குமரன்

பரபரப்பான நடிகையாக வலம் வரும் நயன்தாரா

தமிழ் பட உலகின் முன்னணி நாயகி, அதிக சம்பளம் வாங்கும் நடிகை என்ற பல பரிமாணங்களை நடிகை நயன்தாரா பெற்றிருக்கிறார். ஜெயராம் நடித்த ‘மனசினக்கரே’ மலையாள படம் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானவர் நயன்தாரா. அந்த படம் 2003-ம் ஆண்டு டிசம்பர் 25-ந்தேதி வெளியானது. இப்போது அவர் திரை உலகில் 13-வது ஆண்டில் காலடி பதித்திருக்கிறார். ஆண்டுகள் ஓடினாலும் அவருக்குள்ள நாயகி அந்தஸ்து இன்று வரை குறையவில்லை. தமிழ் பட உலகின் முன்னணி நாயகி, அதிக சம்பளம் வாங்கும் நடிகை, இவர் படத்தில் நடித்தாலே அதற்கு ...

Read More »

அவுஸ்ரேலியா பந்து வீச்சில் பாகிஸ்தான் திணறல்

அவுஸ்ரேலியா- பாகிஸ்தான் அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி 125 ரன்னுக்குள் 4 விக்கெட்டை இழந்து ஆடி வருகிறது. அவுஸ்ரேலியா- பாகிஸ்தான் அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் போட்டி மெல்போர்ன் நகரில் இன்று தொடங்கியது. முதலில் விளையாடிய பாகிஸ்தான் 125 ரன்னுக்குள் 4 விக்கெட்டை இழந்து திணறியது. சமிஅஸ்லம் (9 ரன்) லயன் பந்திலும், பாபர் ஆசம் (23 ரன்) ஹாசல்வுட் பந்திலும், யூனுஸ்கான் (21 ரன்), கேப்டன் மிஸ்பா (11 ரன்) போர்டு பந்திலும் ஆட்டம் இழந்தனர். அசார்அலி ஒருவரே ...

Read More »

ரவிராஜை மீண்டும் கொன்றுவிட்டார்கள்- சிவாஜிலிங்கம்

ரவிராஜ் படுகொலைக்கான தீர்ப்பு தமிழ் மக்களிற்கு தெளிவான செய்தியொன்றை சொல்லியிருப்பதாக வடமாகாணசபை உறுப்பினர் கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். யாழ்.ஊடக அமையத்தில் நேற்று சனிக்கிழமை அவர் நடத்திய ஊடகவியலாளர்கள் மாநாட்டில் மேலும் தெரிவிக்கையில்: இலங்கை நீதிமன்றுகளின் ஊடாக தீர்வு கிடைக்காதென்ற செய்தி தற்போது உறுதியாக கிடைத்திருப்பதாகத் தெரிவித்த அவர் சர்வதேச விசாரணை மட்டுமே நீதியை தருமென்ற எமது நிலைப்பாட்டை இது உறுதிப்படுத்தியிருப்பதாகவும் அவர் தெரிவித்தார். அத்துடன் இத்தீர்ப்பின் மூலம் மீண்டும் ரவிராஜ் படுகொலை செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்த கே.சிவாஜிலிங்கம் இனியும் உள்ளுர் விசாரணை மூலம் தீர்வு கிடைக்குமென தமிழ் ...

Read More »

2017-ல் வாட்ஸ் ஆப்…?

