குமரன்

ஆஸ்திரேலியாவில் கோவிட் தடுப்பூசி போட்டுக்கொண்டோர் எண்ணிக்கையில் புதிய மைல்கல்!

ஆஸ்திரேலியாவில்  முதலாவது சுற்று கோவிட் தடுப்பூசி போட்டுக்கொண்டோர் எண்ணிக்கை இன்றையதினம் 90 சதவீதத்தை எட்டுவதால், இன்றையநாள் மிக முக்கியமான மைல்கல் எட்டப்படும் நாளாக பதிவாகிறது என சுகாதார அமைச்சர் Greg Hunt தெரிவித்தார். Moderna-வின் mRNA கோவிட்-19 தடுப்பூசியான SPIKEVAX-ஐ, 6-11 வயதுக்குட்பட்டவர்கள் போட்டுக்கொள்வதற்கான தற்காலிக ஒப்புதலை Therapeutic Goods Administration வழங்கியுள்ளது. கோவிட் தொற்று எவ்வாறு ஏற்பட்டது என்பதற்கான தொடர்புகளைக் கண்டறியமுடியாதுபோனால், Gold Coast-இல் மேலதிக கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என குயின்ஸ்லாந்து Premier Annastacia Palaszczuk  தெரிவித்துள்ளார். ACT-இல் கோவிட் தொற்றுக்குள்ளான 33 பேர் கன்பராவில் இடம்பெற்ற சட்டவிரோத ...

Read More »

நிலவுக்கு மனிதனை அனுப்பும் திட்டம் தள்ளிவைப்பு -நாசா

சட்டப் பிரச்சினைகள் காரணமாக நிலவுக்கு மனிதனை அனுப்பும் பணி 2025-ம் ஆண்டுக்கு தள்ளி வைப்பதாக நாசா விண்வெளி மையத்தின் நிர்வாகி பில் நெல்சன் தெரிவித்துள்ளார். அமெரிக்கா 1969-ம் ஆண்டு ஜூலை 21-ந்தேதி முதன்முதலில் மனிதனை நிலவுக்கு அனுப்பியது. அதன் பிறகு அமெரிக்கா நாசா விண்வெளி மையம் பல தடவை மனிதனை நிலவுக்கு அனுப்பி சோதனை நடத்தியது. இதற்கு மிக அதிகமாக செலவானதால் அதன் பின்னர் மனிதர்கள் அனுப்பப்படவில்லை. டிரம்ப் ஜனாதிபதியாக இருந்த போது மீண்டும் மனிதனை நிலவுக்கு அனுப்பி ஆய்வு மேற்கொள்ளப்படும் என்று அறிவித்தார். ...

Read More »

புதிய அவதாரம் எடுக்கும் கீர்த்தி சுரேஷ்

தமிழ், தெலுங்கு மொழிகளில் பிஸியாக நடித்து வரும் கீர்த்தி சுரேஷ், அடுத்ததாக தனது சொந்த தயாரிப்பில் கதாநாயகியாக நடிக்க இருக்கிறார். நடிகை மேனகா, தயாரிப்பாளர் சுரேஷ் ஆகியோரின் மகளான கீர்த்தி சுரேஷ், ‘இது என்ன மாயம்’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். குறுகிய காலத்திலேயே விஜய், சூர்யா, விக்ரம் ஆகியோரின் படங்களில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகியாக வளர்ந்தார். பின்னர் தெலுங்கில் ‘மகாநடி’ படத்தில் நடித்து தேசிய விருதும் பெற்றார். தற்போது சிரஞ்சீவியுடன் வேதாளம் ரீமேக், மகேஷ் பாபுவுடன் ‘சர்காரு வாரி ...

Read More »

யாழில் கொரோனா தொற்றாளர்கள் மீண்டும் அதிகரிப்பு:அரச அதிபர்

யாழ். மாவட்டத்தில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை மீண்டும் அதிகரித் துள்ளதாக யாழ்.மாவட்ட அர சாங்க அதிபர் க. மகேசன் தெரி வித்தார். யாழ்.மாவட்ட செயலகத்தில் நேற்று நடத்திய ஊடகவிய லாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில், யாழ். மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்கு உள்ளா வோரின் எண்ணிக்கை அண் மையில் சடுதியாகக் குறைந் திருந்த நிலையில் நேற்று முன் தினம் 43 பேர் தொற்றாளர்களாக இனங்காணப் பட்டுள்ளனர். ஏனைய மாவட்டங்களைப் போல யாழ்.மாவட்டத்திலும் மீண்டும் கொரோனா நோயாளி களின் எண்ணிக்கை அதிகரித் ...

Read More »

வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்களுக்கும் வாய்ப்பளிக்கவேண்டும்

வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்களுக்கு விரைவில் இரட்டை பிரஜாவுரிமையினை வழங்கி, தபால் மூலமாகவேனும் வாக்களிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் கோரிக்கை விடுத்துள்ளார். பாராளுமன்றத்தில் நேற்று(புதன்கிழமை) உரையாற்றிய போதே அரசாங்கத்திடம் அவர் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார். இதன்போது தொடர்ந்தும் உரையாற்றிய அவர், “அரசாங்கத்திடம் மிக முக்கியமான கோரிக்கை ஒன்றினை இந்த வேளையில் முன்வைக்க விரும்புகின்றேன். வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்கள் பலரும் இரட்டை பிரஜாவுரிமையினை பெற்றுக்கொள்ளவதில் ஆர்வமாகவே உள்ளனர். இரட்டை பிரஜாவுரிமையினை பெற்றுக்கொள்வது இலகுவாக இருந்தாலும், அதற்கான ...

