ஒவ்வொரு வருடமும் நான்கு கிராணட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் (அவுஸ்ரேலியா, விம்பிள்டன், பிரெஞ்ச் மற்றும் யு.எஸ்.) நடைபெறுவது வழக்கம். இதில் அவுஸ்ரேலியா கிராண்ட் ஸ்லாம் ஓபன் தொடர்தான் முதலில் (ஜனவரி) தொடங்கும்.
அதன்படி அடுத்த வருடத்திற்கான அவுஸ்ரேலியா ஓபன் ஜனவரி 16-ந்திகதி மெல்போர்ன் பார்க்கில் தொடங்குகிறது. இதற்காக அனைத்து வீராங்கனைகளும் தீவிர பயிற்சி மேற்கொண்டு வரும்வேளையில், காயம் காரணமாக அமெரிக்காவின் மேடிசன் கீஸ் கலந்து கொள்ள முடியாது என்று தெரிவித்துள்ளார்.
21 வயதான மேடிசன் கீ்ஸ் கடந்த மாதம் நடைபெற்ற உலக சூப்பர் சீரிஸ் டென்னிஸ் தொடரில் கலந்து கொண்டார். இந்த தொடர் முடிந்த மூன்று நாட்களுக்குப்பின் தனது இடது கை மணிக்கட்டில் உள்ள காயத்திற்காக ஆர்தோஸ்கோபிக் அறுவை சிகிச்சை செய்து கொண்டார். இதனால் இந்த தொடரில் பங்கேற்க இயலாது என்று தெரிவித்துள்ளார்.
இந்த வருடம் நடைபெற்ற அனைத்து கிராண்ட் ஸ்லாம் தொடர்களிலும் 16 சுற்றுக்குள் மேடிசன் கீஸ் முன்னேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.
Eelamurasu Australia Online News Portal