குமரன்

அவுஸ்திரேலியாவில் கணவனை கொன்ற பெண்! நன்னடத்தையால் விடுதலை

கணவனைக் கொன்ற குற்றத்திற்காக சிறைத் தண்டனை அனுபவித்துவரும் இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட மருத்துவப் பெண் சாமரி லியனகே, இந்த வாரம் விடுதலை செய்யப்படவுள்ளார் என அவுஸ்திரேலிய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. குறித்த இலங்கைப் பெண்ணின், நன்னடத்தை காரணமாகவே அவர் விடுதலை செய்யப்படவுள்ளார் என குறிப்பிடப்பட்டுள்ளது. மேற்கு அவுஸ்திரேலியாவில் வசித்து வந்த இலங்கை மருத்துவப் பெண், தனது கணவனை கடந்த 2014ம் ஆண்டு ஜுன் மாதம் அவர்களது இல்லத்தில் வைத்து சுத்தியலால் அடித்துக் கொலை செய்தார். இந்த குற்றச்சாட்டு காரணமாக குறித்த பெண்ணுக்கு கடந்த ...

Read More »

பிரித்தானிய துணைத் தூதுவர் முல்லை.இராணுவத்தளபதியுடன் சந்திப்பு!

சிறீலங்காவுக்கான பிரித்தானிய துணைத் தூதுவர் லோறா டேவிஸ், முல்லைத்தீவு படைகளின் தலைமையகத்தில், முக்கிய கலந்துரையாடல் ஒன்றை நடத்தியுள்ளார். கடந்த செவ்வாய்க்கிழமை, முல்லைத்தீவு படைகளின் தலைமையகத்துக்குச் சென்ற சிறிலங்காவுக்கான பிரித்தானிய துணைத் தூதுவர் லோறா டேவிஸ், முல்லைத்தீவு படைத் தலைமையக கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் டம்பத் பெர்னான்டோவுடன் பேச்சு நடத்தினார். இந்தக் கலந்துரையாடலில், பிரித்தானியத் தூதரக பாதுகாப்பு ஆலோசகர் கப்டன் ஸ்ருவார்ட் அன்ட்ரூ போர்லன்டும் பங்கேற்றார். இதன் போது, பரஸ்பரம் ஈடுபாடுள்ள விவகாரங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டதாக, சிறிலங்கா இராணுவத் தரப்பில் கூறப்பட்டுள்ளது. எனினும், முல்லைத்தீவு ...

Read More »

மீண்டும் வருகிறார் தெறி பேபி நைனிகா!

தம்பிக்கோட்டை படத்திற்கு பிறகு செகண்ட் இன்னிங்ஸை ஆரம்பிப்பார் என்று எதிர்பார்த்த மீனாவுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. ஆனபோதும் திரிஷ்யம் உள்பட சில மலையாளப் படங்களில் நடித்தார். அதோடு திரிஷ்யம் படம் தமிழில் கமல் நடிப்பில் ரீமேக் ஆனபோது அதில் நாயகியாக நடிக்க முயற்சி எடுத்தார் மீனா.ஆனால் கமலின் பலத்த சிபாரிசின்பேரில் அந்த வாய்ப்பு கெளதமிக்கு சென்று விட்டது. அதனால் இப்போதுவரை தமிழில் படவாய்ப்பு இல்லாமல் இருக்கிறார் மீனா. ஆனால், தனது மகள் நைனிகாவை விஜய் நடித்த தெறி படத்தில் விஜய்யின் மகளாக அறிமுகம் செய்தார். அப்படத்தில் ...

Read More »

இடுப்பு உயர ரோபோ ‘கேஸி!’

