குமரன்

புளூ ஆர்ஜின் ராக்கெட்

அமேசன் நிறுவனத்தின் துணை நிறுவனமான புளூ ஆர்ஜின் புவி ஈர்ப்பு விசைக்கு அப்பால் மனிதர்களை சுற்றுலா அழைத்துச் செல்லும் ஆராய்ச்சிகளில் உள்ளது. இந்த நிலையில் 2022ம் ஆண்டு விண்வெளிக்கு அனுப்பவுள்ள ராக்கெட்டின் மாதிரி வீடியோவை வெளியிட்டுள்ளது. இந்த ராக்கெட் புவியீர்ப்பு விசைக்கு அப்பால் செயற்கை கோளை அனுப்பியவுடன், ராக்கெட்டின் அடிப்பாகம் தனியாக கழன்று பூமிக்கே திரும்பி விடும். இதன் மூலம் செயற்கைக் கோள் ஏவ ஒரு ராக்கெட்டையே பலமுறை பயன்படுத்தலாம்.

Read More »

உருமாறும் ரோபோ!

அமெரிக்காவின் நாசா, விண்வெளி ஆராய்ச்சிக்காக ஜப்பானின் ஓரிகாமி கலையை அடிப்படையாகக் கொண்ட புதிய வகையில் உருமாறும் ரோபோவை வடிவமைத்துள்ளது. சக்கரங்கள் மூலம் நகரும் இந்த ரோபோ, தொடர்ந்து செல்வதற்கு தடை இருந்தால் இடத்துக்கு ஏற்ப பல வகைகளிலும் மடங்கி, சுழன்று செல்கிறது. இதன் மூலம் சோதனைக்கு அனுப்பும் கிரகத்தில் தானியங்கி முறையில் இயங்கும்போது, மேடு பள்ளங்களில் தடைபடாமல் உருமாறி பயணிக்கும்.

Read More »

ஜோதிகா நடிக்கும் ‘மகளிர் மட்டும்’ படப்பிடிப்பு நிறைவு

ஜோதிகா நடிப்பில் உருவாகிவரும் ‘மகளிர் மட்டும்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. ஜோதிகா நடிப்பில் உருவாகிவரும் புதிய படம் ‘மகளிர் மட்டும்’. இப்படத்தை ‘குற்றம் கடிதல்’ படத்தை இயக்கிய பிரம்மா இயக்கி வருகிறார். ஜோதிகாவுடன் ஊர்வசி, சரண்யா பொன்வண்ணன், பானுப்ரியா ஆகியோர் நடித்து வருகின்றனர். இப்படத்தை சூர்யா தனது 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் மூலம் தயாரித்து வருகிறார். பெண்களுக்கு முக்கியத்துவம் எடுக்கப்பட்டு வரும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது முடிவடைந்துள்ளது. இதையடுத்து படத்தின் இறுதிக்கட்ட பணிகளை படக்குழுவினர் தொடங்கவுள்ளனர். ஜிப்ரான் இசையமைத்துள்ள இப்படத்தின் பாடல்களையும் ...

Read More »

போர்க்குற்றவாளியான இராணுவ அதிகாரிக்கு வீசா வழங்க மறுத்த அவுஸ்ரேலியா!

போர்க்குற்றங்களை இழைத்தார் என்ற குற்றச்சாட்டுக்கு உள்ளாகியிருக்கும், இலங்கை இராணுவத்தைச் சேர்ந்த மேஜர் ஜெனரல் சாஜி கல்லகேக்கு நுழைவிசைவு வழங்க அவுஸ்ரேலியா மறுத்துள்ளது. அவுஸ்ரேலிய குடியுரிமை பெற்றுள்ள தனது சகோதரரைப் பார்ப்பதற்காகவே, மேஜர் ஜெனரல் சாஜி கல்லகே ஒரு மாத கால அஸ்ரேலிய நுழைவிசைவுக்கு விண்ணப்பித்திருந்தார். எனினும், இறுதிப் போரின் போது, 2009 மே 7ம் நாள் தொடக்கம், 2009 ஜூலை 20ம் நாள் வரை 59 வது டிவிசனுக்குத் தலைமை தாங்கினார் என்பதாலேயே மேஜர் ஜெனரல் சாஜி கல்லகேயின் நுழைவிசைவு விண்ணப்பம் அவுஸ்ரேலியாவினால் நிராகரிக்கப்பட்டுள்ளது. ...

Read More »

விளையாட்டுலகின் ட்ரம்ப் விராட் கோலி: அவுஸ். ஊடகம் கேலி

தமது நாட்டு வீரர்களைப் பற்றி தவறான தகவல்களைப் பரப்பி வரும் விராட் கோலி, விளையாட்டு உலகின் டொனால்ட் ட்ரம்ப் என்று அவுஸ்ரேலியாவின் ‘டெய்லி டெலிகிராஃப்’ பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. கோலி ஆதாரமற்ற தகவல்களை வெளியிட்டு வருவதாகவும், அவரது இந்த நடவடிக்கை குறித்து இந்தியா கிரிக்கெட் சபையோ, உலக கிரிக்கெட் சபையோ எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்காதது வருத்தமளிப்பதாகவும் அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. “அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பைப் போலவே கோலியும் தனது தவறுகளை மறைப்பதற்காக ஊடகங்கள் மீது தொடர்ச்சியாகப் பழி கூறி வருகிறார். அவர் கூறும் கருத்துக்கள் ...

