங்க கடலில் காவியமான கேணல் கிட்டு ஞாபகார்த்த விளையாட்டு விழா 26 – 01 – 2018 இன்று வெள்ளிக்கிழமை சிட்னியில் சிறப்பாக நடைபெற்றுள்ளது. இந்நிகழ்வில் துடுப்பந்தாட்டம் உதைபந்தாட்டம் வலைபந்தாட்டம் மற்றும் கிளித்தட்டு, முட்டி உடைத்தல், தலையணை சண்டை, கயிறு இழுத்தல் போன்ற பாரம்பரிய விளையாட்டுகளும் சிறுவர்களுக்கான விளையாட்டுகளும் இடம்பெற்றுள்ளன. காலை ஒன்பது மணிக்கு ஆரம்பமான நிகழ்வு மாலை ஏழு மணிவரையும் நடைபெற்றதுடன், வெற்றி பெற்றவர்களுக்கான கேடயங்களும் வழங்கப்பட்டன. இந்நிகழ்வில் உலகம் சுற்றி மரதன் ஓட்டப் போட்டியில் பங்குபற்றிக்கொண்டிருக்கும் சுரேஸ் ஜோக்கிம் உம் கலந்துகொண்டு, ...
Read More »அவுஸ்திரேலியா மெல்பேணில் தமிழர் விளையாட்டு விழா 2018
இந்தியச்சதியால் வங்கக்கடலில் 16 – 01 – 1993 இல் வீரகாவியமாகிய மூத்ததளபதி கேணல் கிட்டு உட்பட பத்து மாவீரர்களின் நினைவாக ஆண்டுதோறும் விக்ரோறியா மாநில தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினரால் நடாத்தப்படுகின்ற மாபெரும் தமிழர் விளையாட்டுவிழா இந்த ஆண்டும் மெல்பேர்ணில் மிகவும் சிறப்பாக நடந்தேறியுள்ளது. 07-01-2018 ஞாயிற்றுக்கிழமையன்று காலை 8.30 மணிக்கு மெல்பேர்ண் கிழக்கு பேர்வூட் றிஸேவ் (East Burwood Reserve) மைதானத்தில் ஆரம்பமான இவ்விளையாட்டுவிழா நிகழ்வில் அவுஸ்திரேலியத் தேசியக்கொடியை இளைய தமிழ்த் தேசியச் செயற்-பாட்டாளர் செல்வன் பவித்திரன் அவர்கள் ஏற்றிவைக்க, தமிழீழத் தேசியக் ...
Read More »மெல்பேணில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற தேசிய மாவீரர் நாள் நிகழ்வு – 2017
தமிழீழ விடுதலைப்போரில் தங்கள் இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களை நினைவுகூரும் தேசிய நினைவெழுச்சிநாள் நிகழ்வுகள் 27ம் திகதி திங்கட்கிழமையன்று மெல்பேணில் அமைந்துள்ள Springvale நகர மண்டபத்தில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்றது. மெல்பேண் நேரம் மாலை 6 மணிக்கு மணியொலியுடன் தொடங்கிய ஆரம்பமான இந்நிகழ்விற்கு பிரசாத் (தமிழ்மொழியில்) மற்றும் துளசி (ஆங்கிலமொழியில்) ஆகியோர் தலைமை தாங்கினார்கள். பொதுச்சுடர் ஏற்றலுடன் ஆரம்பமாகிய இந்நிகழ்வில், பொதுச்சுடரினை தமிழ்த் தேசியச் செயற்பாட்டாளர் திரு.பிரான்ஸிஸ் கிறிஸ்ரி அவர்கள் ஏற்றிவைத்தார். தொடர்ந்து அவுஸ்திரேலியத் தேசியக் கொடியினை மாவீரர் லெப்.கேணல் மணிவண்ணனின் சகோதரர் திரு.சிங்கராசா சுரேஷ்குமார் ...
Read More »மெல்பேர்ணில் உணர்வுபூர்வமாக நடைபெற்ற தியாகதீபம் கலைமாலைநிகழ்வு 2017
பாரததேசத்திடம் ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து நல்லூர்க்கந்தன் ஆலய முன்றலில் நீர்கூட அருந்தாது பன்னிருநாட்கள் சாகும்வரை உண்ணாநோன்பிருந்து 26-09-1987 அன்று ஈகைச்சாதவைத் தழுவிக்கொண்ட தியாகதீபம் லெப் கேணல் திலீபன் அவர்களின் முப்பதாவது ஆண்டு நினைவு தினமும் தியாகதீப கலைமாலை நிகழ்வும் 30-09-2017 சனிக்கிழமையன்று மாலை 6.00மணிமுதல் 8.00மணிவரையும் அவுஸ்திரேலியாவில் மெல்பேர்ண் நகரத்தில் சென்யூட்ஸ் மண்டபத்தில் மிகவும் உணர்வுபூர்வமாக நடைபெற்றது. இந்நிகழ்வில் 26-09-2001 அன்று சிறிலங்காப் படைகளின் ஆழஊடுருவும் அணியினரின் கிளைமோர்த் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட விடுதலைப்புலிகளின் மூத்த தளபதி கேணல் சங்கர் அவர்களையும் 25-08-2002 ...
Read More »
Eelamurasu Australia Online News Portal