குமரன்

வடகொரியாவில் யாருக்கும் கொரோனா பரவவில்லை – அதிபர் கிம் அறிவிப்பு

வடகொரியாவில் யாருக்கும் கொரோனா தொற்று பரவவில்லை என அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன் அறிவித்துள்ளார். சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகின் பல்வேறு நாடுகளில் பரவியுள்ளது. இந்த கொடிய வைரஸ் இதுவரை 3 கோடிக்கும் அதிகமானோருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தாக்குதலுக்கு 10 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரசை கட்டுப்படுத்த முடியாமல் வல்லரசு நாடுகளும் தடுமாறி வரும் நிலையில், தங்கள் நாட்டில் யாருக்கும் கொரோனா தொற்று பரவவில்லை என ...

Read More »

பாவனாவின் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் கிண்டல்!

தமிழ், தெலுங்கு, மலையாளம் படங்களில் நடித்து பிரபலமான நடிகை பாவனாவின் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் கிண்டல் செய்து வருகிறார்கள். கேரளாவைச் சேர்ந்த நடிகை பாவனா, தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம் மொழிகளிலும் நடித்துள்ளார். கன்னடப் படங்களில் நடித்தபோது, கன்னடத் தயாரிப்பாளரும், கேரளாவைச் சேர்ந்த தொழில் அதிபருமான நவீனைக் காதலித்தார். ஐந்து ஆண்டு காதலுக்கு பின்னர் நவீன், பாவனா கடந்த 2018ம் ஆண்டு திருணம் செய்துக்கொண்டனர். திருமணத்திற்கு பிறகும் படங்களில் நடிக்க விருப்பம் கொண்டுள்ள பாவனா தொடர்ந்து சரியான படவாய்ப்புகள் கிடைக்காததால் அவ்வப்போது போட்டோ ஷூட் ...

Read More »

ஆஸ்திரேலியாவின் பழமையான சிட்னி பல்கலைக்கழகம் தொடங்கப்பட்ட நாள் (அக்.11, 1850)

சிட்னி பல்கலைக் கழகம் ஆஸ்திரேலியாவிலுள்ள பல்கலைக்கழகங்களுள் ஒன்றாகும். நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் சிட்னி நகரில் அமைந்துள்ளது. 1850-ஆம் ஆண்டு இதே தேதியில் இந்த பல்கலைக் கழகம் தொடங்கப்பட்டது. ஆஸ்திரேலியாவின் மிகவும் பழமையான பல்கலைக்கழகம் இதுதான். இந்த பல்கலைக் கழகத்தில் 45 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஆராய்ச்சி படிப்பு படித்து வருகின்றனர். ஆஸ்திரேலியாவின் பெரிய பல்கலைக் கழகங்களுள் இது இரண்டாவது இடத்தைப் பெறுகிறது.  

Read More »

மன்னாரில் இரண்டு கிராமங்கள் முற்றாக முடக்கப்பட்டன

கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக மன்னாரில் இரண்டு கிராமங்களை அதிகாரிகள் முடக்கியுள்ளனர். பள்ளித்தோட்டம் பெரியகடை கிராமங்களை உடனடியாக முடக்குவதாக இராணுவத்தினர் அறிவித்துள்ளனர்.

Read More »

முகக்கவசம் அணியாவிட்டால் 10 ஆயிரம் ரூபா தண்டம் அல்லது 6 மாத சிறை

தனிமைப்படுத்தல் சட்டங்களை அரசாங்கம் விரைவில் வர்த்தமானி மூலமாக வெளியிடவுள்ளது. அதன்படி முகக்கவசம் அணியாவிட்டால், 10,000 ரூபா வரையிலான அபராதம், அல்லது ஆறு மாத சிறைத் தண்டனை வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகின்றது. இதனை உள்ளடக்கிய அரசாங்கத்தின் சிஷேட வர்த்தமானி இரண்டு தினங்களுக்குள் வெளியிடப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Read More »

20 ஆவது திருத்தமும் சிங்கள மக்களின் ஜனநாயகமும்

கடந்த ஞாயிற்றுக்கிழமை யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் தமிழரசுக்கட்சி 20ஆவது திருத்தத்தை குறித்து ஓர் ஆய்வு அரங்கை ஒழுங்குபடுத்தியது. அதில் பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் ஒரு விடயத்தைக் கூறினார். அண்மையில் திருகோணமலைக்கு தான் சென்றிருந்த வேளை கடற்கரையில் உலாவச் சென்றதாகவும் அப்போது அங்கு வந்திருந்த சிங்கள உல்லாசப் பயணிகள் சிலர் தன்னை அடையாளம் கண்டு விட்டதாகவும் 20ஆவது திருத்தத்துக்கு எதிராக நீங்கள் சட்ட ரீதியாக போராட வேண்டும் என்று அவர்கள் தன்னை கேட்டுக் கொண்டதாகவும் கூறியுள்ளார். நீங்கள்தானே இந்த அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டு வந்தீர்கள் ...

