குமரன்

முதியோர் இல்லத்தைச் சேர்ந்த இருவர் உட்பட 35 பேருக்கு தொற்று!

நியூசவுத் வேல்ஸ் மாநிலத்தில் சமூகப் பரவல் ஊடாக புதிதாக 35 பேருக்கு கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவர்களில் இருவர் SummitCare முதியோர் பராமரிப்பு இல்லத்தில் வாழ்பவர்கள். நேற்றையதினம் இம்முதியோர் இல்லத்தைச் சேர்ந்த மூவருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருந்தது. இதேவேளை குறித்த 35 பேரில் 24 பேர் நோய்த்தொற்றுக்காலம் முழுவதும் தனிமைப்படுத்தலில் இருந்ததாகவும் 11 பேர் நோய்த்தொற்றுடன் சமூகத்தில் நடமாடியிருந்ததாகவும் குறிப்பிடப்படுகிறது. இதையடுத்து Bondi பரவல் ஊடாக கோவிட் தொற்றுக்கண்டோர் எண்ணிக்கை 312 ஆக அதிகரித்துள்ளது. வெளிநாடுகளிலிருந்து திரும்பிவந்து விடுதிகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள இருவருக்கும் கோவிட் தொற்று  உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ...

Read More »

பாடகியாக அறிமுகமான பிக்பாஸ் லாஸ்லியா

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3-வது சீசனில் கலந்துகொண்டு பிரபலமான நடிகை லாஸ்லியா, தற்போது படங்களில் நடித்து வருகிறார் இலங்கையை சேர்ந்த லாஸ்லியா, பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமானார். அந்நிகழ்ச்சி மூலம் அவருக்கு ஏராளமான ரசிகர்கள் உருவானார்கள். அந்நிகழ்ச்சிக்கு பின் அவருக்கு பட வாய்ப்பும் குவிந்து வருகிறது. அந்த வகையில் அவர் கைவசம் ‘பிரெண்ட்ஷிப்’, ‘கூகுள் குட்டப்பன்’ போன்ற படங்கள் உள்ளன. இதில் பிரெண்ட்ஷிப் படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஜான் பால் ராஜ் மற்றும் ஷாம் சூர்யா இணைந்து ...

Read More »

அகதிகள் படகு கடலில் கவிழ்ந்து 43 பேர் பலி

துனிசியாவில் அகதிகள் படகு கவிழ்ந்து கடலில் தத்தளித்த 84 பேரை மீட்புக்குழுவினர் பத்திரமாக மீட்டனர். துனிசியா நாட்டின் எல்லையையொட்டி அமைந்துள்ள ஸ்வாரா நகரிலிருந்து பெண்கள், சிறுவர்கள் உள்பட சுமார் 130 அகதிகள் படகு ஒன்றில் ஐரோப்பா நோக்கி புறப்பட்டனர்.‌ இந்த படகு துனிசியாவின் தென்கிழக்குப் பகுதியிலுள்ள ஷார்ஷிஸ் நகருக்கு அருகே சென்று கொண்டிருந்தபோது சற்றும் எதிர்பாராத வகையில் கடலில் கவிழ்ந்தது. இதில் படகில் இருந்த அனைவரும் நீரில் மூழ்கி தத்தளித்தனர். அப்போது அங்கு படகுகளில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் உடனடியாக மீட்பு பணியில் இறங்கினர். ...

Read More »

பிரித்தானிய உயர்ஸ்தானிகர் – கூட்டமைப்பு சந்திப்பு!

சிறிலங்காவுக்கான  பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஷாரா ஹல்டன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை எதிர்வரும் புதன்கிழமை கொழும்பில் சந்திக்கவுள்ளார். இந்தச் சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளின் தலைவர்களான மாவை.சோ.சேனாதிராஜா, செல்வம் அடைக்கலநாதன், சித்தார்த்தன் ஆகியோரும், பேச்சாளரான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரனும் பங்கேற்கவுள்ளன . தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் சந்திப்பொன்றை மேற்கொள்வதற்கு பிரித்தானிய உயர்ஸ்தானிகரிடமிருந்தே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதன்போது, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் பிரித்தானியா தலைமையில் நிறைவேற்றப்பட்ட இலங்கை தொடர்பான தீர்மானம் கிடப்பில் போடப்பட்டுள்ள நிலையில் தீர்மானத்தினை நிறைவேற்றிய நாடுகள் பிறிதொரு தீர்மானம் தொடர்பில் ...

Read More »

நிர்ணயிக்கப்பட்ட சம்பளத்தை விட குறைவாகக் கொடுத்தால் தண்டனை!

தொழிலாளர்களுக்கு சரியாகச் சம்பளம் கொடுக்காதவர்களைத் தண்டிக்கும் சட்டம் விக்டோரிய மாநிலத்தில் நடைமுறைக்கு வந்துள்ளது. அவுஸ்ரேலியாவில்  முதன்முறையாக ஊதியத் திருட்டைக் குற்றமாக்கும் சட்டம் இதுவாகும். தொழிற்சங்கங்களும் அது சார்ந்த தொழில்துறை வழக்குரைஞர்களும், நாட்டில் ஊதியத் திருட்டு பரவலாகக் காணப்படுகிறது என்றும், மற்றைய மானிலங்களும் விக்டோரியாவின் வழியைப் பின்பற்ற வேண்டுமென்று கோரிக்கை முன் வைத்துள்ளனர்.

