குமரன்

மாரடோனாவின் மரணத்தில் மர்மம்?

ஆர்ஜென்டினாவைச் சேர்ந்த  பிரபல  காற்பந்தாட்ட  வீரரா மாரடேனா (Maradona )கடந்த 25ஆம் திகதி மாரடைப்பால் காலமானார். இந்நிலையில் மாரடோனாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாகக் கூறி சில வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர். இதையடுத்து மாரடோனாவின் மரணம் குறித்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் மாரடோனாவின் தனி மருத்துவரின் சொத்து விபரம் குறித்து கணக்கெடுக்கவும், வீடு மற்றும் அலுவலகங்களில் சோதனை நடத்தவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More »

அஜித் டோவாலின் கொழும்பு விஜயத்தின் பிரதான நோக்கம் என்ன?

இலங்கையில் இந்தோ — பசுபிக் மூலோபாயத்தை மேம்படுத்துவதற்கு இந்தியா கடுமையாக முயற்சிக்கிறது. முத்தரப்பு கடல்சார் ஒத்துழைப்பு மகாநாட்டுக்காக கடந்த வெள்ளிக்கிழமை இந்தி தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவால் கொழும்புக்கு மேற்கொண்ட விஜயம் இந்தோ — பசுபிக் ஒத்துழைப்புக்கு இலங்கையை நெருக்கமாக கொண்டுவருவதற்கான நோக்கத்தைக் கொண்டதாகும் என்று இந்தியாவின் பிரபலமான இணையத்தள செய்திச் சேவைகளில் ஒன்றான ‘த பிறின்ற் ‘ கூறியிருக்கிறது. அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பொம்பியோ இலங்கைக்கு வருகைதந்த ஒரு மாத காலத்திற்குள் அஜித் டோவாலின் விஜயம் இடம்பெற்றிருப்பதால் அதற்கு கூடுதல் முக்கியத்துவம் ...

Read More »

பரந்தனில் கார்த்திகை விளக்கேற்றியவர்களுக்கு இராணுவம் அச்சுறுத்தல்

கிளிநொச்சி மாவட்டத்தில் கார்த்திகை விளக்கீட்டுக்கு இராணுவம் இடையூறு ஏற்படுத்தியதுடன் மக்களை அச்சுறுத்தும் வகையிலும் செயற்பட்டுள்ளனர்.   நேற்று மாலை பரந்தன் பகுதியில் கார்த்திகை விளக்கீட்டுக்காகத்தீபம் ஏற்றிய  வயோதிபத் தம்பதி இராணுவத்தினரால் மிரட்டப்பட்டு விளக்குகளும் தூக்கிவீச்சப்பட்டதாக சம்பந்தப்பட்ட வர்கள் தெரிவித்துள்ளனர். வழமைபோல் கார்த்திகை விளக்கீட்டுக்காக வீட்டு முற்றத்தில் விளக்குகள் ஏற்றப்பட்டிருந்த நிலையில் வளவின் உள்ளே வந்த இராணுவத்தினர் விளக்குகளைத் தூக்கி வீசியுள்ளனர். அதன் பின்னர் வயோதிபத் தம்பதியினரைத் துப்பாக்கியால் தாக்கவும் முயன்றுள்ளனர். பரந்தன் இராணுவ முகாமைச் சேர்ந்தவர்களே இராணுவச் சீருடையில் இவ்வாறு அச்சுறுத்தியமையுடன் தாக்க முற்பட்டனர் ...

Read More »

யாழ்.போதனா வைத்தியசாலை பிசிஆர் சான்றிதழை விமான நிலையத்தில் ஏற்க மறுப்பு

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் மேற்கொள்ளும் பிசிஆர் பரிசோதனையின் பெறுபேறு செல்லாது என்றும், கொழும்பு நவலோகாவில் புதிய பரிசோதனை மேற்கொண்டு வருமாறும் விமான நிலையத்தில் பயணிகள் திருப்பி அனுப்பி வைக்கப்படுகின்றனர். வெளிநாடுகளிலிருந்து வந்து நின்றவர்கள் உட்பட வெளிநாடுகளுக்குப் பயணிப்பவர்கள் அனைவரும் விமானம் ஏறுவதற்கு முன்பு 72 மணித்தியாலங்களுக்கு உட்பட்ட நேரத்தில் பெறப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனைச் சான்றிதழை சமர்ப்பித்தே விமானத்தில் பயணிக்கும் நடைமுறை பின்பற்றப்படுகின்றது. இந்த நடைமுறைக்கு அமைய ஆரம்பத்தில் வடக்கிலிருந்து பயணிப்பவர்கள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் பிசிஆர் பரிசோதனை மேற்கொண்டசான்றிதழுடன் சென்ற வேளை விமான நிலையத்தில் ...

