Home / குமரன் (page 2)

குமரன்

சீரடி சாய்பாபா வேடத்தில் நடிக்க 60 நாட்கள் விரதம் இருந்த நடிகர்

‘சீரடி சாய்பாபா மகிமை’ படத்தை இயக்கியுள்ள பிரியா பாலு, ஏற்கனவே 60-க்கும் மேற்பட்ட குறும்படங்களையும், டெலிபிலிம்களையும் இயக்கி உள்ளார். சீரடி சாய்பாபாவின் அற்புதங்களை சுவாரஸ்யமான திரைக்கதையாக்கி திரைப்படமாக எடுக்கின்றனர். பிரியா பாலு இயக்கும் இந்த படத்துக்கு, ‘சீரடி சாய்பாபா மகிமை’ என்று பெயர் சூட்டி இருக்கிறார்கள். சாய்பாபாவாக ரவிக்குமார் நடிக்கிறார். இவர், ‘என் நெஞ்சை தொட்டாயே, ’ ‘திகிலோடு விளையாடு’ ஆகிய படங்களில் நடித்தவர். பல குறும்படங்கள் மற்றும் தொலைக்காட்சி ...

Read More »

பல்கலைக்கழகங்களை மீளத் திறப்பது குறித்த கலந்துரையாடல் இன்று!

பல்கலைக்கழகங்களை மீளத் திறப்பது தொடர்பிலான விசேட கலந்துரையாடல் இன்று நடைபெறவுள்ளது.இக்கலந்துரையாடலானது பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவில் நடைபெறவுள்ளது. நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களும் இக்கலந்துரையாடலில் பங்கேற்கவுள்ளனர். இந்தச் சந்திப்பின் போது பல்கலைக்கழக மாணவர்களுக்கு தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை குறித்தும் கலந்துரையாடப்படவுள்ளது. ஒவ்வொரு பல்கலைக்கழகத்திலும் தடுப்பூசியை பெற்றுக்கொண்ட மாணவர்கள் தொடர்பிலான அறிக்கைகளும் இதன்போது பரிசீலிக்கப்பட உள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதற்கமைய பல்கலைக்கழகங்களின் கல்வி நடவடிக்கைகள் அடுத்த மாதம் முதல் ...

Read More »

விடுதலைப் புலிகளின் 14 முக்கியஸ்தர்களின் பிள்ளைகளிற்கு என்ன நடந்தது?

முள்ளிவாய்க்கால் இறுதிப் போரில் படையினரின் கட்டுப்பாட்டுப் பகுதியில் வைத்து விடுதலைப் புலிகளின் சிரேஷ்ட தலைவர்களின் பிள்ளைகள் பலர் பலவந்தாகக் காணாமலாக்கப்பட்டதை பாராளுமன்றில் நேற்று சுட்டிக்காட்டிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன், இவ்வாறு காணாமலாக்கப்பட்ட 14 மூத்த உறுப்பினர்களின் பிள்ளைகள் தொடர்பான விபரங்களை சபை ஆவணப்படுத்தினார். பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை, இளந்தவறாளர்கள் (பயிற்சிப் பாடசாலைகள்) (திருத்தச்) சட்டமூலம், தண்டனைச் சட்டக்கோவை (திருத்தச்) சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே ...

Read More »

13ஆவது திருத்தமும் புதிய யாப்பும்!

ஒரு புதிய யாப்பை இந்த ஆண்டின் இறுதிக்குள் கொண்டு வரப்போவதாக ஜனாதிபதி அண்மையில் தெரிவித்திருக்கிறார். இலங்கை ராணுவத்தின் 72வது ஆண்டு நிறைவையொட்டி அனுராதபுரத்தில் உள்ள ஒரு படை முகாமில் நடந்த ஒரு வைபவத்தில் அவர் இவ்வாறு தெரிவித்திருக்கிறார்.இது அரசாங்கம் அதன் யாப்புருவாக்க முயற்சியில் மெய்யாகவே ஈடுபடுகிறதா என்ற கேள்வியை மேலும் வலிமைப்பப்படுத்தியிருக்கிறது. யாப்புருவாக்கத்திற்கான நிபுணர் குழுவை சேர்ந்த ஒருவர் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரிடம் தெரிவித்த தகவல்களின் அடிப்படையில் ஒரு ...

Read More »

விக்டோரியாவில் 70 சதவீதமானோர் தடுப்பூசி முழுமையாகப் போட்டுவிட்டார்கள்

விக்டோரியா விக்டோரிய மாநிலத்தில் சமூகப் பரவல் மூலம், புதிதாக 2,332 பேருக்குத் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.  தொற்றினால் மேலும் 12 பேர் உயிரிழந்துள்ளார்கள். மெல்பன் நகரில் ஆறாவது தடவையாக நடைமுறைப்படுத்தப்பட்ட முடக்கநிலை கட்டுப்பாடுகள், இன்றிரவு 11:59ற்கு நிறைவுக்கு வருகின்றன. வெளி நாடுகளிலிருந்து மாநிலம் வருவோர் வீட்டிலேயே தனிமைப்படுத்தப் பட்டிருக்கலாம் என்ற செய்முறை அடுத்த வாரம் பரீட்சிக்கப்படத் தொடங்குகிறது. விக்டோரியா மாநிலத்தில் வாழும் 16 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையவர்களில் ...