ரோபோவியலாளர்கள், ஆளைப் போலவே, ரோபோ, ஆளுயர ரோபோ என, படைத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால், அமெரிக்காவிலுள்ள அஜிலிட்டி ரோபாடிக்ஸ் நிறுவனம், இடுப்பு உயர ரோபோவை, அதுவும், இடுப்பு வரை மட்டுமே உள்ள ரோபோவை உருவாக்கி ஆச்சரியப்படுத்தி உள்ளது. நெருப்புக் கோழியின் கால்களை முன்மாதிரியாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள, ‘கேஸி’ என்ற இந்த ரோபோ, இரு கால்களும், சுற்றிலுள்ளவற்றை பார்க்கும், கேமரா கண்கள் மற்றும் பலவித உணர்வான்கள், செயற்கை நுண்ணறிவுத் திறன் ஆகியவற்றை கொண்டு உள்ளது. கடை கண்ணிக்குப் போய் வருபவர்கள், இதை உடன் அழைத்துச் சென்றால், திரும்பி ...

Read More »

Tasmania மாநிலத்தில் குடியேற விரும்புகிறீர்களா?

அவுஸ்ரேலியாவின் டஸ்மேனியா மாநிலத்தில் குடியேற விரும்புகிறீர்களா? இதற்கான வழிகளை அம்மாநில அரசு இலகுவாக்கியிருக்கிறது. வழமையாக Skilled Migration-க்கு விண்ணப்பிப்பவர்கள் அந்தந்த மாநிலங்களுக்குரிய Skilled Occupations List (SOL) தொழிற்பட்டியலிலிருக்கும் வேலைகளுக்கே விண்ணப்பிக்க முடியும். ஆனால் நீங்கள் சார்ந்திருக்கும் துறை டஸ்மேனியா மாநில தொழிற்பட்டியலில் இல்லாவிட்டாலும் நீங்கள் கீழ்க்காணும் பிரிவுகளின் கீழ் அங்கு குடியேறுவதற்கு விண்ணப்பிக்க முடியும். Skilled Independent Subclass 189 Skilled Nominated Subclass 190 Skilled Regional (Provisional) Subclass 489 உங்களுக்கான sponsor-ஐ வழங்குவதற்கும் டஸ்மேனியா மாநில அரசு தயாராகவுள்ளது. ஆனால் ...

Read More »

பெண்களுக்காக ஒரு சினிமா

அழகு, அன்பு, அற்புதம், காதல், காமம், வீரம்… இப்படி சினிமாப் பெண்களுக்கு அரிதாரம் பூசப்படுகிறது. இதுவரை சமூகம் பெண்களுக்கு என வரைந்து வைத்திருக்கும் கோடுகளை தாண்டாமல் திரைக்கதை அமைத்து அவர்கள் சகித்துக் கொள்ளும் தியாகிகள் அல்லது கோடுகளை தாண்டும் தவப் புதல்விகளாகவும் எடுத்தியம்பியது. ேகாடுகளை கண்டு கொள்ளாமல் தனது தீரம் உள்ள வரை எல்லையற்று இயங்கும் பெண்களும் இருக்கவே செய்கிறார்கள். அப்படியொரு பெண் ‘பிரபாவதி’. தனக்கு நடக்கும் அநீதிக்கு எதிராக ஆயுதம் எடுக்கும் அவளது கதையே ‘பிரபா’. பூனைகள் கூடிப் போராடி எலிகளுக்கு விடுதலை ...

Read More »

குறைந்த மின்சாரத்தில் குரல் ஆணை ‘சில்லு’

இனி, குரல் ஆணை மூலம் இயக்கப்படும் சாதனங்கள் அதிகரிக்கப் போகின்றன. இந்த தேவையை சமாளிக்க, அமெரிக்காவிலுள்ள, மாசாசூசெட்ஸ் தொழில்நுட்ப நிலையத்தைச் சேர்ந்த பேராசிரியர் ஆனந்த சந்திரசேகரன் தலைமையிலான ஆராய்ச்சிக்குழு, ஒரு சிறப்பு சிலிக்கன் சில்லு ஒன்றை உருவாக்கியுள்ளது. தற்போது ஆப்பிளின், ‘சிறி’, கூகுளின், ‘ஹோம்’, அமேசானின், ‘எக்கோ’ போன்ற குரல் ஆணை மூலம் இயங்கி, குரல் மூலமே தகவல் தரும் தொழில்நுட்பங்கள் செயற்கை நுண்ணறிவு மூலமே இயங்குகின்றன. இவை இயங்கும் போது, ஒரு வாட் அளவுக்கு மின் சாரத்தை செலவிடுகின்றன. ஆனால், ஆனந்த சந்திரசேகரன் ...