Read More »

பாலியல் வன்புணர்வு: தென் ஆப்பிரிக்கரின் ஆஸ்திரேலிய குடியுரிமை பறிப்பு

ஆஸ்திரேலியாவில் இரண்டு பெண்களை பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கிய விவகாரத்தில் 9 ஆண்டுகளாக சிறையில் வைக்கப்பட்டிருந்த தென் ஆப்பிரிக்கர் ஒருவரின் ஆஸ்தரேலியாவின் குடியுரிமை பறிக்கப்பட்டுள்ளது. Robin Gerald Dyers எனும் அறியப்படும் அந்நபருக்கு 11 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டிருந்த நிலையில் 9 ஆண்டுகள் சிறைக்கு பிறகு அண்மையில் பரோல் வழங்கப்பட்டிருக்கிறது. இதையடுத்து உடனடியாக குடிவரவுத் தடுப்பு முகாமிற்கு அனுப்பப்பட்ட இந்நபர், விரைவில் தென் ஆப்பிரிக்காவுக்கு நாடுகடத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது. இதுபோன்று, ஆஸ்திரேலியாவில் குற்றவாளிகளாக கண்டறியப்படும் வெளிநாட்டவர்கள், குடியுரிமைப் பெற்ற போதிலும் அவர்களின் குடியுரிமை பறிக்கும் நடவடிக்கையை ஆஸ்திரேலிய ...

Read More »

நீதிமன்றத்துக்கு வந்த பிட்டு

“யுத்த காலங்களில் பிட்டும் வடையும் ரொட்டியும் தோசையும் சாப்பிட்ட தமிழ் மக்கள் இப்பொழுது பீட்சா சாப்பிடும் ஒரு நிலைமை ஏற்பட்டிருக்கிறது” என்ற தொனிப்பட யாழ் மாவட்ட தலைமையக பொலிஸ் பொறுப்பதிகாரியான பிரசாத் பெர்னாண்டோ யாழ் மேல் நீதிமன்றத்தில் கருத்துக் கூறியுள்ளார். மாவீரர் நாள் தொடர்பான ஒரு வழக்கில் அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார் அவர் அவ்வாறு கூறியது தவறு என்று சுமந்திரன் ஆட்சேபனை தெரிவித்ததையடுத்து நீதிமன்றம் வழக்கோடு சம்பந்தப்பட்ட விடயங்களை மட்டும் நீதிமன்றத்தில் கதைக்குமாறு பிரசாத் பெர்னாண்டோவிடம் அறிவுறுத்தி இருக்கிறது. அதன்பின் கடந்த புதன்கிழமை நடந்த ...

Read More »

கிரிக்கெட் போட்டி ரத்து அச்சுறுத்தல்: நியூசிலாந்துக்கு எதிராக அக்தர் ஆவேசம்

பாகிஸ்தான் வீரர் கொரோனா தடுப்பு வழிகாட்டு நடைமுறைகளை கடைபிடிக்காவிடில் சொந்த நாடு திருப்பி அனுப்பப் படுவார்கள் என்று நியூசிலாந்து தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று 20 ஓவர் போட்டிகள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளது. முதல் 20 ஓவர் போட்டி வருகிற டிசம்பர் 18-ந்தேதி நடைபெறுகிறது. இதற்காக நியூசிலாந்து சென்றுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணியினர் அந்நாட்டு கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளின்படி, 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவர். நியூசிலாந்தில் ஓட்டல் ஒன்றில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ள பாகிஸ்தான் அணி வீரர்களுக்கு 3-வது ...

Read More »

ஆஸ்திரேலியாவுக்கு பதிலடி கொடுக்குமா இந்தியா?

இந்தியா- ஆஸ்திரேலியா மோதும் 2-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி இன்று நடக்கிறது. இந்தியா- ஆஸ்திரேலியா மோதும் 2-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி இன்று நடக்கிறது. முந்தைய தோல்விக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய அணி எழுச்சி பெறுமா? என்று ரசிகர்கள் ஆவல் கொண்டுள்ளனர். ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. சிட்னியில் நடந்த முதலாவது ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 66 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற ...

Read More »

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அனைத்து போட்டிகளிலும் இந்தியா தோல்வி அடையும்

விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் அனைத்து போட்டிகளிலும் தோல்வி அடையும் என மைக்கேல் வாகன் கணிப்பு வெளியிட்டு உள்ளார். ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 ஒரு நாள், மூன்று 20 ஓவர் மற்றும் 4 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்கிறது. முதலில், ஒரு நாள் தொடர் நடத்தப்படுகிறது. இதன்படி இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி துறைமுக நகரான சிட்னியில் நேற்று நடைபெற்றது.  இதில், டாஸ் வென்று ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் ...

Read More »

தனுஷை தலைவா என்று அழைத்த பிரபல நடிகை

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் தனுசை பிரபல நடிகை தலைவா என்று அழைத்து வருகிறார். தனுஷ் தற்போது பாலிவுட் திரைப்படமான ’அத்ராங்கே’ என்ற படத்தில் நடித்து வருகிறார். அக்ஷய்குமார் முக்கிய வேடத்தில் நடிக்கும் இந்தப் படத்தில் தனுஷ் மற்றும் சாரா அலி கான் ஆகிய இருவரும் ஜோடியாக நடித்து வருகின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது டெல்லியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தனுஷ் மற்றும் சாரா அலிகான் ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும் வீடியோ ஒன்றை சாரா அலிகான் தன்னுடைய சமூக ...

Read More »