Read More »

கதைசொல்லி சஞ்சய்!

ஒரு கலைஞர் தன்னுடைய கலையின் மூலமாக ரசிகர்களுடன் பேசுவது வழக்கமான ஒன்றுதான். ஆனால், அந்தக் கலையின் பல சிறப்பான அம்சங்கள் அந்தக் கலைஞரிடம் ஏதோ ஒரே நாளில் வந்தடைந்த கண்கட்டு வித்தை அல்ல. அதற்குப் பின்னால் நிறைய வலிகள் இருக்கும்… கோபங்கள் இருக்கும்… பயிற்சிகள் இருக்கும்… அவமானங்கள் இருக்கும்… எண்ணற்ற மகிழ்ச்சியான தருணங்கள் இருக்கும்… ஏக்கங்கள் இருக்கும். ‘கலைப் பயணத்தில் ஒரு கலைஞரின் வாழ்க்கையில் அவருக்கான இந்த இடம் எப்படிக் கிடைத்தது?’ என்பதில் இருக்கும் சுவாரஸ்யங்களை ஒரு கலைஞரே தன்னுடைய ரசிகருக்குச் சொல்வது அலாதியான ...

Read More »

இதுபோன்ற இழி செயல்களில் நாங்கள் ஈடுபடமாட்டோம்: டொமினிக்கன் பிரதமர்

இந்தியாவால் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட மெகுல் சோஸ்கியை கடத்த சதித் திட்டம் தீட்டியதாக தங்கள் நாட்டின் மீது எழுந்துள்ள புகாரை டொமினிக்கன் நாட்டுப் பிரதமர் ரூஸ்வெல்ட் ஸ்கெரிட் மறுத்துள்ளார். பஞ்சாப் நேஷனல் வங்கியின் ரூ.13,500 கோடி நிதி மோசடியில் தொடர்புடைய மெகுல் சோக்சி, 2018-லிருந்து ஆன்டிகுவா தீவில் வசித்துவந்தார். இதற்கிடையில் கடந்த மே 23-ம் தேதி அவர் திடீரென காணாமல் போனார். பின்னர் சில நாட்கள் கழித்து தன் காதலியுடன் கியூபா தப்ப இருந்தவரை டொமினிக்கன் தீவு போலீஸார் கைது செய்தனர். ஆனால், சோக்சி ...

Read More »

கிரிக்கெட் வீரரை நேரில் சந்தித்த யோகி பாபு…

முன்னணி நகைச்சுவை நடிகராக இருக்கும் யோகிபாபு, பிரபல கிரிக்கெட் வீரருடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் திரையுலகில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் யோகிபாபு. இவரும் யார்க்கர் கிங் என்று அழைக்கப்படும் நடராஜனும் நண்பர்கள். சமீபத்தில் யோகி பாபு நடித்த மண்டேலா படத்தை பார்த்து நடராஜன் பாராட்டி இருந்தார். யார்க்கர் கிங் நடராஜன் – யோகி பாபு இந்த நிலையில் யோகி பாபு, நடராஜனை நேரில் சந்தித்து பேசி இருக்கிறார். இருவரும் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை நடராஜன் ...

Read More »

வெளிமாவட்டத்தவர்களின் வருகையாலேயே முல்லையில் கொவிட் தொற்று

முல்லைத்தீவு மாவட்டத்தில் வெளிமாவட்டத்தவர்களின் வருகை அதிகரித்துள்ளதாலேயே கொவிட் – 19 தொற்றும் அதிகரித்துள்ளதாக முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார். எனவே பாதுகாப்புத்தரப்பினரும், அரச திணைக்களங்களும், அதிகரித்துள்ள வெளிமாவட்டத்தவர்களின் வருகையினைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு – செம்மலை கிழக்கு, நாயாற்றுப் பகுதியில் ஆயிரக்கணக்கில் குடும்பங்களுடன் தங்கியுள்ள வெளிமாவட்ட மீனவர்களில் 25பேருக்கு கடந்தமாதம் 29ஆம் திகதி மேற்கொண்ட பி.சி.ஆர் பரிசோதனையில், ஐவருக்கு தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து அப்பகுதி முடக்கப்பட்டுள்ளது. இந் நிலையில் இதுதொடர்பில் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் ...

Read More »

சிறிலங்கா அரசாங்கம் ஏன் இப்படி செயற்படுகிறது?

வடக்கில் கொலைகார கும்பலால் பொதுமக்கள் பாரதூரமான முறையில் தாக்கப்பட்டுள்ள சம்பவம் பதிவாகியுள்ளது. இவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியாமல் போயுள்ளதா என தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதாக வாக்களித்த அரசாங்கத்திடம் கேள்வியெழுப்புவதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். இவ்வாறான கொலையாளிகளை கைது செய்யும் விடயத்தில் மந்தகதியில் செயற்படாமல் துரிதமாக செயற்பட்டு நாட்டில் குறிப்பாக வடக்கில் அமைதியை நிலைநாட்ட நடவடிக்கை எடுக்குமாறு அரசாங்கத்தை கேட்டுக் கொள்வதாகவும் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார் ஐக்கிய மக்கள் சக்தியினால் நடைமுறைப்படுத்தப்படுகின்ற ”எதிர்க் கட்சியிலிருந்து ஓர் மூச்சு’ நிகழ்ச்சித் ...

Read More »