குமரன்

யாழ். திருமறைக் கலாமன்றத்தின் நிறுவுனர் கலாநிதி நீ. மரியசேவியர் அடிகளார்

யாழ். திருமறைக் கலாமன்றத்தின் நிறுவுனர் கலாநிதி நீ. மரியசேவியர் அடிகளார் இறைபதமடைந்தார். அவருக்கு வயது 82 இளவாலையைச் சேர்ந்த அவர் ஆரம்பக் கல்வியை இளவாலை றோமன் கத்தோலிக்கப் பாடசாலையிலும் அதன் பின்னர் சென் ஹென்றிஸ் கல்லூரியிலும் கற்றார். இவர் தன் வாழ்வைக் குருத்துவப் பணியில் அர்ப்பணிக்கும் பொருட்டு 1952 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் மருதனார் குருமடத்தில் சேர்ந்து சென் பற்றிக்ஸ் கல்லூரியில் தனது கல்வியைத் தொடர்ந்தார். 1956 ஆம் ஆண்டு எஸ்.எஸ்.சி.பரீட்சையில் சித்தியடைந்து, குருத்துவ மேல் நிலைப்படிப்பைக் கண்டி அம்பிட்டிய குருமடத்தில் தொடர்ந்தார். இவர் ...

Read More »

இதுவரைக்கும் இந்த அளவிற்கு வேலை செய்தது இல்லை – செல்வராகவன்

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக இருக்கும் செல்வராகவன், ஆரம்ப பணிகளில் இந்த அளவிற்கு பணியாற்றியதில்லை என்று கூறியிருக்கிறார். தமிழ் சினிமாவில் தனித்துவமான இயக்குநர்களுள் ஒருவர் செல்வராகவன். இவர் தனுஷை வைத்து இயக்கிய காதல் கொண்டேன், புதுப்பேட்டை, மயக்கம் என்ன போன்ற படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன. இவர்கள் இருவரும் தற்போது 10 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் இணைந்து பணியாற்ற உள்ளனர். வி கிரியேசன்ஸ் சார்பில் தாணு தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். ‘நானே வருவேன்’ என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் பர்ஸ்ட் லுக் ...

Read More »

திருமறைக் கலாமன்ற இயக்குநர் மரிய சேவியர் அடிகளார் காலமானார்

திருமறைக் கலாமன்ற இயக்குநர் நீ.மரிய சேவியர் அடிகளார் இன்று(1) காலமானார். இவர் யாழ்ப்பாணத்தில் திருமறைக் கலா மன்றம் என்ற ஒரு கலை அமைப்பை 1965 ஆம் ஆண்டளவில் ஆரபித்தார். 1965 ஆம் ஆண்டு உரும்பிராயில் மரிய சேவியர் அடிகள் பணி செய்த காலத்தில் ‘திருமறைக்கலாமன்றம்’ எனும் பெயருடன் இவ் அரங்க இயக்கம் செயற்படத் தொடங்கியது. உரும்பிராய், சுன்னாகம், மல்லாகம் என ஒன்றிணைந்த கலைஞர்களைக் கொண்டு மரியசேவியர் அடிகள் திருப்பாடல்களின் நாடகங்களை மட்டுமன்றி பல்வேறு விவலிய நாடகங்கள், இலங்கை வானொலிக்கான நாடகங்கள், கூத்துக்கள் எனப் பலவற்றையும் ...

Read More »

அவுஸ்திரேலியாவில் இலங்கை சிறுவனுக்கு நேர்ந்த துயரம்- மன்னிப்புக் கோரிய பள்ளி நிர்வாகம்

தெற்கு அவுஸ்திரேலியாவின் Coober Pedy பகுதியில் பள்ளிச் சிறுவர்களை ஏற்றிச் செல்லும் பேருந்து ஓட்டுநர், இலங்கைப் பின்னணி கொண்ட 5 வயதுச்சிறுவனை உரிய இடத்தில் இறக்கிவிடத் தவறியதுடன் பணிமுடிந்து பேருந்தை ஓரிடத்தில் நிறுத்திவிட்டு சென்றதையடுத்து குறித்த சிறுவன் தனியாக நீண்டதூரம் நடந்துசென்ற சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த ஓட்டுநர் பேருந்தை நிறுத்திவிட்டுச் சென்றபின்னர், நீண்ட நேரம் பேருந்தினுள்ளேயே காத்திருந்த சிறுவன், பேருந்தைவிட்டு இறங்கி தனியாக Stuart நெடுஞ்சாலையை நோக்கி நடக்கத்தொடங்கியிருக்கிறார். புத்தகப்பையையும் சுமந்தபடி சுமார் 1 மணிநேரத்திற்கு மேல் நடந்துசென்ற இச்சிறுவன் அவ்வீதியால் சென்ற பெண்மணி ...

Read More »

மூன்றாவது கொவிட் அலை ஏற்படலாம் – அசேல குணவர்தன

மூன்றாவது கொவிட் அலை ஏற்பட கூடிய  ஆபத்து காணப்பட்டுவதாக  சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குண வர்தன தெரிவித்துள்ளார். சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு பொது மக்களுக்கான சுகாதார வழிகாட்டுதல்கள் இன்றைய தினம் வெளியிடப் படும் என வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.   சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு பொதுமக்களின் நடவடிக்கைகள் மூலம் மூன்றாவது கொவிட் அலை ஏற்படும் அபாயம் இருப்பதாகவும் அவர் இதன்போது தெரிவித்துள்ளார்.

