இந்தியாவின் வடபகுதி எல்லையில் 60,000 சீன படையினர்

இந்தியாவின் வடபகுதி எல்லையில் சீனா தனது படையினர் 60,000 பேரை நிலை கொள்ளச் செய்துள்ளது என அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக்பொம்பியோ தெரிவித்துள்ளார்.

சில நாட்களுக்கு முன்னர் ஜப்பானில் இந்திய அவுஸ்திரேலிய ஜப்பான் வெளிவிவகார அமைச்சர்களின் கூட்டத்தில் கலந்துகொண்டுவிட்டு அமெரிக்கதிரும்பியுள்ளமைக்பொம்பியோ தொலைக்காட்சி பேட்டியில் இதனைதெரிவித்துள்ளார்.

இந்தியர்கள் தங்கள் வடபகுதி எல்லையில் 60,000 சீன படையினரை பார்க்கின்றனர் என மைக்பொம்பியோ குறிப்பிட்டுள்ளார்.

நான் இந்திய அவுஸ்திரேலியஜப்பான்வெளிவிவகார அமைச்சர்களை சந்தித்தேன் இந்த குழு குவாட் என அழைக்கப்படுகின்றது என மைக்பொம்பியோ குறிப்பிட்டுள்ளார்.

இந்த குழுவில் நான்கு பெரிய ஜனநாயக நாடுகள்,நான்கு பெரிய பொருளாதார நாடுகள் இடம்பெற்றுள்ளன என தெரிவித்துள்ள மைக்பொம்பியோ இந்த நாடுகள் அனைத்தும் சீன கம்யுனிஸ்ட் கட்சி திணி;க்க முயலும் ஆபத்தை எதிர்கொண்டுள்ளன எனவும் தெரிவித்துள்ளார்.
அவர்களின் நாடுகளிலும்இது காணப்படுகின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.