தொழில்நுட்ப உலகில் மாற்றம் ஏற்பட்டு வரும் வேகத்தைப் பார்த்தால் மலைப்பாகத்தான் இருக்கிறது. அதிலும் குறிப்பாக செல்போன் சார்ந்து நிகழும் மாற்றங்கள் இன்னும் வேகமாக, இன்னும் மலைப்பாக இருக்கின்றன‌. சில ஆண்டுகளுக்கு முன்வரை, செல்போன் என்றால் நோக்கியா என்றிருந்தது. உயர் ரகப் பிரிவில் பிளாக்பெர்ரி ஆதிக்கம் செலுத்தியது. இன்றோ நோக்கியா இருந்த இடம் தெரியவில்லை. பிளாக்பெரி ஸ்மார்ட் போன் தயாரிப்பை நிறுத்தப்போவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இன்று ஸ்மார்ட் போன்களுக்கான இயங்குதளம் என்றால் ஆண்ட்ராய்டும், ஐ.ஓ.எஸ்., ஆகியவை மட்டுமே என்றாகியிருக்கிறது. இந்தப் பின்னணியில்தான் வாட்ஸ் ஆப் சேவையில் ...

Read More »

பாடகர் உதித் நாராயணன், உஷா கண்ணாவுக்கு முஹம்மது ரபி விருது

மறைந்த இந்தி திரையிசைப் பாடகர் முஹம்மது ரபியின் பெயரால் வழங்கப்படும் சிறப்பு விருதுகளை பாடகர் உதித் நாராயணன், பாடகி உஷா கண்ணா ஆகியோருக்கு பெட்ரோலியத்துறை மந்திரி தர்மேந்திர பிரதான் வழங்கினார். மும்பையில் இயங்கிவரும் ஒரு அரசுசாரா தொண்டு நிறுவனத்தின் சார்பில் ஆண்டுதோறும் மறைந்த இந்தி திரையிசைப் பாடகர் முஹம்மது ரபியின் பெயரால் இசைத்துறை பிரபலங்களை தேர்வுசெய்து சிறப்பு விருதுகள் வழங்கப்படுகிறது. அவ்வகையில், இந்த ஆண்டுக்கான விருதுக்கு பாடகர் உதித் நாராயணன், பாடகி உஷா கண்ணா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டிருந்தனர். அவர்களுக்கு விருது வழங்கும் விழா ...

Read More »

அவுஸ்ரேலியா ஓபன் ஜனவரி 16-ந்திகதி மெல்போர்ன் பார்க்கில் தொடங்குகிறது

ஒவ்வொரு வருடமும் நான்கு கிராணட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் (அவுஸ்ரேலியா, விம்பிள்டன், பிரெஞ்ச் மற்றும் யு.எஸ்.) நடைபெறுவது வழக்கம். இதில் அவுஸ்ரேலியா கிராண்ட் ஸ்லாம் ஓபன் தொடர்தான் முதலில் (ஜனவரி) தொடங்கும். அதன்படி அடுத்த வருடத்திற்கான அவுஸ்ரேலியா ஓபன் ஜனவரி 16-ந்திகதி மெல்போர்ன் பார்க்கில் தொடங்குகிறது. இதற்காக அனைத்து வீராங்கனைகளும் தீவிர பயிற்சி மேற்கொண்டு வரும்வேளையில், காயம் காரணமாக அமெரிக்காவின் மேடிசன் கீஸ் கலந்து கொள்ள முடியாது என்று தெரிவித்துள்ளார். 21 வயதான மேடிசன் கீ்ஸ் கடந்த மாதம் நடைபெற்ற உலக சூப்பர் சீரிஸ் டென்னிஸ் ...

Read More »

பாக்சிங் டே டெஸ்டின் முக்கியத்துவத்தை நாங்கள் அறிவோம்-ஆசாத் ஷபிக்

அவுஸ்ரேலியாவிற்கு எதிராக மெல்போர்ன் மைதானத்தில் நடக்க இருக்கும் பாக்சிங் டே டெஸ்டின் முக்கியத்தும் குறித்து எங்களுக்குத் தெரியும் என ஆசாத் ஷபிக் கூறியுள்ளார். பாகிஸ்தான் கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் மெல்போர்ன் மைதானத்தில் 26-ந்திகதி தொடங்குகிறது. கிறிஸ்துமஸ் தினத்திற்கு அடுத்த நாள் தொடங்கும் இந்த போட்டி ‘பாக்சிங் டே’ டெஸ்ட் என்று அழைக்கப்படுகிறது. இந்த டெஸ்ட் போட்டியை சுமார் 80 ஆயிரம் ரசிகர்களுக்கு மேல் நேரில் பார்ப்பார்கள். இதனால் அதிக அளவு ...

