பாலியல் வன்புணர்வு: தென் ஆப்பிரிக்கரின் ஆஸ்திரேலிய குடியுரிமை பறிப்பு

ஆஸ்திரேலியாவில் இரண்டு பெண்களை பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கிய விவகாரத்தில் 9 ஆண்டுகளாக சிறையில் வைக்கப்பட்டிருந்த தென் ஆப்பிரிக்கர் ஒருவரின் ஆஸ்தரேலியாவின் குடியுரிமை பறிக்கப்பட்டுள்ளது.

Robin Gerald Dyers எனும் அறியப்படும் அந்நபருக்கு 11 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டிருந்த நிலையில் 9 ஆண்டுகள் சிறைக்கு பிறகு அண்மையில் பரோல் வழங்கப்பட்டிருக்கிறது. இதையடுத்து உடனடியாக குடிவரவுத் தடுப்பு முகாமிற்கு அனுப்பப்பட்ட இந்நபர், விரைவில் தென் ஆப்பிரிக்காவுக்கு நாடுகடத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது.

இதுபோன்று, ஆஸ்திரேலியாவில் குற்றவாளிகளாக கண்டறியப்படும் வெளிநாட்டவர்கள், குடியுரிமைப் பெற்ற போதிலும் அவர்களின் குடியுரிமை பறிக்கும் நடவடிக்கையை ஆஸ்திரேலிய அரசு மேற்கொள்கின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.