Read More »

தனுஷ் தயாரிக்கும் மலையாள படம்

மலையாளத்தில் டோவினோ தாமஸ் நாயகனாக நடிக்கும் படத்தை தனுஷ் தனது வுண்டர்பார் பிலிம்ஸ் மூலமாக தயாரிக்க உள்ளார். விஜய், அஜீத், சூர்யாவுக்கு மலையாளத்திலும், தனி ரசிகர்கள் உள்ளனர். இந்த நிலையில் மம்முட்டி, திலீப் நடித்த ‘கம்மத் அண்ட் கம்மத்’ என்ற படத்தில் தனுஷ் நடித்துள்ளார். இதில் நடிகர் தனுஷ் ஆகவே வருகிறார். தற்போது தனுஷ் மலையாளத்தில் படம் தயாரிக்கிறார். தனுசின் வுண்டர்பார் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் மலையாளப்பட உலகில் வளர்ந்து வரும் நடிகரான டோவினோ தாமஸ் கதாநாயகனாக நடிக்கிறார். இதை டோமினிக் அருண் ...

Read More »

551 பேரைக் கோத்தாபய ராஜபக்ஷ கொலைசெய்தமைக்கான ஆதாரம் உண்டு!

கொழும்பிலும், அதனை அண்டிய பிரதேசங்களிலும் கூலிப்படையை வைத்து 551பேரை சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் கோத்தாபய ராஜபக்ஷ கொலைசெய்தார் என தேசிய சகவாழ்வு அமைச்சர் மனோகணேசன் தெரிவித்துள்ளார். மேலும், இவரால் கடத்திக் கொலைசெய்யப்பட்டவர்களின் விபரங்கள் தன்னிடமுள்ளதாகப் பகிரங்கமாகத் தெரிவித்துள்ளார். கொழும்பு ஸ்ரீ கதிரேசன் வீதி புனர்நிர்மாணம் செய்யப்பட்டு இன்றைய தினம் மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். “இலக்கத்தகடு இல்லாத வாகனங்களில் உத்தியோகபூர்வ சீருடையின்றி வந்து, தம்மை அடையாளப்படுத்தாமல் நள்ளிரவில் வந்து கதவுகளைத் தட்டி தூக்கிச்சென்றனர். இதற்கெதிராக ...

Read More »

தர்மசாலா ஆடுகளம் இந்தியாவுக்கு ‘கை’ கொடுக்குமா?

அவுஸ்ரேலிய அணிக்கு எதிராக கடைசி டெஸ்ட் நடைபெறும் தர்மசாலா ஆடுகளம் இந்தியாவுக்கு ‘கை’ கொடுக்குமா என்று எதிர் பார்க்கப்படுகிறது. ஸ்டீவன் சுமித் தலைமையிலானஅவுஸ்ரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 4 டெஸ்ட் போட்டித் தொடரில் புனேயில் நடந்த முதல் டெஸ்டில் 333 ரன் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவும், பெங்களூரில் நடந்த 2-வது டெஸ்டில் 75 ரன் வித்தியாசத்தில் இந்தியாவும் வெற்றி பெற்று இருந்தன. ராஞ்சியில் நடந்த 3-வது டெஸ்ட் ‘டிரா’ ஆனது. இதனால் தொடர் 1-1 என்ற ...

Read More »

வாட்ஸ் ஆப்பில் வருகிறது பழைய ஸ்டேட்டஸ் முறை

வாட்ஸ் ஆப் நிறுவனம், மீண்டும் பழைய எழுத்து மூலமான ஸ்டேட்டஸ் வசதியை கொண்டுவர திட்டமிட்டுள்ளது. கடந்த மாதம் வாட்ஸ் ஆப் நிறுவனம், ஸ்டேட்டஸில் வீடியோ, போட்டோ, ஜிஃப் போன்றவற்றை வைக்கக்கூடிய விதத்தில் அப்டேட் செய்யப்பட்டது. இந்த ஸ்டேட்டஸ் 24 மணி நேரத்தில் அழிந்துவிடும் என்றும், தினமும் புதியதாக மீண்டும் மீண்டும் ஸ்டேட்டஸ் மாற்றிக் கொண்டே இருக்க வேண்டும் என்ற நிலை இருந்தது. வாட்ஸ் ஆப் பயன்படுத்துவோர் மத்தியில் இந்த புதிய அப்டேட்டை பலரும் விரும்பாததாக தகவல் வெளியானது. இதையடுத்து, மீண்டும் பழைய எழுத்து முறையிலான ...

Read More »

கீத் நொயார் தம்மை தாக்கியவர்களின் அடையாள அணி வகுப்பில் பங்கேற்க விரும்பவில்லை

அவுஸ்ரேலியாவில் வாழ்ந்து வரும் ஊடகவியலாளர் கீத் நொயார் தம்மை தாக்கியவர்களின் அடையாள அணி வகுப்பில் பங்கேற்க விரும்பவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2008ம் ஆண்டு கீத் நொயார் கடத்திச் செல்லப்பட்டு கடுமையாக தாக்கப்பட்டிருந்த சம்பவம் தொடர்பில் தற்போது வழக்கு விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன. சம்பவம் தொடர்பில் இராணுவப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் சிலர் கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களை அடையாள அணிவகுப்பிற்கு உட்படுத்தமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த போதும் கீத் நொயார், அடையாள அணி வகுப்பில் பங்கேற்க ஆர்வம் ...

Read More »