Read More »

மறைந்த ஆயர் தமிழர்கள் சுயநிர்ணய உரிமையோடு வாழ வேண்டுமென்ற அவா கொண்டவர்

முள்ளிவாய்க்காலில் தமிழர்களுக்கு எதிராக இலங்கை இராணுவத்தினரால் இழைக்கப்பட்ட அநீதிகளை சர்வதேச சமூகத்துக்குக் கொண்டு சென்றவர் இராயப்பு ஜோசப் ஆண்டகை என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் அவர்கள் தெரிவித்துள்ளார். மன்னார் மறை மாவட்டத்தின் முன்னாள் ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை இன்று இயற்கை எய்தியுள்ளமை குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் தனது இரங்கல் உரையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், இராயப்பு ஜோசப் ஆண்டகை தமிழர்களின் வரலாறு எனவும் அவரின் இழப்பானது ஒட்டுமொத்த தமிழினத்துக்கும் பேரிழப்பு எனவும் ...

Read More »

ஆஸ்திரேலிய தொடரில் அசத்திய இந்திய கிரிக்கெட் வீரர் வாஷிங்டன் சுந்தருக்கு கார் பரிசு

இந்திய கிரிக்கெட் அணி கடந்த ஜனவரி மாதம் ஆஸ்திரேலிய மண்ணில் நடந்த டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி வரலாறு படைத்தது. இந்திய கிரிக்கெட் அணி கடந்த ஜனவரி மாதம் ஆஸ்திரேலிய மண்ணில் நடந்த டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி வரலாறு படைத்தது. இந்த தொடரில் மூத்த வீரர்கள் பலர் காயத்தால் விலகிய நிலையில் இளம் வீரர்கள் பிரமிப்பூட்டும் வகையில் விளையாடியதுடன், பிரிஸ்பேன் மைதானத்தில் ஆஸ்திரேலியாவின் வீறுநடைக்கும் முடிவு கட்டினர். இந்த டெஸ்ட் தொடரில் அறிமுகமாகி இந்தியாவின் வெற்றியில் முக்கிய ...

Read More »

பிக்பாஸ் ஆரியின் தேர்தல் பிரச்சாரம்

நடிகரும் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமான ஆரி, வரும் சட்ட மன்ற தேர்தலுக்காக பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். தமிழக தேர்தல் ஆணையத்துடன் இணைந்து நடிகரும், சமூக ஆர்வலருமான ஆரி அர்ஜுனன் தேர்தல் பிரச்சாரம் விழிப்புணர்வு காணொளி ஒன்றில் நடித்துள்ளார். இதில் ஓட்டு கேட்டு வரும் அனைவரும் மாஸ்க் அணிந்து வர வேண்டும் என்று கட்சி வேட்பாளர் முதல் தொண்டர்கள் அனைவருக்கும் அறிவுரை கூறுவது போல் இந்த விழிப்புணர்வு காணொளி அமைந்துள்ளது. நாட்டுக்காக ஓட்டு போடுங்க. உங்களுக்காக மாஸ்க் போடுங்க எனும் வாசகத்தோடு வரும் இந்த ...

Read More »

வாழ்க்கையை நினைத்தால் சோகமும் பயமும் வருகிறது – ராதிகா ஆப்தே

பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருக்கும் ராதிகா ஆப்தே, வாழ்க்கை எங்கே சென்று கொண்டிருக்கிறது என்பதை நினைத்தால் சோகமும் பயமும் உருவாகிறது என்று கூறியுள்ளார். ராதிகா ஆப்தே நடிப்பில் ‘தாண்டவ்’ என்ற வெப் சீரிஸ் கடந்த ஜனவரி மாதம் ஒடிடி தளத்தில் வெளியானது. இந்துக் கடவுள்களை தவறாக சித்தரித்து ஒளிபரப்பான இந்த தொடரை தடை செய்யவேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை வைத்து வந்தனர். இந்த விவகாரம் பெரிதாக வெடித்து சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த வெப் சீரிசை உடனடியாக நீக்க வலியுறுத்தி நடிகை கங்கணா உள்ளிட்ட ...

Read More »

தான்சானியா ஜனாதிபதியின் இறுதிச் சடங்கில் நெரிசலில் சிக்கி 45 பேர் பலி

2015ஆம் ஆண்டு முதல் தான்சானியாவின் ஜனாதிபதியாக பதவி வகித்து வந்த ஜான் மெகுபுலி கடந்த 17-ஆம் திகதி காலமானார். தான்சானியா நாட்டு மக்களின் ஆதரவைப் பெற்ற இவரது மரணம் அந்த நாட்டு மக்களை மிகவும் அதிர்ச்சிடைய வைத்தது. அவரது உடல் கடந்த வாரம் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக ஹிக்ரு மைதானத்தில் வைக்கப்பட்டிருந்தது. ஜான் மெகுபுலியின் உடலைக் காண்பதற்காகவும், இறுதி அஞ்சலி செலுத்தவும் லட்சக்கணக்கான மக்கள் குவிந்தனர்.பலர் அந்த மைதானத்தின் சுவர் ஏறிக் குதித்து அங்கு சென்றனர். அப்போது திடீரென சுவர் இடிந்து விழந்ததால் அங்கிருந்தவர்கள் ...

Read More »