Read More »

த ஏஜ் ஆஃப் ஷாடோ: போராளிகளின் கதை

தென்கொரியாவின் மீது 1920களில் ஜப்பான் ஆக்கிரமித்து ஆட்சி செய்தபோது, அதற்கு எதிராக போராடிய கொரிய புரட்சி குழுக்களின் கதையை சுவாரசியமாக, அதேநேரத்தில் அதன் அழுத்தமும் உண்மையும் குறையாமல் எடுத்திருக்கிறார் அந்நாட்டின் முக்கியமான இயக்குநரான கிம் ஜீ வூன். கடந்த செப்டம்பரில் தென்கொரியாவில் வெளியாகியுள்ள ‘த ஏஜ் ஆஃப் ஷாடோ’ அந்நாட்டின் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடுகிறது. 1920களில் தென்கொரியாவை ஆக்கிரமிப்பு செய்த ஜப்பான் தனது கடுமையான ஆட்சியை அதன் மீது செலுத்துகிறது. ஜப்பானியர்களுக்கு கொரியர்கள் அடிபணிந்து நடக்க வேண்டும்; இல்லையெனில், உயிரை விட வேண்டும். இந்நிலையில், ...

Read More »

தமிழர் குடியேறிய வரலாறு- அவுஸ்ரேலியாவில் தமிழர்!

ஆஸ்திரேலியா ஒரு கண்டம். 29,67,909 சதுர மைல் பரப்புள்ள நாடு. இந்நாட்டின் தலைநகரம் கேன்பரோ. இங்கு ஆங்கிலமே ஆட்சிமொழி. இந்நாடு ஏழு மாநிலமாக பிரிக்கப்பட்டுள்ளது. தமிழர் குடியேறிய வரலாறு ஆங்கிலேயர் குடியேறுவதற்கு முன்பே, ஆஸ்திரேலியாவில் தமிழர் குடியேறினர் என்பதற்கான ஆதாரம் கிடைத்துள்ளது. நியூசிலாந்து பழங்குடிகளான மவோரி மக்கள் மத்தியில் 19-ஆம் நூற்றாண்டில் ஒரு வெங்கல மணியை ஆங்கிலேயர் கண்டெடுத்தனர். அதை அங்குள்ள அரும்பொருட்காட்சிக் கூடத்தில் வைத்துள்ளனர். அம்மணியின் மீதுள்ள வாசகம், 15-ஆம் நூற்றாண்டுத் தமிழில் எழுதப்பட்டுள்ளது. அது பின் வருமாறு : முகையதீன் வக்குசு ...

Read More »

பாதுகாப்பை அதிகரித்தது அவுஸ்ரேலியா கிரிக்கெட் வாரியம்

அவுஸ்ரேலியாவில் தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளதால் ‘பாக்சிங் டே’ டெஸ்டிற்கான பாதுகாப்பை அதிகப்படுத்தியுள்ளது ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம். பாகிஸ்தான் கிரிக்கெட் அணி அவுஸ்ரேலியா சென்று விளையாடி வருகிறது. தற்போது மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் முதலில் நடைபெற்று வருகிறது. பிரிஸ்பேனில் நடைபெற்ற முதல் டெஸ்டில் அவுஸ்ரேலியா கடும் போராட்டத்திற்குப் பின் 39 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 2-வது போட்டி பிரபலமான மெல்போர்ன் மைதானத்தில் ‘பாக்சிங் டே’ டெஸ்ட் என்று அழைக்கப்படும் கிறிஸ்துமஸ் தினத்திற்கு அடுத்த நாள் நடைபெறும் போட்டி 26-ந்தேதி தொடங்குகிறது. அன்றைய ...

Read More »