தனுஷ் தற்போது பாலிவுட் திரைப்படமான ’அத்ராங்கே’ என்ற படத்தில் நடித்து வருகிறார். அக்ஷய்குமார் முக்கிய வேடத்தில் நடிக்கும் இந்தப் படத்தில் தனுஷ் மற்றும் சாரா அலி கான் ஆகிய இருவரும் ஜோடியாக நடித்து வருகின்றனர்.
இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது டெல்லியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தனுஷ் மற்றும் சாரா அலிகான் ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும் வீடியோ ஒன்றை சாரா அலிகான் தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இந்த பதிவில் அவர் ’தலைவா’ தனுஷுடன் ஜிம்மில் ஒரு பயிற்சி’ என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வீடியோவின் பின்னணியில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’பேட்ட’ படத்தில் இடம்பெற்ற ’மரணம் மாஸ்ஸூ மரணம்’ என்ற பாடலின் பின்னணி ஒலிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Eelamurasu Australia Online News Portal