Read More »

தமிழர்கள் தமது விவகாரங்களை கையாள அனுமதிக்கப்பட வேண்டும்: சம்பந்தன்

பிரிக்கப்படாத, ஒன்றுபட்ட இலங்கைக்குள் தமிழர்கள் தமது விவகாரங்களைத் தாமே கையாள அனுமதிக்கப்பட வேண்டும் என தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க் கட்சி தலைவருமான இரா. சம்பந்தன் வலியுறுத்தியுள்ளார். அமெரிக்க நாடாளுமன்றத்தின் நீதித்துறைக் குழுவின் தலைவரான பொப் குட்லட் தலைமையிலான எட்டு நாடாளுமன்ற குழுவினரை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கிய பிரதிநிதிகள் நேற்று (வெள்ளிக்கிழமை) கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகத்தில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்திய போதே அவர் இவ்விடயத்தை வலியுறுத்தினார். மேலும், இதன் போது, 30 வருடங்களாக நடந்த போரினால் பாதிக்கப்பட்டுள்ள தமிழ் மக்களுக்கு சாத்தியமான வழிகளில் ...

Read More »

இரட்டை குடியுரிமை பெற்ற அவுஸ்ரேலியர்களுக்கு அமெரிக்க பயண தடை இல்லை

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் அகதிகள் மற்றும் குடியேற்றவாசிகள் தொடர்பான புதிய உத்தரவினால் இரட்டைக்குடியுரிமை உடைய அவுஸ்ரேலியர்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என அவுஸ்ரேலிய பிரதமர் மல்கம் டேர்ன்புல் தெரிவித்துள்ளார். அவுஸ்ரேலிய ஊடகம் ஒன்றுக்கு  வழங்கிய நேர்காணல் ஒன்றின் போதே பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், ‘ அவுஸ்ரேலிய கடவுச்சீட்டு கொண்டிருப்பவர்கள் குறித்து வெள்ளை மாளிகையுடன் தொடர்புகொண்டு உறுதிப்படுத்தியதாக அவுஸ்திரேலியாவுக்கான அமெரிக்க தூதுவர் எனக்கு தொலைபேசி மூலம் உத்தரவாதம் அளித்துள்ளார். பிறந்த இடமோ அல்லது இரட்டை குடியுரிமை உடையவர்களாக ...

Read More »

யானை மீது கம்பீரமாய் பிரபாஸ்

இந்திய அளவில் அதிக தொகையை வசூல் செய்த தென்னிந்திய சினிமா பாகுபலி படம் தான். பாகுபலி படத்தின் முதல் பாகத்தின் பிரம்மாண்டமான வெற்றியைத் தொடர்ந்து அதன் 2 ஆம் பாகத்தை மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாக்கி வருகிறார் இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி. பரபரப்பாக நடைபெற்று வந்த படப்பிடிப்பு சில வாரங்களுக்கு முன் முடிவடைந்தது. தற்போது பாகுபலி படத்தின் முக்கிய பணியான கிராபிக்ஸ் பணிகள் தற்போது துரிதமாக நடைபெற்று வருகின்றன. இன்னொரு பக்கம் எடிட்டிங்,ட ப்பிங் போன்ற போஸ்ட் புரொடக்ஷன் பணிகளும் நடைபெற்று வருகின்றன. ஏற்கனவே பாகுபலி படத்தின் ...

Read More »