Read More »

இந்தியாவின் வடபகுதி எல்லையில் 60,000 சீன படையினர்

இந்தியாவின் வடபகுதி எல்லையில் சீனா தனது படையினர் 60,000 பேரை நிலை கொள்ளச் செய்துள்ளது என அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக்பொம்பியோ தெரிவித்துள்ளார். சில நாட்களுக்கு முன்னர் ஜப்பானில் இந்திய அவுஸ்திரேலிய ஜப்பான் வெளிவிவகார அமைச்சர்களின் கூட்டத்தில் கலந்துகொண்டுவிட்டு அமெரிக்கதிரும்பியுள்ளமைக்பொம்பியோ தொலைக்காட்சி பேட்டியில் இதனைதெரிவித்துள்ளார். இந்தியர்கள் தங்கள் வடபகுதி எல்லையில் 60,000 சீன படையினரை பார்க்கின்றனர் என மைக்பொம்பியோ குறிப்பிட்டுள்ளார். நான் இந்திய அவுஸ்திரேலியஜப்பான்வெளிவிவகார அமைச்சர்களை சந்தித்தேன் இந்த குழு குவாட் என அழைக்கப்படுகின்றது என மைக்பொம்பியோ குறிப்பிட்டுள்ளார். இந்த குழுவில் நான்கு பெரிய ...

Read More »

வெளிநாட்டில் சிக்குண்டுள்ள இலங்கையர்களை அழைத்து வருவதில் தனியார் துறையின் தலையீடு காரணமாக பல மோசடிகள்!

வெளிநாடுகளில் சிக்குண்டுள்ள இலங்கையர்களை அழைத்து வரும் நடவடிக்கைகளில் தனியார் துறையின் தலையீட்டை நிறுத்துவதற்கு ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச தீர்மானித்துள்ளார்.   தனியார் துறையினரின் ஈடுபாட்டுடன் முன்னெடுக்கப்பட்ட வெளிநாட்டில் சிக்குண்டுள்ள இலங்கையர்களை அழைத்துவரும் நடவடிக்கைகளின் போது பொதுவான பாதுகாப்பு நடவடிக்கைகள் பின்பற்றப்படவில்லை எனவும் நிதிமோசடி இடம்பெற்றுள்ளதாகவும்புலனாய்வு பிரிவினர் தெரிவித்துள்ளதை தொடர்ந்தே ஜனாதிபதி இந்த முடிவை எடுத்துள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.   வெளிநாட்டில் சிக்குண்டுள்ள இலங்கையர்களை சுகாதார விதிமுறைகளை பின்பற்றியே அழைத்துவரவேண்டும் என்றபோதிலும் தனிமைப்படுத்தல் விதிமுறைகள் அலட்சியம் செய்யப்பட்டுள்ளன என புலனாய்வு துறையினர் ஜனாதிபதிக்கு தெரியப்படுத்தியுள்ளனர். ...

Read More »

கூட்டமைப்பின் பேச்சாளரை ரெலோ, புளொட் தனியாக அறிவிக்கப்போகின்றனவா?

“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் பதவியை ‘ரெலோ’வுக்கு தரப்போவதில்லை என்பதில் தமிழரசுக் கட்சி பிடிவாதமாக நின்றால், ‘புளொட்’ மற்றும் இணைந்து செயற்படக்கூடிய வேறு கட்சிகளுடன் சேர்ந்து கூட்டமைப்பாக புதிய பேச்சாளர் ஒருவரைத் தெரிவு செய்து நாம் தொடர்ந்து கூட்டமைப்பாகப் பயணிப்போம்” என ரெலோ உறுதியாகத் தெரிவித்திருக்கின்றது. அதற்குத் தேவையான பாராளுமன்றப் பலமும், ஒருங்கிணைப் புகுக்குழுவின் ஆதரவும் தமக்கு இருப்பதாகவும் ரெரோ கூறுகின்றது. கூட்டமைப்பின் பேச்சாளர் பதவியில் தொடரும், இழுபறிநிலை மற்றும் பாராளுமன்றக்குழுக் கூட்டத்தில் நடைபெற்றது என்ன? இது தொடர்பில் ரெலோவின் அணுகுமுறை என்ன என்பது ...

Read More »

’20 தொடர்பான தீர்ப்பை இம்மாதம் 20இல் அறிவிப்பேன்’

20ஆவது திருத்தச் சட்டமூலத்துக்கு எதிராக உயர்நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுக்கள் தொடர்பான உயர்நீதிமன்ற தீர்மானம் தனக்குக் கிடைத்திருப்பதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அறிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் உள்ள சபாநயாகர் அலுவலகத்துக்கு உயர்நீதிமன்றத்தின் தீர்மானம் கிடைத்திருப்பதாகவும்,  திங்கட்கிழமை அலுவலகத்துக்குச் சென்று அதனை திறந்துப் பார்ப்பதாகவும் அவர் ​மேலும் தெரிவித்துள்ளார். 20ஆவது திருத்தச் சட்டமூலம் தொடர்பான உயர்நீதிமன்றத் தீர்ப்பு இம்மாதம் 20ஆம் திகதி நாடாளுமன்றத்துக்கு அறிவிக்கப்படுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Read More »