Read More »

மேடையில் ஏறி போப் ஆண்டவரிடம் தொப்பியை கேட்ட சிறுவன்

என்ன செய்தாலும் இந்தச் சிறுவனை சமாதானம் செய்ய முடியாது என புரிந்துக்கொண்ட போப் ஆண்டவர், தனது தொப்பியை சிறுவனிடம் கொடுத்தார். வாட்டிகன் நகரில் போப் ஆண்டவர் பங்கேற்ற நிகழ்ச்சி ஒன்று நேற்று நடைபெற்றது. ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற இந்த நிகழ்ச்சியின்போது, 10 வயது சிறுவன் ஒருவன் மேடையில் ஏறி போப் ஆண்டவரின் அருகில் சென்றான். இருக்கையில் அமர்ந்திருந்த போப் ஆண்டவர் சிறுவனிடம் அன்பாகப் பேசினார். அப்போது அவரது கைகளை பிடித்துக்கொண்டு அந்த ...

Read More »

நாயகியாக களமிறங்கும் கோவை சரளா

பல படங்களில் காமெடி வேடம் மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து அசத்திய கோவை சரளா, தற்போது நாயகியாக களமிறங்க இருக்கிறார். தமிழ் சினிமாவில் கடந்த 40 ஆண்டுகளாக காமெடி மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருபவர் கோவை சரளா. ‘வெள்ளி ரதம்’ என்ற படத்தின் மூலம் அறிமுகமான இவர், ‘முந்தானை முடிச்சு’ ‘வைதேகி காத்திருந்தாள்’ உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் கவுண்டமணி, செந்தில், வடிவேலு உள்ளிட்ட ...

Read More »

உயிர்த்த ஞாயிறு தாக்குதலை அதிகாரத்திற்கு வருவதற்காக பயன்படுத்தியவர்களால் நீண்டநாள் அதிகாரத்தில் இருக்க முடியாது

உயிர்த்தஞாயிறு தாக்குதலால் ஏற்பட்ட பெரும் அழிவை அதிகாரத்தை கைப்பற்றுவதற்காக பயன்படுத்தியவர்கள் நீண்ட காலம் ஆட்சியில் நீடிக்க மாட்டார்கள் என கர்தினால் மல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார். உயிர்த்தஞாயிறு தாக்குதல் இடம்பெற்று 30 மாதங்களாவதை குறிக்கும் விதத்தில் இடம்பெற்ற விசேட ஆராதனையில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்துள்ளார். அது சாபக்கேடாக மாறியுள்ளது,எவரும் மகிழ்ச்சியாக வாழமுடியாத நிலை காணப்படுகின்றது பலர் வாழ்வதற்காக உழைக்க முடியாத நிலை காணப்படுகின்றதுஎன அவர் தெரிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறு ...

Read More »

மட்டக்களப்பில் தமிழர்கள் வாழக்கூடாது என்பதற்காக திட்டமிட்ட குடியேற்றங்கள்

மட்டக்களப்பு பொலன்னறுவை எல்லை கிராமமான புனானை காரமுனை பகுதியில் திட்டமிட்ட சிங்கள குடியேற்றத்தை செய்வது என்பது மட்டக்களப்பில் தமிழ் மக்கள் வாழக்கூடாது என்ற ஜனாதிபதி கோட்டபாய ராஜபஷவின் தலைமையில் செயற்படும் பௌத்த ஆதிக்கத்தின் வெளிப்பாடாகும். எனவே இந்த சிங்கள குடியேற்ற நடவடிக்கையை வன்மையாக கண்டிப்பதாக கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினரும் ஈ.பிஇஆர்.எல்.எப் பத்மநாபா மன்ற தலைவருமான இரா. துரைரெட்ணம் தெரிவித்தார். மட்டக்களப்பு வாவிக்கரையிலுள்ள ஈ.பிஇஆர்.எல்.எப் பத்மநாபா மன்ற காரியலத்தில் ...

Read More »

பழைய குருடி கதவை திறவடி

குறித்த செய்திகளே பரவலாக பேசப்பட்டு வருகின்றன. இன்றைய காலத்தில் இலங்கையானது பெரும் பொருளாதார சிக்கலை எதிர்நோக்கி வருகின்றது. இதனால் நாட்டில் தொழிலாளி முதல் முதலாளிகள் வரை அனைவரது வாழ்க்கையிலும் பொருளாதார சிக்கல் பாரிய தாக்கத்தினை ஏற்படுத்தி வருகின்றது. திடீரென ஏறிய விலைவாசிகள் ஒட்டுமொத்த நாட்டு மக்களின் வாழ்க்கைச் செலவுகளை புரட்டிப் போட்டுவிட்டது. இப் பெருந்தொற்றுக்காலத்தில் சிறு சிறு கூலி தொழில்களை செய்து அன்றாடம் தன் வாழ்க்கைச் செலவுகளை சமாளித்து வருகின்ற ...

Read More »