அவுஸ்ரேலியா- பாகிஸ்தான் அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி 125 ரன்னுக்குள் 4 விக்கெட்டை இழந்து ஆடி வருகிறது.
அவுஸ்ரேலியா- பாகிஸ்தான் அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் போட்டி மெல்போர்ன் நகரில் இன்று தொடங்கியது.
முதலில் விளையாடிய பாகிஸ்தான் 125 ரன்னுக்குள் 4 விக்கெட்டை இழந்து திணறியது. சமிஅஸ்லம் (9 ரன்) லயன் பந்திலும், பாபர் ஆசம் (23 ரன்) ஹாசல்வுட் பந்திலும், யூனுஸ்கான் (21 ரன்), கேப்டன் மிஸ்பா (11 ரன்) போர்டு பந்திலும் ஆட்டம் இழந்தனர். அசார்அலி ஒருவரே பொறுப்புடன் ஆடி வருகிறார். பாகிஸ்தான் 4 விக்கெட் இழப்புக்கு 142 ரன் எடுத்து இருந்தபோது மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்டது.
Eelamurasu Australia Online News Portal