அமெரிக்காவின் நாசா, விண்வெளி ஆராய்ச்சிக்காக ஜப்பானின் ஓரிகாமி கலையை அடிப்படையாகக் கொண்ட புதிய வகையில் உருமாறும் ரோபோவை வடிவமைத்துள்ளது.
சக்கரங்கள் மூலம் நகரும் இந்த ரோபோ, தொடர்ந்து செல்வதற்கு தடை இருந்தால் இடத்துக்கு ஏற்ப பல வகைகளிலும் மடங்கி, சுழன்று செல்கிறது.
இதன் மூலம் சோதனைக்கு அனுப்பும் கிரகத்தில் தானியங்கி முறையில் இயங்கும்போது, மேடு பள்ளங்களில் தடைபடாமல் உருமாறி பயணிக்கும்.