வங்க கடலில் காவியமான கேணல் கிட்டு ஞாபகார்த்த விளையாட்டு விழா 26 – 01 – 2018 இன்று வெள்ளிக்கிழமை சிட்னியில் சிறப்பாக நடைபெற்றுள்ளது.
இந்நிகழ்வில் துடுப்பந்தாட்டம் உதைபந்தாட்டம் வலைபந்தாட்டம் மற்றும் கிளித்தட்டு, முட்டி உடைத்தல், தலையணை சண்டை, கயிறு இழுத்தல் போன்ற பாரம்பரிய விளையாட்டுகளும் சிறுவர்களுக்கான விளையாட்டுகளும் இடம்பெற்றுள்ளன.
காலை ஒன்பது மணிக்கு ஆரம்பமான நிகழ்வு மாலை ஏழு மணிவரையும் நடைபெற்றதுடன், வெற்றி பெற்றவர்களுக்கான கேடயங்களும் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில் உலகம் சுற்றி மரதன் ஓட்டப் போட்டியில் பங்குபற்றிக்கொண்டிருக்கும் சுரேஸ் ஜோக்கிம் உம் கலந்துகொண்டு, அவுஸ்திரேலிய நாட்டுக்கான மரதன் ஓட்டபோட்டியை ஆரம்பித்திருந்தார் என்பதும் குறிப்பிடதக்கது.
Eelamurasu Australia Online News Portal










