வாட்ஸ் ஆப் நிறுவனம், மீண்டும் பழைய எழுத்து மூலமான ஸ்டேட்டஸ் வசதியை கொண்டுவர திட்டமிட்டுள்ளது.
கடந்த மாதம் வாட்ஸ் ஆப் நிறுவனம், ஸ்டேட்டஸில் வீடியோ, போட்டோ, ஜிஃப் போன்றவற்றை வைக்கக்கூடிய விதத்தில் அப்டேட் செய்யப்பட்டது. இந்த ஸ்டேட்டஸ் 24 மணி நேரத்தில் அழிந்துவிடும் என்றும், தினமும் புதியதாக மீண்டும் மீண்டும் ஸ்டேட்டஸ் மாற்றிக் கொண்டே இருக்க வேண்டும் என்ற நிலை இருந்தது.
வாட்ஸ் ஆப் பயன்படுத்துவோர் மத்தியில் இந்த புதிய அப்டேட்டை பலரும் விரும்பாததாக தகவல் வெளியானது. இதையடுத்து, மீண்டும் பழைய எழுத்து முறையிலான ஸ்டேட்டஸ் வசதியை மறு அறிமுகம் செய்யப் போவதாக வாட்ஸ்அப் நிறுவனம் தெரிவித்துள்ளது. அடுத்த வாரம் முதல் இந்த வசதி ஆண்டாரய்டு போன்களில் கொண்டுவரப்படும் என்று வாட்ஸ் ஆப் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.