Read More »

இந்தியாவுடன் மின்விநியோக கட்டமைப்பு …… இலங்கை மின்சக்தி அமைச்சர் காமினி லொக்குகே

*வேலைநிறுத்தம் செய்யப்போவதாக அச்சுறுத்துபவர்களால் முன்னிலைப்படுத்தப்பட்ட பிரச்சினைகள் அவர்களால் சித்தரிக்கப்படுவது போன்று பாரதூரமானவை அல்ல என்பதை நாங்கள் அவர்களுக்கு விளக்கினோம் * டீசலை விட திண்ம எல்என்ஜி பொருளாதார ரீதியாக அதிகநன்மையானது என்று உலகளா விய ரீதியில்வலுவான குரல் எழுந்துள்ளது. *இத்தகைய பின்னணியில், அமெரிக்கத் தூதரகம் எங்களுடன் செயற்பட்டு அதன் நிறுவனத்தினால் எல்என்ஜியை வழங்க முன்மொழிந்தது *மின் ஊழியர்கள் யாவரும் பயங்கரவாதிகள் அல்ல *உலகம் பசுமை சக்தியை தேர்வு செய்கிறது எல்என்ஜி (திரவ இயற்கை எரிவாயு) விநியோகத்திற்கான அமெரிக்காவின் புதியபோர்ட்ரெஸ் எரிசக்தி ஒப்பந்தம் மற்றும் இந்தியா ...

Read More »

குயின்ஸ்லாந்து மாநிலத்தில் கட்டுப்பாடுகள் எப்போது தளர்த்தப்படும்?

குயின்ஸ்லாந்து மாநிலத்தில் தடுப்பூசியை முழுமையாகப் போட்டுக் கொண்டவர்களுக்குக் கட்டுப்பாடுகள் சில தளர்த்தப்பட்டுள்ளன. குயின்ஸ்லாந்து மாநிலத்தில் தடுப்பூசியை முழுமையாகப் போட்டுக் கொண்டவர்கள் எண்ணிக்கை 80 சதவீதத்தை எட்டியவுடன், அல்லது டிசம்பர் 17ஆம் தேதிக்குப் பின்னர் pubகள் மற்றும் பொழுதுபோக்கு அரங்குகளில் கட்டுப்பாடுகள் நீக்கப்படும். தடுப்பூசியை முழுமையாகப் போட்டுக் கொண்டவர்கள் மட்டுமே மருத்துவமனைகளுக்குச் செல்ல முடியும்.  அவசரகால சூழ்நிலைகள் அல்லது உயிர் போகும் சூழலில் மட்டுமே அதற்கு விதிவிலக்கு வழங்கப்படும். தடுப்பூசியின் ஒரு சுற்றைப் போட்டுக் கொண்டவர்கள் எண்ணிக்கை 80 சதவீதத்தை அடைந்த பின்னர், குயின்ஸ்லாந்து மாநிலத்தவர்கள் ...

Read More »

வாழ்க்கை துணையின் கரம் பிடித்தார் கல்வி போராளி மலாலா

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் படிப்பை தொடர்ந்த மலாலா, 2020ம் ஆண்டு தத்துவம், பொருளாதாரம், அரசியல் ஆகிய படிப்புகளில் பட்டம் பெற்றார். பாகிஸ்தானைச் சேர்ந்த மலாலா (24), கடந்த 2012-ம் ஆண்டு பெண் குழந்தைகளின் கல்வி உரிமைக்காக பகிரங்கமாக பேசியதற்காக, தலிபான் பயங்கரவாதிகள் அவர் மீது தாக்குதல் நடத்தினர்.  இதில் தலையில் குண்டு பாய்ந்த நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட மலாலா, பல மாத சிகிச்சைக்கு பிறகு உடல் நலம் தேறினார். பிறகு, தனது குடும்பத்துடன் இங்கிலாந்தில் குடிபெயர்ந்த மலாலா, பெண் குழந்தைகளின் கல்விக்காக தொடர்ந்து குரல் கொடுத்து ...

Read More »

விஜய் – சூர்யா திடீர் சந்திப்பு

சென்னை பெருங்குடியில் அமைந்துள்ள சன் ஸ்டூடியோவில் விஜய் -சூர்யா இருவரும் திடீரென சந்திந்துக் கொண்டனர். நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘பீஸ்ட்’. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் மும்முரமாக நடைபெற்று வருகிறது. சென்னை பெருங்குடியில் அமைந்துள்ள சன் ஸ்டூடியோவில் தற்போது படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. அதே சன் ஸ்டூடியோவில் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் ‘எதற்கும் துணிந்தவன்’ படப்பிடிப்பும் நடைபெற்று வந்தது. இரண்டு படங்களையும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருவதால் இரண்டு படங்களில் ...

Read More »

வசந்த கரன்னாகொடவுக்கு எதிரான மனு நிராகரிப்பு

11 இளைஞர்களைக் கடத்தி கப்பம் கேட்டு காணாமல் ஆக்கியதற்காக முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொடவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையை சட்டமா அதிபர் நீக்கியதற்கு எதிராக காணாமல் போன வர்களின் பெற்றோர் உள்ளிட்ட இளைஞர்கள் குழு தாக்கல் செய்த மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (10) நிராகரித்துள்ளது. வழக்குத் தொடரவும் வாபஸ் பெறவும் சட்ட மா அதிபருக்கு அதிகாரம் உள்ளது என்று நீதிமன்றம் கூறியுள்ளது. மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளான சோபித ராஜகருணா மற்றும் தம்மிக்க கணேபொல ஆகியோர் அடங்கிய குழுவினால் இந்தத் தீர்ப்பு ...

Read More »